Wednesday, November 25

Blog

புலி வேஷம் போடும் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றேன்- ராஜகுமாரன்

புலி வேஷம் போடும் கலைஞர்களிடம் பயிற்சி பெற்றேன்- ராஜகுமாரன்

News
ஒளிப்பதிவாளர் - இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'கடுகு'. நகைச்சுவை கதைக்களத்தில் அதே சமயத்தில் தரமான கதையம்சத்தோடு உருவாகி இருக்கும் இந்த 'கடுகு' திரைப்படத்தை, 'ரஃப் நோட் புரொடக்ஷன்ஸ்' சார்பில் பாரத் சீனி தயாரித்து இருக்கிறார். இயக்குநர் ராஜகுமாரன், பரத், விஜய் மில்டனின் சகோதரர் பாரத் சீனி, ராதிகா பிரசித்தா மற்றும் சுபிக்ஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கடுகு' படத்தின் விநியோக உரிமையை '2 டி என்டர்டைன்மெண்ட்' சார்பில் வாங்கி இருக்கும்  நடிகர் சூர்யா, இந்த படத்தை வருகின்ற கோடை காலத்திற்கு முன் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது. "இந்த கதையை விஜய் மில்டன் என்னிடம் கூற வரும் போது  எனக்கு  உண்மையாகவே வியப்பாக இருந்தது. ஆனால் கடுகு படத்தின் கதையை கேட்ட  அடுத்த கணமே நான் இந்த படத்தில் நடித்தாக வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டேன். அற்புதம...

இயக்குநர் விஜய் அவர்களின் செய்தி குறிப்பு

News
அன்புள்ள ஊடக நண்பர்களே, சமீப நாட்களாக, ஒரு சில ஊடகங்களில் எனக்கு மறு திருமணம் நடக்க இருக்கின்றது என்கின்ற ஜோடிக்கப்பட்ட  வதந்திகள்  பரவி வருகின்றது. இது போன்ற ஆதாரமற்ற, அங்கீகரிக்கப்படாத  செய்திகள் என்னை மேலும் மேலும்  வருத்தப்பட வைக்கின்றது. என்னுடைய வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு ஆற்றி வரும் ஊடக நண்பர்களிடம், இது போன்ற வதந்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற  தார்மீக உரிமை எனக்கு இருக்கின்றது என்று நினைக்கின்றேன். ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய கடமை.அதை  முழு மனதோடு நிறைவேற்றுவேன்." நன்றி...
தென் இந்திய அழகி போட்டியில்  ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்

தென் இந்திய அழகி போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்

News
'அச்சம் என்பது மடமையடா'  திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA பட்டதாரியான அஞ்சலி ராவ்,  தற்போது  'பீச்சாங்கை' திரைப்படம் மூலம் கதாநாயகியாக உருவாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ்  கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும்  'பீச்சாங்கை' திரைப்படத்தில் புதுமுகம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார். "நடிப்பின் மீது நான் வைத்திருக்கும் காதல் தான் என்னை பல விளம்பர படங்களிலும், வன்மம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிப்பதற்கு பக்கபலமாய் இருந்தது. பல திரைப்படங்களில்  நான் நடித்திருந்தாலும், முதல் முறையாக நான் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் இந்த 'பீச்சாங்கை' தான்.  நான் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அ...

‘பாட்ஷா’ படத்திற்காக ரசிகர்களாக மாறி இருக்கும் திரையுலக நட்சத்திரங்கள்

News
"ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை  விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது"  என்று கூறுகிறார் லதா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும்  கருதப்படும்  'சத்யா மூவிஸ்' நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பாட்ஷா' படத்தை, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த 'பாட்ஷா', திரையுலக நட்சத்திரங்களையும் அதிகளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும்   'பாட்ஷா'  படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது ...

