Wednesday, October 28

பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

Loading

பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

நிஜத்தில் வாழும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் பெயரில் வந்திருக்கும்
கற்பனைக் கதைதான் பொன் மாணிக்கவேல்.

நீதிபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரது தலையையும் கொலைகாரர்கள்
வெட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர். இந்தக் கொலையை துப்புத் துலக்கி
கொலையாளியைக் கண்டுபிடிக்க, ஏற்கெனவே காவல் துறையில் பணியாற்றி பின்னர்
வேலையை விட்டுச் சென்ற பிரபுதேவா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.
பிரபுதேவா விசாரணை நடக்கும்போதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்படுகிறார்.
அடுத்ததாக தொழிலதிபர் சுரேஷ் மேனன் கொல்லப்பட இருப்பதாக கணிக்கும்
பிரபுதேவா அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வருகிறார். சுரேஷ் மேனன்
கொல்லப்பட்டரா….நீிதிபதியைக் கொன்றது யார் எதற்ககா கொலைகள் நடக்கின்றன
என்ற மர்ம முடிச்சுகள் இறுதிப்பகுதியி்ல் அவிழ்க்கப்படுகின்றன.

படத்தின் டைட்டில் ரோலைத் தாங்கி நடித்திருக்கும் பிரபுதேவாவுக்கு
இருக்கும் இமேஜுக்கும், அவரது உடல் வாகுக்கும் போலீஸ் அதிகாரியாக அவரை
ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணத்தையே நீர்த்துப் போகச்
செய்திருக்கிறார் இயக்குநர் முகில் செல்லப்பன்.
எல்லா போலீஸ் அதிகாரிகளும் முறுக்கு மீசையும், மிடுக்கு நடையுமாகத்தான் இருக்கிறார்களா என்ன.
டீ சாப்பிட்டுக்கொண்டே பேசலாமா என்று கேட்டபடியே கொலை வழக்கை விசாரிக்கும்
போலீஸ் அதிகாரி தமிழ் சினிமாவுக்கு புதுசுதான்.

பிசினஸ் மேன் சுரேஷ் மேனனிடம் பெரும் தொகையை லஞ்சமாகக் கேட்டு பிரபுதேவா
வியாபாரம் பேச ஆரம்பித்ததுமே கதை சூடு பிடிக்கிறது. காரணம் பிரபு தேவாவின்
பிளாஷ் பேக்கும், அவர் வேலையை விட்ட காரணமும் அப்படி.
அடுத்துதடுத்து வரும் எதிர்பாரா திருப்பங்கள் எல்லாம் படத்தின்
விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
பிரபுதேவாவின் மனைவியாக வரும் நிவேதிதா பெத்துராஜ் எப்போது பார்த்தாலும்
சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கு படிக்கும் மாணவியா(க்)கிவிட்டதால் பெரிதாக
சொல்வதற்கில்லை. இருவருக்கும் இடையிலான ‘உதிரா உதிரா’ பாடலுக்கு மனதை வரும்
வகையில் இசையமைத்திருக்கிறார் டி.இமான்.

பிரபுதேவாவுக்கு அடுத்ததாக மனதில் நிற்பது நஸ்ரதுல்லா என்ற பாத்திரத்தை
ஏற்று நடித்திருக்கும் இயக்குநர் மகேந்திரன்தான். கதைக்கே திருப்பு
முனையைத் தரும் பாத்திரத்தை under play செய்து அற்புதமாக
நடித்திருக்கிறார் அமரர் மகேந்திரன்.

கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவும், சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பும்
படத்தொகுப்பும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

இயக்குநர் முகில் செல்லப்பன் முதல் படத்திலேயே பாஸ் மார்க் வாங்கி
விடுகிறார்.

மொத்தத்தில் ஒரு முறை பார்க்கலாம்.