![]()
தூள் பேட் இணைய தொடர் _ விமர்சனம்
தூள் பேட் நகரில் உள்ள காவல் நிலையத்தில் ஆயுத பூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடக்கின்றன.
அங்கு பெண் காவலராக பணியாற்றும் பாடினி குமாருக்கு, பின்னர் நடக்கப் போகும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே அவரது மனக்கண்ணில் தெரிகிறது.
இந்த சூழலில் தூள்பேட் காவல் நிலையத்தில் உதவி ஆணையராக புதிதாக பொறுப்பேற்க அஸ்வின் குமார் வருகிறார்.
இந்த நிலையில் மூன்று தலைகள் துண்டிக்கப்பட்டு கொலைகள் நடப்பதாக பாடினி குமார் மணக்கண்ணில் தோன்றுகிறது.
ஊரில் பெரிய ரவுடியான ரத்தினத்தின் தலையை சகோதரர்கள் இருவர் வெட்டி எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரண் அடைகின்றனர்.
மற்றொரு தலை குப்பை மேட்டில் கிடைக்கிறது.
மூன்றாவது தலை சரக்கு ஏற்றிச்செல்லும் மீன் பாடி வண்டி விபத்துக்குள்ளாகும் போது அதிலிருந்து விழுகிறது.
துண்டிக்கப்பட்ட இந்த மூன்று தலைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் உயர் அதிகாரி அஸ்வின் குமார் இந்தக் கொலையாளிகளை கண்டுபிடித்தாரா என்பதை விறுவிறுப்பாக சொல்லும் இணைய தொடர்தான் தூள்பேட்.
முதல் எபிசோடில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பான காட்சி அமைப்புகளுடன் பரபரப்பான தொடராக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் இயக்குனர் ஜெ.ஜெஸ்வினி.
படத்தின் கதைக் கருவை, ஆழமான வரிகள் மூலம் அழகான டைட்டில் பாடல் புரிய வைக்கிறது
தொடரின் விறுவிறுப்புக்கு என்.எஸ்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், அஸ்வத்தின் இசையும் பெருமளவில் துணை நின்று பலம் சேர்த்திருக்கின்றன.
வெள்ளிக்கிழமை தோறும் இரவு 7 மணிக்கு ஆஹா தொலைக்காட்சியில் ஸ்ட்ரீம் ஆகும் தூள் பேட் தொடர் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.
மதிப்பெண் 3.5/5