‘8 தோட்டாக்கள்’ இசை உரிமையை வாங்கி இருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா

News
'வெற்றிவேல் சரவணா சினிமாஸ்' சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  'பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்'  -  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்   திரைப்படம் '8 தோட்டாக்கள்'. இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி வரும்  '8தோட்டாக்கள்' படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம்  'மஹேஷிந்தெ பிரதிகாரம்' புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர். கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் பாடல்கள் உரிமையை, தற்போது 'யு 1 ரெகார்டஸ்' நிறுவனத்தின் சார்பில் யுவன்ஷங்கர் ராஜா வாங்கி இருப்பது ஒட்டுமொத்த திரையுலகிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. "8 தோட்டாக்கள் படத்தின் பாடல்களை கேட...
Aari Wth Mom

Aari Wth Mom

News
நெடுஞ்சாலை, மாயா ஆகிய வெற்றிப்படங்களின் கதாநாயகன் நடிகர் ஆரி. இவர் தற்போது இசாக் இயக்கி வரும் நாகேஷ்திரையரங்கம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு திண்டிவனத்தில் மிகப்பிரம்பாண்டமான தியேட்டர் செட்டில் நடைபெற்றது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தால் நடிகர் ஆரி இயக்குனரையும் தயாரிப்பாளரையும் சிலிர்க்க வைத்தார். படப்பிடிப்பின் இறுதி நாளன்று நடிகர் ஆரியின் தாயார் இறந்து விட்டார். இதைக்கேள்விப்பட்ட மொத்த யூனிட்டும் கலங்கிப்போக, இயக்குனருக்கு இடி விழுந்தது போல சோகம். அன்று நடந்த சம்பவத்தை இயக்குனரே விவரிக்கிறார். “அன்னைக்கி டபுள் கால்ஷீட் ப்ளான் பண்ணிருந்தோம். காலையில ஆரம்பித்து நைட்டுக்குள்ள எல்லா சீக்வென்ஸையும் எடுத்தாக வேண்டிய கட்டாயம். ஏன்னா நாங்க போட்ருந்த செட்டோட பட்ஜெட் அப்படி. சூழ்நிலை இப்படி இருக்க, சம்பவம் கேள்விப்பட்டதும் எங்களுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல...

பிரம்மாண்ட முறையில் இங்கிலாந்தில் திரையிடப்படும் பாகுபலி 2

News
காட்சிக்கு காட்சி பிரம்மிப்பையும் பிரம்மாண்டத்தையும் புகுத்தி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்திழுத்த S.S.ராஜமௌலியின் ’பாகுபலி’ படத்தின் வெற்றி உலகம் அறிந்ததே. பிரபாஸ் பாகுபலியாக வாழ்ந்து அனைவரின் மனதையும் கவர்ந்து உச்ச நட்சத்திரமாக திகழும் இவ்வேளையில் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு விண்ணையும் எட்டும் வண்ணம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் உலகமெங்கும் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இந்தியாவின் 70-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வகையில் பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்ட்டியூட் ஏப்ரல் 24 முதல் பல திரைப்படங்களை திரையிடவுள்ளது. இதில் திரையிடப்படும் படங்களில் 'பாகுபலி 2'ம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் மற்றும் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் உள்ளிட்ட பல பிரபலங்கள்...

‘டியூப்லைட்’ படத்தின் ‘சிலோனு சில்க்’ பாடல்

News
அறிமுக இயக்குநர் இந்த்ரா இசையமைத்து நடித்து இருக்கும் திரைப்படம் 'டியூப்லைட்'. 'ஆஸ்ட்ரிட்ச் மீடியா புரொடக்ஷன்' சார்பில்  ரவி நாராயணன் தயாரித்து இருக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் இந்த்ரா - அதித்தி முன்னணி கதாபாத்திரங்களிலும்,  நடிகர் பாண்டியராஜன் மிக முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியிடப்பட்ட 'டியூப்லைட்' படத்தின் பாடல்கள், குறிப்பாக 'சிலோனு சில்க்' பாடல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை  பெற்று வருவது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் நல்லதொரு  வரவேற்பை பெற்று வருகிறது. "இந்த காலத்திற்கேற்ற ஒரு புது ரகமான குத்து பாடல் தான், சின்மயி பாடியிருக்கும்  இந்த 'சிலோனு சில்க்'. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை  பெற்று வருவது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது" என்று உற்சாகமாக கூறுகிறார் 'டியூப்லைட்' படத்த...
CLOSE
CLOSE