Saturday, November 28

Blog

படையாண்ட மாவீரா _ விமர்சனம்

படையாண்ட மாவீரா _ விமர்சனம்

Reviews
படையாண்ட மாவீரா _ விமர்சனம் மாவீரன் என்ற பட்டத்துடன் வாழ்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் படையாண்ட மாவீரா. ஆதிக்க சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று மக்களுக்காக போராடிய குரு பாத்திரத்தில் இயக்குனர் வ.கவுதமன் தோன்றி நடித்திருக்கிறார். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தீனா ஓர் ஏழைப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை அறியும் குரு, அதற்கு நியாயம் கேட்கச் சென்றபோது போலீஸ்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் அவர்களை அடித்து துவம்சம் செய்து போலீஸ் நிலையத்தையே சூறையாடுகிறார். அதே சமயம் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழை மக்களின் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்திலும் இறங்குகிறார். முதலாளிகளும் போலீஸ் அதிகாரிகளும் சேர்ந்து குருவை தீர்த்து கட்டுவதற்கு முயற்சி செய்கின்றனர். இதன் முடிவு  என்ன என்பதுதான் படையாண்ட மாவீரன் படத்தி...

மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் மாஸ்டர் லாரன்ஸ் !

News
தமிழர் பாரம்பரிய மல்லர் கலையில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் மாஸ்டர் லாரன்ஸ் ! தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர், சமூக செயற்பாட்டாளரான மாஸ்டர் ராகவா லாரன்ஸ், சமீபமாக பல சமூகப் பணிகளை, உதவிகளை செய்து வருகிறார். தமிழர் பாரம்பரியமான மல்லர் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளி குழுவினரை ஊக்குவித்து வருகிறார். மாஸ்டர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகள் செய்து வருவது அனைவரும் அறிந்ததே! அவர் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக கை கொடுக்கும் கை எனும் ஆதரவு அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இந்த அமைப்பில் வாழும் மாற்றுத்திறனாளி குழுவினர் நடனம் முதலான் பலவிதமான திறமைகளில் பல துறைகளில் அசத்தி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்விலும் அசத்தி வருகின்றனர். இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் கலையாக இருந்த இந்த கலையில், ...
சக்தித் திருமகன் _ விமர்சனம்

சக்தித் திருமகன் _ விமர்சனம்

News
சக்தித் திருமகன் _ விமர்சனம் மிகச் சாதாரண ஆளாக இருந்து அரசியல் புரோக்கர் ஆக மாறி, அரசு அதிகாரிகளில் ஆரம்பித்து அமைச்சர்கள்வரை கச்சிதமாக  காரியங்களை செய்ய வைத்து  காசு பார்த்து வருகிறார் விஜய் ஆண்டனி. இவ்வாறு சம்பாதித்த பணத்தை எல்லாம் ஒரு தொண்டு நிறுவனத்தை போல் தனி ஆளாக நின்று, ஏழை எளிய மக்களுக்கு செலவு செய்து வருகிறார். அரசியல் சாணக்கியராக நின்று காய்களை நகர்த்தும் செல்வாக்கு மிக்க பெரும் செல்வந்தரான சுனில் கிருபளானி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். அவர் அந்தப் பதவிக்கு வராமல் தடுப்பதுடன்,  ஊழல் அரசியலை ஒழித்துக் கட்ட விஜய் ஆண்டனி என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் சக்தி திருமகன் படத்தின் கதை. அரசு எந்திரத்தை ஆட்டம் காண வைக்கும் ஆழமான வேடத்தில் இயல்பாக நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்த செல் முருகன் விஜய் ஆண்டனிக்கு பக...
நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்த  ‘ரைட்’ திரைப்படம்!

நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடித்த ‘ரைட்’ திரைப்படம்!

News
“ரைட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு! RTS Film Factory சார்பில், தயாரிப்பாளர்கள் திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் “ரைட்”. வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி  திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் பத்திரிக்கை நண்பர்களுக்காக படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் பிரத்தியேகமாக திரையிடப்பட்டது. இவ்விழாவினில்.., தயாரிப்பாளர் திருமால் லட்சுமணன் பேசியதாவது.. எங்கள் படத்தில் பணிபுரிந்த நட்டி சார், அருண் பாண்டியன் சார் மற்றும் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இவ்விழாவிற்கு வருகை தந...
Nallaru Po” from Mythri Movie Makers’ Dude Wins Hearts with Soul and Sensitivity!

Nallaru Po” from Mythri Movie Makers’ Dude Wins Hearts with Soul and Sensitivity!

News
“Nallaru Po” from Mythri Movie Makers’ Dude Wins Hearts with Soul and Sensitivity Music in cinema often sets the emotional tone, and Dude, the upcoming film from Mythri Movie Makers, proves this yet again. After the high-energy hit Oorum Blood, the second single Nallaru Po has emerged as a soulful, emotional anthem that’s striking a powerful chord—especially with women listeners. Composed by Sai Abhyankar and sung by Tippu and Mohit Chauhan, the track is a heartfelt blend of melody and meaning. Lyricist Vivek weaves words that speak of longing, love, and letting go, anchored in the poignant sentiment of “Engirunthaalum Vaazhga”, a blessing for someone to thrive, no matter where they are. What truly sets Nallaru Po apart is its emotional maturity. Unlike songs that glorify bitterness...
“காந்தாரா சேப்டர் 1” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

