Friday, November 27

Blog

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்!

News
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7வது திரைப்படத்தின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! ‛மாயா’, ‘மாநகரம்’, ’மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ’இறுகப்பற்று’, ’பிளாக்’ என தொடர்ச்சியாக 6 வெற்றிப்படங்களுக்குப் பிறகு, பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 7-வது திரைப்படத்தில் கதையின் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். தேவதர்ஷினி, ‛நான் மகான் அல்ல’ புகழ் வினோத் கிஷன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மேலும் சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் திரவியம்.எஸ்.என் இயக்கும் இப்படத்தின் திரைக்கதையை திரவியமுடன் இணைந்து பிரவீன் பாஸ்கர், ஸ்ரீ குமார் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க்க, கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஆரல் ஏ.தங்கம் படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பாளராக மாயபாண்டி பணியாற்றுகி...
தனி ஒருவர் மட்டுமே எடுத்த ‘ஒன் மேன்’ திரைப்படம்!

தனி ஒருவர் மட்டுமே எடுத்த ‘ஒன் மேன்’ திரைப்படம்!

News
வணக்கம். நான் சங்ககிரி ராஜ்குமார்... எளிய மக்களின் வாழ்வியலை அவர்கள் வாழ்வு மேம்பட நாம் சொல்ல வேண்டிய செய்திகளை சினிமாவில் சொல்ல வேண்டும் என்று வெங்காயம் பையாஸ்கோப் படங்களை எடுத்திருந்தேன். இந்நிலையில் பெரிய பொருட்சளவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வியாபார நோக்கமே முதன்மையாக கொண்டிருப்பதால் மக்களுக்கான பிரச்சனையை பேசுகின்ற படங்கள் உலகெங்கும் இன்டிபென்டன்ட் படங்களாகவே இருக்கிறது. அவ்வகையில் இன்டிபென்டென்ட் ஆக படங்களை உருவாக்க தான் நினைக்கும் கருத்துக்களை உலகத்திற்கு கொண்டு செல்ல தனி ஒரு மனிதனால் முடியும் என்று ஒன் மேன் திரைப்படத்தை எடுத்து முடித்திருக்கிறேன். இது கதை உருவாக்கத்தில் தொடங்கி திரைக்கதை, வசனம், மேக்கப் , காஸ்டியூம், கிரேன் ட்ராலி மூவ்மெண்ட், ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங் டப்பிங், 3d மாடலிங், டெக்சரிங், அனிமேஷன், காம்போசிட், கலர் கரெக்ஷன் என ஒரு திரைப்படத்திற்கு தேவை...

‘சர்வம் மாயா’ படத்தின் புதிய போஸ்டர்

News
“சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !! கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு ! நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. “சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப...
குழந்தைகள்_முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்!

குழந்தைகள்_முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய அருண் விஜய்!

News
தனது குடும்பத்துடன் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அருண் விஜய்! சென்னை, 19 நவம்பர் 2025: தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை சமூகப் பொறுப்பு உணர்வோடு அர்த்தமுள்ள வகையில் கொண்டாடினார். அவர், ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தினார். இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி,...
Periyarist Suba. Veerapandiyan Joins the Cast of “Lakshmikanthan Kolai Vazhkku” in a Key Role!

Periyarist Suba. Veerapandiyan Joins the Cast of “Lakshmikanthan Kolai Vazhkku” in a Key Role!

News
Periyarist Suba. Veerapandiyan Joins the Cast of “Lakshmikanthan Kolai Vazhkku” in a Key Role! Director Dayal Padmanabhan, widely acclaimed for his compelling storytelling rooted incidents, is currently directing his next project titled “Lakshmikanthan Kolai Vazhkku.” The film’s shooting is progressing briskly in and around Chennai. In an exciting development, Periyarist Suba. Veerapandiyan has joined the film to play an important character. Speaking about the film, director Dayal Padmanabhan said: “Widely discussed incidents in Tamil Nadu. Our film is being crafted after extensive research on this case. To enhance the authenticity and depth of the narrative, we are delighted to have Suba. Veerapandiyan sir onboard. At his core, he is a historian, and his insights have immensely ...
திரில்லர் சீரிஸ் ‘ரேகை’ நவம்பர் 28 அன்று zee5ல் வெளியாகிறது!

திரில்லர் சீரிஸ் ‘ரேகை’ நவம்பர் 28 அன்று zee5ல் வெளியாகிறது!

News
ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’, நவம்பர் 28-ல் வெளியாகிறது! ~ புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~ இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் ...
சிசு: ரோட் டு ரிவெஞ்ச்

சிசு: ரோட் டு ரிவெஞ்ச்

News
“நான் குறிப்பாக ஸ்டைல், நம்பமுடியாத ஆக்‌ஷன், செட் பீஸ்கள் மற்றும் எளிமையைப் பாராட்டினேன்”: ஸ்டீபன் லாங் சிசுவில் இணைவது பற்றி: ரோட் டு ரிவெஞ்ச்! ஸ்டீபன் லாங் வலிமையான எதிரிகளை சித்தரிப்பது புதியதல்ல, ஆனால் சிசு: ரோட் டு ரிவெஞ்சில் யேகோர் டிராகுனோவாக அவர் சமீபத்தில் வந்தது, அந்த வகையின் மிகவும் உடைக்க முடியாத சக்திகளில் ஒன்றான ஜோர்மா டோமிலாவின் ஆட்டமி கோர்பிக்கு எதிராக அவரை நிறுத்துகிறது. டோன்ட் ப்ரீத் மற்றும் அவதார் படங்களில் புதிதாக வந்த சின்னமான வேடங்களில், லாங் ஜல்மாரி ஹெலண்டரின் உலகின் மிருகத்தனமான அழகுக்கு ஈர்க்கப்பட்டார்: அதன் அகற்றப்பட்ட கதைசொல்லல், உள்ளுறுப்பு செயல் மற்றும் அசைக்க முடியாத பாணி உணர்வு. “முதல் படத்தை நான் மிகவும் ரசித்தேன்,” என்று லாங் கூறுகிறார். “அதன் பாணி, நம்பமுடியாத ஆக்‌ஷன் செட் பீஸ்கள் மற்றும் எளிமையை நான் குறிப்பாகப் பாராட்டினேன். பின்னர் ரோட் டு ரிவெஞ்சின...
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தில் இணைந்த நயன்தாரா!

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் படத்தில் இணைந்த நயன்தாரா!

News
மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் ! அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார். இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான...
மீண்டும் வெளியாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

மீண்டும் வெளியாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

News
மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின்...

டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்த நடிகை பிரியா ஆனந்த்!

News
டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர் தொழில்நுட்பங்களை திறந்து வைத்தார் நடிகை பிரியா ஆனந்த்! சென்னை, நவம்பர் 14, 2025 — சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது. அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டுள்ளது. நடிகை ப...
CLOSE
CLOSE