Saturday, November 28

Blog

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது ‘அனகோண்டா’!

News
அதிரடி ஆக்‌ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'! பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு க காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும். டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்...
விவசாயியின் வாழ்வியலைப் பேசும் “மருதம்” அடுத்த மாதம் திரைக்கு வருகிறது !

விவசாயியின் வாழ்வியலைப் பேசும் “மருதம்” அடுத்த மாதம் திரைக்கு வருகிறது !

News
விதார்த் நடிப்பில் விவசாயியின் வாழ்வைப் பேசும் “மருதம்”... அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது ! Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்”. சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்காலத்திய சமூகத்தில் இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும், அது தவறில்லை என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகி பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா? இல்லையா? என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப...
உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா!

உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா!

News
உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா! *இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!* KYN வழங்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் 'The U1niverse Tour' இசை நிகழ்ச்சி டிசம்பர் 13 முதல் தொடங்க இருக்கிறது. முதலாவதாக, சென்னை YMCA மைதானத்தில் தொடங்க இருக்கிறது. டிக்கெட் பதிவு செய்யும் முதல் ஆயிரம் பேருக்கு யுவனின் கையொப்பமிட்ட டி-ஷர்ட் இலவசமாக வழங்கப்படும். இதுமட்டுமல்லாது, 10 அதிர்ஷ்டசாலி ரசிகர்களுக்கு யுவனுடன் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பும் கிடைக்கும். உங்களுக்கான டிக்கெட்டை KYN செயலியில் பதிவு செய்யுங்கள். யுவன் இசையை கொண்டாடும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!...
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்!

KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் நாயகனாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக்!

News
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!* KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைந்து தயாரிக்க, கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் “Production No.5” அதிகாரப்பூர்வமாக இன்று தொடங்கியது. இப்படத்தை அறிமுக இயக்குனர் சின்னசாமி பொன்னையா இயக்குகிறார்,யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் துவங்கி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. தொடர்ந்து தனது நிறுவனத்தின் மூலம், பல திறமையாளர்களுக்கு வாய்பளித்து, வித்தியாசமான படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி இணைந்து தயாரிக்கும் Production No.5 திரைப்படமான இப்படம் மிகப் பிரமாண்டமான பொருட்ச் செலவில் தய...
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லர்!

சிவகார்த்திகேயன் வெளியிட்ட ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லர்!

News
ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் ! இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!. இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகும் காந்தாரா: சேப்டர் 1 படத்தின் மீது பொதுவாகவே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், தயாரிப்பாளர்கள் மக்களை மகிழ்விக்கும் வகையில், படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர், இது 2025-இல் திரைத்துறையின் முக்கிய தருணங்களில் ஒன்றாகும்....
எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அதீரா’!

எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘அதீரா’!

Uncategorized
பிரசாந்த் வர்மா, கல்யாண் தாசரி, எஸ்.ஜே.சூர்யா, ரிவாஸ் ரமேஷ் டுக்கால், ஆர்கேடி ஸ்டுடியோஸ், PVCU வின் ‘அதீரா’ படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது !!* அதீராவின் காலம் தொடங்கி விட்டது! தனது தனித்துவமான இயக்கத்தில் ரசிகர்களைக் கவர்ந்துள்ள சினிமா வித்தகர் பிரசாந்த் வர்மா, மீண்டும் ஆர்கேடி ஸ்டுடியோஸுடன் இணைந்து ஒரு மாபெரும் சூப்பர் ஹீரோ பிரம்மாண்டத்தை உருவாக்க உள்ளார். டோலிவுட்டில் ஜாம்பி வகை படத்தை அறிமுகப்படுத்தியதும், இந்தியாவின் முதல் ஒரிஜினல் சூப்பர் ஹீரோ சாகாவான ஹனுமான் படத்தை உருவாக்கியதும் இவர்தான். அந்த கனவை இன்னொரு படி முன்னேற்றும் விதமாக, இப்போது அவர் தனது அடுத்த அத்தியாயமான அதீராவை அறிமுகப்படுத்துகிறார். இதில், கல்யாண் தாசரி ஹீரோவாக தனது பிரம்மாண்ட அறிமுகத்தைச் செய்கிறார். அதோடு, முன்னணி நடிகர் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரிவாஸ் ரமேஷ் டு...
கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமனம்!

கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமனம்!

News
வரவிருக்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் (CCL) சீசனில் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக நடிகர் உன்னி முகுந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்!* நடிகரும் கிரிக்கெட் ஆர்வலருமான உன்னி முகுந்தனை கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணி தங்களது புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அணியின் இணை உரிமையாளர் ராஜ்குமார் சேதுபதி வெளியிட்டார். கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடனான நீண்ட கால உறவின் அடிப்படையில் உன்னி முகுந்தன் இந்த தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் என்கிறார் ராஜ்குமார் சேதுபதி. மலையாள சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக மட்டுமல்லாது, உன்னி முகுந்தனின் அனுபவமும் கிரிக்கெட் பற்றிய புரிதலும் நிச்சயம் அணியினருக்கு புது உற்சாகம் கொடுக்கும் என்கிறார். உன்னி முகுந்தனின் பிறந்தநாளான செப்டம்பர் 22 அன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திறமையான கேப்டன், அனுபவம் பெற்ற மற்றும் புதிய...

“தந்த்ரா” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு!

News
S Screens தயாரிக்கும் "தந்த்ரா" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் RK.அன்புசெல்வன் , நடிகர்கள் அன்பு மயில்சாமி, சுவாமிநாதன் , சாம்ஸ் , சசி, "சித்தா" தர்சன் நடிகை மீனா கலந்து கொண்டனர். இத்திரைபடத்தை வெளியிடும் Action Reaction ஜெனீஷ் பேசியது , சிறு முதலீட்டு திரைப்படங்களை எங்கள் நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது . தரமான திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றார் . சிறு முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் RK.அன்புசெல்வன் பேசும்போது “தயாரிப்பாளர்கள் படத்தை மட்டும் ஒழுங்காக எடுக்க வேண்டும்.அவர்களே நடிப்பு,இயக்கம், ஒளிப்பதிவு என அனைத்து வேலையும் பார்க்க கூடாது” என்றார். அன்பு மயில்சாமி பேசும்போது “அப்பா என்னை மேலிருந்து ஆசிர்வாதம் செய்கிறார்”என்றார். சுவாமிநாத...
“‘குஷி’ மறுவெளியீடு பல கோடி வசூலாகும்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்!

“‘குஷி’ மறுவெளியீடு பல கோடி வசூலாகும்” – விநியோகஸ்தர் சக்தி வேலன்!

News
குஷி - 2 வில் விஜய் சார் மகன் நடிக்க வேண்டும்; எஸ். ஜே. சூர்யா இயக்க வேண்டும்! - தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்! ஏ.எம்.ரத்னம் தயாரித்து, எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் குஷி. தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்கில் செப்.26ஆம் தேதி வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சக்திவேலன் விநியோகம் செய்கிறார். அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் குஷி படத்தை பார்த்து சந்தோஷப்படுவார்கள் என்று நம்புகிறேன். எடிட்டர் விஜயன் என்னிடம், வாலி படம் நன்றாக இருக்கிறது. அஜித் சார் சூர்யாவிற்கு பைக் வாங்கி கொடுத்திருக்கிறார் என்று கூறினார். நான் உடனே சூர்யாவை தேட ஆள் அனுப்பினேன். நாயகனாக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்யுங்க...
நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும்

நடிகர் சங்க கட்டிடம் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு அடையாளமாக இருக்கும்

Uncategorized
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம்! தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 69 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் துவக்கத்தில் கடந்த வருடங்களில் நம்மை விட்டு மறைந்த நடிகை சரோஜாதேவி, நடிகர்கள் டெல்லி கணேஷ், ராஜேஷ், எம். ஏ. பிரகாஷ், மனோஜ் கே.பாரதி மற்றும் சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கர் உட்பட 70மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும், சிவகுமார், வடிவேலு, ஜி.வி.பிரகாஷ்குமார், ஸ்ரீமன், பசுபதி, நடிகைகள் எம்.என்.ராஜம், சச்சு, லதா அம்பிகா, ஊர்வசி, ரேகா, ஷர்மிளா, ரோகிணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குறிப்...
CLOSE
CLOSE