“காந்தாரா சேப்டர் 1” படத்தின் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

News
ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள, “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்! ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பில் மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த ஆவலுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல தமிழ் நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தின் தமிழ் டிரெய்லரை 22 செப்டம்பர் 2025 மதியம் 12:45 மணிக்கு வெளியிடுகிறார். 2022-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற காந்தாரா படத்தின் முன்கதையாக உருவாகும் இந்தப் படத்தை, ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியுள்ளார். விஜய் கிரகந்தூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படம், புராணங்களால் நிரம்பிய கதைக்களத்தில், கண்கவர் காட்சியமைப்புகளுடன், பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் கொண்டு செல்லும் படைப்பாக உ...
ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம்

ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம்

Reviews
ராயல் சல்யூட்  சினிமா விமர்சனம் இந்திய ராணுவ வீரன் சக்திவேல் (பிரதீப்) இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரில் குண்டடிபட்டு உயிருக்குப் போராடும் தனது உயரதிகாரியை காப்பாற்றுவதற்கான முயற்சியில் இருக்கிறான். அந்த நேரத்தில் அவனது உயிருக்கு ஆபத்து உருவாக, அப்போதைய போரில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் வீரன் ஒருவன் சக்திவேலின் உயிரைக் காப்பாற்றுகிறான். அடுத்த சில மணி நேரத்திலேயே சக்திவேலுக்கு தன்னைக் காப்பாற்றியவனை கொல்ல வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அந்த நிலைமையில் அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பது படத்தின் உணர்வுபூர்வமான நிறைவுக் காட்சி. தனது உயரதிகாரியை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை முதுகில் தூக்கிச் சுமந்து பல கிலோ மீட்டர் துரம் நடப்பது, உயிருக்கு ஆபத்தான நிலைமையில் சிக்கித் தவிப்பது,  ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய பாகிஸ்தான் நாட்டு இந்திய ராணுவ வீரனை சுட்டுக் கொல...
“சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது” – நடிகர் ஷேன் நிகம்!

“சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது” – நடிகர் ஷேன் நிகம்!

News
பல்டி பத்திரிகையாளர் சந்திப்பு! தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழில் வரும் செப்டம்பர் 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் 19.09.2025 அன்று நடைபெற்றது. அந்த சந்திப்பில் கலந்து கொண்ட அப்படத்தின் கலைஞர்கள் பேசியதாவது தயாரிப்பாளர் சாந்தோஷ் T. குருவில்லா பேசும்போது, அனைவருக்கும் வணக்கம். இப்படத்தில் நடிக்கும் அனைத்து கலைஞர்களும் இளம் திறமையாளர்கள். ஷேன் நிகம், சாந்தனு, சாய் அபயங்கர், உன்னி ஆக...
தக்‌ஷன் விஜய் நடிக்கும் “வெற்று காகிதம்”!

தக்‌ஷன் விஜய் நடிக்கும் “வெற்று காகிதம்”!

News
தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் "வெற்று காகிதம்"! மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா தயாரிப்பில், மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகிறது 'வெற்று காகிதம்'. தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது 'வெற்று காகிதம்'. தத்ரூபமாக சண்டை போட்டுள்ளார் வளர்ந்து வரும் ஹீரோ தக்‌ஷன் விஜய்! தக்‌ஷன் விஜய், சாந்தினி, அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, சத்தியம் டிவி முக்தார், கூல் சுரேஷ், ஸ்ரீதர், ஜீவா, தீபா, மதிச்சியம் பாலா, ஹலோ கந்தசாமி, நமோ நாராயணன், சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தை மகிழ் குழுவினர் இயக்குகின்றனர். ஒளிப்பதிவு திலீபன், கலை கார்த்திக், சீனு, சண்டைப் பயிற்சி கிக்காஸ் காளி, அஷ்ரப் குருக்கள், சுரேஷ். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சென்னை, பழனி, கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தி, பிரமாண்டமாக தயாரித்து வ...
தண்டகாரண்யம் _ விமர்சனம்

தண்டகாரண்யம் _ விமர்சனம்

Reviews
தண்டகாரண்யம் _ விமர்சனம் PRODUCED BY *S. SAI DEVANAND* *S. SAI VENKATESWARAN* *PA.RANJITH *WRITER - DIRECTOR* ATHIYAN AATHIRAI , DOP - PRATHEEP KALIRAJA MUSIC - JUSTIN PRABHAKARAN EDITOR - SELVA RK ART - T. RAMALINGAM *Artiste* Dinesh Kalaiyarasan Dancing rose Shabeer Balasaravanan Rythvika Vinsu Sam Arul doss Muthukumar Yuvan mayilsamy ACTION - STUNNER SAM, A.S.SUDESHKUMAR, PC STUNTS LYRICS - UMADEVI, THANIKODI இயக்குநர் அதியன் ஆதிரையின் உரத்த சிந்தனையில் உருவாகியிருக்கும்  தண்டகாருண்யம் திரைப்படம்,  உள்ளத்தை உருக்கும் வகையிலும் உதிரத்தை கொதிக்கச் செய்யும் வகையிலும் படமாக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகிரி வனப்பகுதியில் மனைவி ரித்விகா, தம்பி கலையரசன் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார் தினேஷ். தீவிரவாதிகளுக்கு மறுவாழ்வு தருவதற்காக மத்திய அரசு...
CLOSE
CLOSE