Wednesday, November 25

Blog

தோழமை108-துவக்க விழா

தோழமை108-துவக்க விழா

Uncategorized
நம் நாடு இயற்கைப் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்குப் பல நிலைகளில் உதவிகள் புரிய போதிய மனித வளம் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பதை நாம் அறிவோம்.இந் நிலையில் நம் சமூகத்தைக் காக்க 108 அவசரச் சேவை ஒரு புதிய திட்டத்தை இன்று அடையாறு, பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆரம்பித்துள்ளது. இதன் முதல் முயற்சியாக, அடையாறு,பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 'நமது தோள்கள்' அறக்கட்டளையும்,108 ஆம்புலஸ் அவசர சேவையும் இணைந்து முதல் கட்டமாக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'தோழமை 108' என்கிற குழுவை தொடங்கியுள்ளது. 10.08.2017 (வியாழக்கிழமை) பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்நடை பெற்ற இவ்விழாவில் சென்னை மாவட்ட ஆட்சியர் திரு.அன்புச்செல்வன் அவர்களும், திரைப்பட நடிகர் திரு.ஆரி அவர்களும்,வழக்கறிஞர் திரு.அலெக்ஸ் சுதாகர் (செயலர் மனித உரிமை...
‘ஹாப்பி நியூ இயர்’ –  குறும்படம்

‘ஹாப்பி நியூ இயர்’ – குறும்படம்

News
சினிமா துறையில் காலெடுத்து வைக்க உதவும் பல பாதைகளில் குறும்படங்கள் ஒன்று. நடிகர்கள்  விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மற்றும் பாலாஜி மோகன் போன்ற நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தது குறும்படங்களே.இது போன்ற ஒரு வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்டுள்ள குறும்படம் தான்  'ஹாப்பி நியூ இயர்'. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஜித் , 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தை இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். இது குறித்து விஜித் பேசுகையில், '' சமீபத்தில் எங்களது 'ஹாப்பி நியூ இயர்' குறும்படத்தை நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு போட்டு காண்பித்தோம். படத்தை முழுவதும் பார்த்த அவர் படத்தை பாராட்டி எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் . படத்தின் பிண்ணனி இசை பிரமாதமாக இருந்ததாகவும், படத்தொகுப்பு கச்சிதமாக இருந்ததாகவும், படத்தில் எனது தோற்ற...
ஒரு தீவிர  ரஜினி ரசிகன்

ஒரு தீவிர ரஜினி ரசிகன்

News
'' 'நாசா' வுக்கு எப்படி ஒரே ஒரு 'வாயேஜர்' விண்கலமோ, அது போல் எங்களுக்கு ஒரு ஒரு சூப்பர் ஸ்டார் '' எனக்கூறியுள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் கபாலி செல்வா. கபாலி செல்வா அவர்களின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் '12.12.1950' படம் என்றுமே புகழின் உச்சியிலும், மக்களின் மனத்திலும் ஆட்சி நடத்தும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஒரு தீவிர ரசிகன் பற்றிய படமாகும். இப்படத்தின் முதல் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம் நேற்று தங்களது 'வாயேஜர்' விண்கலம் விண்ணுக்கு சென்று 40 ஆண்டு காலம் ஆகியுள்ளதை கொண்டாடியது. இதனை தொடர்ந்து 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக சாதித்து , விண்வெளியையும் மிஞ்சும் ரசிகர் படை கொண்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி கபாலி செல்வா 'நாசா' விண்வெளி மையத்திற்கு சூப்பர் ஸ்டாரின் புகழை பற்றியு...
‘ஸ்பைடர்’ படத்தில் பாடிய  நிகிதா காந்தி

‘ஸ்பைடர்’ படத்தில் பாடிய நிகிதா காந்தி

News
ஒரு படத்தின் 'சிங்கிள் ட்ராக்' கை முதலில் ரிலீஸ் செய்வது வழக்கமாகிவிட்டாலும், அதில்  ஒரு சில பாடல்களே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து கொண்டாடவைக்கும் . A R முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத் சிங்க், S J சூர்யா மற்றும் பரத் நடிப்பில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் , ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில்  உருவாகிவரும் 'ஸ்பைடர்' படத்தின் 'பூம் பூம்' பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபகாலமாக பல ஹிட் பாடல்களை பாடி கலக்கிக்கொண்டிருக்கும் நிகிதா காந்தி இப்பாடலை பாடியுள்ளார். இப்பாடல் குறித்து நிகிதா காந்தி பேசுகையில் , '' எனது இசை பயணம் சுவாரஸ்யமானது. சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் BDS படித்துக்கொண்டிருந்தபொழுது தான் முதல் முறையாக, ரஹ்மான் சாருக்கு ஒரு பாடல் பாட வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு வரிசையாக வாய்ப்புகள் வர, பின்னணி  பாடகியானேன். இ...
புதிய உயரங்களைத் தொடத் தயாராகும் இன்டர்வ்யூ டெஸ்க்

