Monday, January 20

அயலான் _ விமர்சனம்

Loading

அயலான் விமர்சனம்

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ளது அயலான்.
ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டிய விசயம்.. படத்தின் ஒரிஜினல் நாயகன், சிஜி காட்சிகள்தான். வியக்க – ரசிக்கவைத்து இருக்கிறார்கள். நிச்சயம் பேசப்படும்.
பேராசை பிடித்த மனிதக்கூட்டம் ஒன்று, மேலும், மேலும் சொத்து சேர்க்க இந்த பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. அவர்களில் ஒருவர் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிடுகிறார். அதாவது 2030ல் பூமியை அழிக்க முயற்சி செய்கிறார்.
இதை, வேற்று கிரகத்தில் இருந்து கவனிக்கும் ஒரு ஏலியன் அறிந்துகொண்டு, பூமிக்கு வந்து அந்த வில்லனிடம் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த ஏலியனை அடைத்து வைத்து வில்லன் ஆராய்ச்சி என்கிற பெயரில் சித்ரவதை செய்கிறான்.
ஹீரோ சிவகார்த்திகேயன் அந்த ஏலியனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
அனைவரையும் நேசிக்கும் அர்ஜூன் என்கிற இளைஞனாக சிவகார்த்திகேயன். வழக்கம்போல தனது ஜாலி நடிப்பால் கவர்கிறார். அதே நேரம், சீரியஸ் காட்சிகளில் உருக வைக்கிறார்.

தனது காதலுக்கு ஏலியனை பயன்படுத்துவது, யோகி பாபு – கருணாகரன் ஆகியோருடன் இணைந்து காமெடி அதகளம் செய்வது என ரசிக்கவைக்கிறார்.
ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் அழகாக வருகிறார். யோகி பாபு, கருணாகரன் ஆகியோரின் காமெடி ரசிக்கவைக்கிறது.
வில்லனாக வரும் ஷரத் மிரட்டுகிறார்.
ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை படத்துக்கு பலம்.
அனைவரும் அறிய வேண்டிய அறிவியல் உண்மையை சுவாரஸ்யம் குன்றாமல் அளித்து இருக்கிறார் இயக்குநர் ரவிக்குமார். குறிப்பாக, சுவை குன்றாத திரைக்கதைக்காக கூடுதலாக பாராட்டலாம்.
பொங்கலுக்கு குடும்பத்தினருடன் ரசித்துப் பார்க்கக் கூடிய படம்.

மதிப்பெண்3.5/5