Thursday, November 26

Blog

‘லாக் டவுன்’ படத்தைத் தொடர்ந்து பரவலாக பட வாய்ப்புகளை பெற்று வரும் விநாயகராஜ்!

‘லாக் டவுன்’ படத்தைத் தொடர்ந்து பரவலாக பட வாய்ப்புகளை பெற்று வரும் விநாயகராஜ்!

News
'லாக் டவுன்' படத்திற்கு பிறகு நிறைய புதிய படங்களில் நடித்து வருகிறார் விநாயகராஜ்! 'லாக் டவுன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படக்குழுவினர்கள் பாராட்டு மட்டுமல்ல ரசிகர்களின் பாராட்டையும் பெற்றார் விநாயகராஜ். திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3', லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டிய விநாயகராஜ், சமீபத்தில் வெளியான லாக் டவுன் படத்திலும் தனது நடிப்பு திறமையால் தனித்து தெரிந்தார். இதனை தொடர்ந்து, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான 'உயிரிலே கலந்தது' படத்தின் இயக்குனர் கே.ஆர்.ஜெயா இயக்கத்தில் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முழு விபரங்கள் வெளியிடப்பட உள்ளது. நடிகர் விநாயகராஜை, இனி கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்! GovindarajPro...

பிரம்மாண்ட தயாரிப்பில் பீரியட் ஃபிலிமாக உருவான ‘பள்ளிச்சட்டம்பி’!

News
நடிகர் டொவினோ தாமஸ் நடிக்கும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு! வேர்ல்ட் வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'பள்ளிச்சட்டம்பி' படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் டொவினோ தாமஸ், கயாடு லோஹர், விஜயராகவன், பாபு ராஜ், அலெக்சாண்டர் பிரசாந்த், சுதீர் கராமனா, டி.ஜி.ரவி,, ஜான் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசைமமைத்திருக்கிறார். 1957ஆம் ஆண்டின் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்...
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு!

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் ‘லீடர்’ படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு!

News
லெஜெண்ட் சரவணன் நடிக்கும் 'லீடர்' படத்தின் இசை & ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு! லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லீடர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு திரைப் பிரபலங்கள் முன்னிலையில் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது. பாடலாசிரியர் விவேகா பேசுகையில், "இந்த இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில் உள்ள‌ முத்தைத்தரு பத்தித் திருநகை பாடல் ஒலித்தவுடன் எனக்கு உடல் எல்லாம் சிலிர்த்து விட்டது. இப்படத்தில் நான் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறேன், இரண்டும் அற்புதமான அனுபவங்கள். இப்படத்தின் முன்னோட்டத்தை பார்த்தவுடன் இது அனைவருக்குமான படமாக வரப்போகிறது என்பது தெரிகிறது. லெஜெண்ட் ச...
அருள்தாஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ‘ரீ யூனியன்’!

அருள்தாஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ‘ரீ யூனியன்’!

News
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் 'ரீ யூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! *ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் 'ரீயூனியன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு* தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரீ யூனியன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ' ரீயூனியன் ' திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமிசம் சிவா,...
காலத்தின் கண்ணாடியாக மலரும் அரசியல் காமெடி படம் “TN 2026”!

காலத்தின் கண்ணாடியாக மலரும் அரசியல் காமெடி படம் “TN 2026”!

News
கலகலப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமான “TN 2026” வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வருகிறது! KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026”. இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் பகடி கலந்து, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரில், நட்டி நடுநாயகமாக மேடையின் மீது கையை உயர்த்தி நிற்க, அருகில் முக்கிய கதாப்பாத்திரங்கள் கோஷமிட, சுற்றிலும் பெரும் கூட்டம் கொடிகள் மற்றும் பகடியான வசன பதாகைகளுடன் சூழ்ந்து நிற்கிறது. பார்த்தவுடன் ஈர்க்கும் இந்த போஸ்டர் இணையம் மு...
‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு  நிறைவு!

‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

News
'ராவடி' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது! செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின்  S. S. லலித் குமார் தயாரிப்பில், நடிகர்கள் பஸில் ஜோசப் & L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘ராவடி’ படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. சென்னை மற்றும் ