![]()
ஜெய் பீம் – விமர்சனம்
பணி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு….அன்று மாலையே இனி அரசு காரை நான் பயன்படுத்தக்கூடாது என சொல்லி, புறநகரில் உள்ள தன் வீட்டுக்கு மின் ரயிலில் போனவர் என்ற ஒரு செய்தி மட்டுமே போதும்,…
இந்தப்படம் அவர் வாழ்க்கையை அடிப்டையாக வைத்து உருவாக்கப்பட படம்.
சந்துரு வேடம் ஏற்ற சூர்யா மிக அற்பதமாக தன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்
திரும்பத் திரும்ப விசாரணைக் காட்சிகள்….சூர்யா விசாரிக்கிறார்….போலீஸ் உயர் அதிகாரி பிரகாஷ்ராஜ் விசாரிக்கிறார்…இப்படியே திருப்பத் திரும்ப ஏராளமான காட்சிகள் இருந்தாலும் துவக்கத்திலிருந்து விறுவிறுப்பாக படம் செல்லக் காரணம்….அற்புதமான திரைக்கதை…..
ஒரு திரைக்கதை சரியாக அமைந்தால் தனக்கான பாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்கிறார் உலகப் புகழ் பெற்ற ஒரு விமர்சகர்.
இதோ..அதற்கான சரியான உதாரணம்..
வழக்கறிஞர் சந்துரு வேடத்தில் என்றென்றும் நினைவில் நிற்பார் சூர்யா. மட்டுமின்றி ராசாக்கண்ணுவின் மனைவியாக வரும் லிஜோமொள் ஜோஸ், காவல் துறை உயர் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், காவலர் சூப்ர்குட் சுப்ரமணி மட்டுமின்றி சின்ன வேடங்களில் வருபவர்களும் முசக்குட்டி, இருளப்பன் ஆகியோரும் நம் உள்ளத்திரையில் பதிந்திருப்பார்கள்.
கண்முன் நடப்பதைப்போன்ற சம்பவங்களாகக் காட்டியிருக்கும் எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப் பெரிய பலம். ஷான் ரோல்டானின் இசை நெஞ்சை வருடுகிறது…
திரையரங்குகளில் பார்த்தால்தான் எழுந்து நின்று கை தட்ட வேண்டும் என்பதில்லை….வீட்டில் பார்க்கும்போதுகூட பலரும் தங்களை அறியாமல் எழுந்து நின்று கை தட்டுவார்கள்.
நல்ல படம் என்பது எப்போதாவதுதான் வரும்….இப்போது வந்திருக்கிறது.
2021ஆம் ஆண்டின் சிறந்த படம் என தேசிய விருது உட்பட பல்வேறு மதிப்புமிகு விருதுகளைப் பெற்போகும் படம் ஜெய்பீம்
மதிப்பெண் 4.75 /5