புதிய உயரங்களைத் தொடத் தயாராகும் இன்டர்வ்யூ டெஸ்க்

News
சேவைத் தொழில்கள் பலவும் இருக்கலாம். ஆனால் அவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் மனிதவள மேம்பாட்டுத் துறை என்றால் மிகையாகாது. வேலை தேடுவோர் ஒருபுறம் லட்சக்கணக்கில் பெருகி நிற்க, நிறுவனங்களுக்கு திறமை மிக்க பணியாளர்கள் கிடைக்காமல் தட்டுத்தடுமாறிக்கொண்டிருக்கும் நிறுவனங்களும் அதற்கிணையாகத்தான் இருக்கின்றன. இந்த இரண்டையும் இணைக்கும் அற்புதமான புள்ளிதான் இன்டர்வ்யூ டெஸ்க். இதன் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாஃபா பாண்டியராஜனின் மனைவி திருமதி லதா, தங்கள் நிறுவனத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சுவைபட பகிர்ந்து கொண்டார். மாஃபாவை நாங்கள் ஆரம்பிக்கும் காலகட்டத்தில் மனிதவள மேம்பாடு என்ற துறையே பலருக்கும் அந்நியமாகத்தான் இருந்தது. வங்கியில் கடன் கேட்கப் போனால், மேலாளரே நீங்கள் இரண்டு மாடு வாங்கி தொழில் செய்யப்போகிறேன் என்றால்கூட கடன் கொடுக்க முடியும். மனித...
வேலை தேடுவோரையும் வேலை கொடுப்போரையும் இணைக்கும் பாலம் இன்டர்வ்யூ டெஸ்க்

வேலை தேடுவோரையும் வேலை கொடுப்போரையும் இணைக்கும் பாலம் இன்டர்வ்யூ டெஸ்க்

News
பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் HR எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்ற வல்லுனரான திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்களின் தனித்துவமான STARTUP நிறுவனமே இன்டர்விவ் டெஸ்க். நேற்று சென்னையில் நடைபெற்ற துவக்க விழாவில் திரு.பிச்சுமணி துரைராஜ் அவர்கள் பேசியதாவது... இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் InterviewDeskன் சார்பாக மாலை வணக்கம், எனது அழைப்பை ஏற்று உங்கள் பொன்னான நேரத்தை எங்களுக்காக ஒதுக்கி இந்த இனிய நிகழ்விற்கு வந்து சிறப்பித்தமைக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வேலைவாய்ப்பு சார்ந்து ஒருத்தருக்கு உதவி செய்யுறதுல எனக்கு எப்பவுமே ஆர்வம் அதிகம். அது ஒரு தனிநபருக்கா இருந்தாலும் சரி ஒரு நிறுவனத்துக்கா இருந்தாலும் சரி. இந்த ஆர்வம்தான் HRஅ என்னோட specialisationஆ தேர்ந்தெடுக்க காரணமா அமைஞ்சது. Malcolm Gladwellலோட 10,000-hour rule...
‘பலூன்’  செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது

‘பலூன்’ செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது

News
ஜெய், அஞ்சலி மற்றும் ஜனனி ஐயர் நடிப்பில் புதுமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில், '70mm மற்றும் பார்மெர்ஸ் மாஸ்டர் பிளான் productions என தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'பலூன்' திரைப்படம் தனது சுவாரஸ்யமான முதல் போஸ்டரிலிருந்தே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதன் பிறகு வெளிவந்த 'பலூன்' படத்தின் டீஸர் , அதன் வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான கதை களத்தால் ரசிகர்களின் வரவேற்பபை பெற்றது. எல்லா பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ள இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாக இப்படத்தின்  உரிமத்தை வாங்கியுள்ள 'Auraa Cinemas' அறிவித்துள்ளது. இது குறித்து 'Auraa Cinemas' மகேஷ் கோவிந்தராஜன் பேசுகையில், '' 'பலூன்' நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு  மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருக்கும். பண்டிகை வாரமான செப்டம்பர் 27ஆம் தேதி அன்ற...
‘தரமணி’ குறித்து ஆண்ட்ரியா…

‘தரமணி’ குறித்து ஆண்ட்ரியா…

News
ராம் இயக்கத்தில் ஆண்ட்ரியா மற்றும் புதுமுக நாயகன் வசந்த் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள 'தரமணி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளதாக வணிக தரப்புகள் தெரிவித்துள்ளன. 'தரமணி' படத்தின் டீசர்களுக்கும், கதை சாராம்சத்துக்கும், படத்தின் பாடல்களுக்கும் மக்களிடையே கிடைத்த பெரும் ஆதவால் இப்படத்திற்கு இன்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என இப்படத்தின் தயாரிப்பு தரப்பு கூறினர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை JSK பிலிம் கார்பொரேஷன்ஸ் தயாரித்துள்ளது. துணிச்சல் மட்டுமின்றி புத்திசாலித்தனமும் உள்ள ஒரு  நடிகையால் மட்டுமே 'தரமணி' போன்ற ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிக்கமுடியும். இப்படத்தின் கதாநாயகியான , பல திறமைகள் கொண்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் 'தரமணி' யின் டீசர்களிலிருந்தே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 'தரமணி' குறித்து ஆண்ட்ரியா பேசுகையில், '' இயக்குனர் ராம் ச...
CLOSE
CLOSE