Sunday, January 19

பைரி _ விமர்சனம்

Loading

பைரி _ விமர்சனம்

CAST:

Syed Majeed – rajalingam

Meghana Ellen – sharon
Viji Sekar – saraswathi (Amma)
John Glady – Amal
Saranya Ravichandran – Chithra
Ramesh Arumugam – ramesh pannaiyar
Vinu Lawrence – suyambu
Anand Kumar – Thirumal (rajalingam Appa)
Karthick Prasanna – villiyam
Francis Kiruba – ravichandran (Chithra Appa)
Rajan – Amal Appa

CREW:

Produced – V.Durai Raj
Written and directer – John Glady
DOP – A.V. Vasantha Kumar
Music director – Arun Raj
Editor – R.S.Sathish Kumar

பைரி _ விமர்சனம்

வெட்டு, குத்து, போதை, கேங்ஸ்டர் கதை என்றே செக்கு மாடாக சுற்றி வரும் தமிழ்ப்படவுலகில் மிக அரிதாகத்தான் மாறுபட்ட கதைக்களத்தில், வேறுபட்ட உள்ளடக்கத்தில் படங்கள் வரும். அத்தகைய படங்களில்ஒன்றுதான் ‘பைரி’.

கொஞ்சம் அசந்தாலும் டாகுமெண்டரி படம்போல் ஆகியிருக்கக்கூடிய படத்தை, வலுவான கதையாலும் பரபரப்பான திரைக்கதையாலும் பார்த்து ரசிக்கும்படியான படத்தை படைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜான் க்ளாடி.

நாகர்கோவில் பகுதியில் தலைமுறை தலைமுறையாக நடக்கும் புறா பந்தயம் குறித்தும்.. அதன் மூலம் நடக்கும் அதிரடி மோதல்கள் குறித்தும் சுவாரஸ்யமாக சொல்லி இருக்கும் இப்படத்தின் கதை வசனத்திற்கும் சொந்தக்காரர் இயக்குநரே.

நாகர்கோவில் அருகே ஒரு சிற்றூரில் வசிக்கும் இளைஞன் லிங்கம். இன்ஜினியரிங் படித்துவிட்டு, அரியர்களுடன் சுற்றி வருகிறான். அதோடு, அந்தப் பகுதியில் பிரபலமான புறா பந்தயத்தில் ஈடுபடுவதற்காக, புறாக்களை வளர்த்து வருகிறான்.

அதே ஏரியாவில் புறா வளர்க்கும் ரவுடி, சுயம்பு. ஒரு முறை புறா பந்தயத்தில் சுயம்பு கோல்மால் செய்ய.. அதைக் கண்டுபிடித்து தட்டிக் கேட்கிறான் லிங்கம். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்படுகிறது.
இதில் லிங்கத்தின் நண்பனை கொடூரமாக தாக்கிவிடுகிறான் சுயம்பு. இதை அறியாமல் வெளியூர் சென்றுவிடுகிறான் லிங்கம்.
அவன் வருவானா.. என்கிற கேள்வி எழுகிறது.
படத்தில் நடித்து இருப்பவர்கள் அனைவருமே புதுமுகங்கள்தான்.
நாயகன் லிங்கமாக நடித்து இருக்கும் சையத் மஜீத், கோபக்கார இளைஞரை கண்முன் நிறுத்துகிறார். அவரது நண்பராக வரும், படத்தின் இயக்குநர் ஜான் கிளாடியும் சிறப்பாக நடித்து உள்ளார். தன்னை தரக்குறைவாக, நாயகனின் தாயார் பேசும்போது, “அப்படி பேசாதீங்க.. அப்படி பேசாதீங்க..” என திரும்பத் திரும்ப நா தழுதழுக்க சொல்லும் காட்சியில் உருக வைக்கிறார்.

நாயகனின் தாயாக வரும் விஜி சேகர், யதார்த்தமான தாயாகவே வாழ்ந்து இருக்கிறார். மகனின் மீதுள்ள அன்பை இத்தனை கோபத்துடனும் வாஞ்சையுடனும் வேறு யாரும் வெளிப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான்.

படத்தில் மிகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். புறா பந்தய காட்சிகளை மிக எதார்த்தமாக.. நம்பும் விதமாக உருவாக்கி இருக்கிறார்கள் வி.எப்.எக்ஸ். சேகர் முருகன்.
ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என அனைத்துமே கச்சிதம். படத்துக்கு பலம்.

புறா பந்தயம் குறித்து இவ்வளவு விரிவாக – அதே நேரம் சுவாரஸ்யமாக – வேறு படம் வந்தது இல்லை. நாமே புறாக்களாய் வானத்தில் பறப்பது போல உள்ளது.
வட்டார வழக்கு, இயல்பான நடிப்பு, எதார்த்தமான காட்சிகள், சிறப்பான திரைக்கதை… என இயக்குநர் வெற்றி பெற்று இருக்கிறார்.

ரசிக்க வைக்கிறது – பைரி.

மதிப்பெண்3.5/5