Thursday, November 26

Blog

தி பெட் _ விமர்சனம்

தி பெட் _ விமர்சனம்

Reviews
தி பெட் _ விமர்சனம் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் நண்பர்கள் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் மது அருந்துவது வழக்கம். இந்த வழக்கம் அலுப்பு தட்டி விட்டதால் ஒரு பெண்ணுடன் வீக் எண்டை கொண்டாட நினைத்து, பாலியல் தொழில் செய்யும் சிருஷ்டி டாங்கேயுடன் ஊட்டிக்கு செல்கின்றனர். நண்பர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மட்டை ஆகிவிட,  ஸ்ரீகாந்தும் சிருஷ்டி டாங்கேயும் அர்த்த ராத்திரியில் ஊட்டியை சுற்றிப் பார்க்க வெளியே செல்கின்றனர். அப்போது ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கேயுடன் தனக்குள்ள காதலைச் சொல்ல, பாலியல் தொழில் செய்யும் தனக்கு அதை ஏற்க தகுதி இல்லை என்று சொல்லி மறுத்து விடுகிறார் சிருஷ்டி. ஸ்ரீகாந்த் உடன் வந்த நண்பர்களில் ஒருவர் மர்மமான முறையில் கொலையுண்டு கிடக்க, சிருஷ்டி டாங்கேயும் காணாமல் போகிறார். ஸ்ரீகாந்தின் நண்பனை கொலை செய்தது யார்? க...
விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணைய தொடர்!

விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘LBW- லவ் பியாண்ட் விக்கெட்’ இணைய தொடர்!

News
ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் நடிகர் விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'LBW- லவ் பியாண்ட் விக்கெட்' இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது! ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸாக உருவாகியுள்ள 'LWB- லவ் பியாண்ட் விக்கெட்' என்ற ஒரிஜினல் வெப் சீரிஸ் மூலமாக நடிகர் விக்ராந்த் ஓடிடியில் அறிமுகமாகிறார். இந்த இணையத்தொடர் ஜனவரி 1, 2026 முதல் பிரத்யேகமாக ஜியோஹாட்ஸ்டாரில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகிறது. இதன் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றதுடன் நடிகர் விக்ராந்த் கரியரில் திருப்புமுனை ஏற்படுத்தும் கிரிக்கெட் பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் அவரைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். 'கனா காணும் காலங்கள்', 'ஹார்ட்பீட்' (சீசன் 1 & 2), 'உப்பு புளி காரம்', 'ஆஃபிஸ்' மற்றும் 'போலீஸ் போலீஸ்' ஆகிய நூற்றுக்கும் அ...
‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக்!

‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக்!

News
யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், ‘கங்கா’ வாக (Ganga) நடிக்கும் நயன்தாராவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது ! யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது. தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோல...
கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் ‘மண்டாடி’!

கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகும் ‘மண்டாடி’!

News
RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ – 2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது! RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக ‘மண்டாடி’ படம் இருக்கும். இதுவரை அவர் நடித்த படங்களில் இதுவே பெரும் பொருட்செலவும், மிகுந்த சவால்களும் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதைக்காக சூரி தனது உடல் தோற்றத்தாலும் மெனக்கெட்டு பல மாற்றங்களை செய்திருக்கிறார். நடிகர் சூரியை முற்றிலும் புதிய பரிமாணத்தில் இந்த படம் காட்டும். இந்த படத்தின் மிக முக்கியமான பலம் சூரியின் அபாரமான தோற்றம் தான். கதையாக கடல் சார்ந்த ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள், ஆபத்தான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். குறிப்பாக, படத...
பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்ற‘ தி பெட்’ படக்குழு!

பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்ற‘ தி பெட்’ படக்குழு!

News
  பத்திரிகையாளர்களை செண்டை மேளத்துடன் வரவேற்று சிறப்புக்காட்சியை திரையிட்ட ‘ தி பெட்’ படக்குழு! *“தி பெட்’ படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க பலர் தயங்கினார்கள்” ; இயக்குநர் மணிபாரதி* *“ஐடி இளைஞர்களை தவறாக காட்டவில்லை” ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி* *ஒருவேளை சம்பள பாக்கி வைத்திருந்தால் நாயகி புரமோஷனுக்கு வந்திருப்பாரோ என்னவோ ? ; ‘தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி ஆதங்கம்* வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’. இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன் கே,.கந்தசாமி, கே.கணேசன் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், ப்ளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா, திவ்யா ஸ்...
ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா!

ஹீரோ அவதாரம் எடுக்கும் ரவி மரியா!

News
அரசியல் காமெடி தர்பாரை நடத்த திட்டமிட்டிருக்கும் ராதா ரவி- ரவி மரியா கூட்டணி! ராம் தேவ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர்களான ராதா ரவி - ரவி மரியா ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழக சட்ட பேரவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறார்கள்? என்ற எதிர்பார்ப்பை விட.. இந்த கூட்டணியின் அரசியல் காமெடி தர்பார் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள். 'பழகிய நாட்கள்', 'மூன்றாம் மனிதன்' ஆகிய திரைப்படங்களை தயாரித்து,இயக்கிய இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ராதா ரவி, ரவி மரியா, , கஞ்சா கருப்பு,இயக்குநர் பேரரசு ,நிழல்கள் ரவி , பழ. கருப்பையா, ந...
ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும் ‘மாஸ்க்’ திரைப்படம்!

ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீம் ஆகும் ‘மாஸ்க்’ திரைப்படம்!

News
கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது ! முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது. மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்தி...
“நிச்சயம் தளபதி விஜய்கூட விரைவில் நடிப்பேன்” – நடிகை சிந்தியா லூர்டே உறுதி!

“நிச்சயம் தளபதி விஜய்கூட விரைவில் நடிப்பேன்” – நடிகை சிந்தியா லூர்டே உறுதி!

News
"விஜயசாந்திக்கு பின் நான் தான் முழுநீள ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறேன்" - சிந்தியா லூர்டே! சிந்தியா ப்ரொடக்‌ஷன் ஹவுஸ் தயாரிப்பில், சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "அனலி". இந்த படத்தின் ட்ரைலர் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் சிந்தியா லூர்டே பேசும்போது, "வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு 'அனலி' என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும். 90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்...
ஹாரர்–காமெடி வகைப் படமாக உருவானதி ‘ராஜா சாப்’!

ஹாரர்–காமெடி வகைப் படமாக உருவானதி ‘ராஜா சாப்’!

News
‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா ! “டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ் ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் ‘தி ராஜா சாப்’...
மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்!

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்!

News
பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” ஃபர்ஸ்ட்லுக் வெளியானது ! கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமா...
CLOSE
CLOSE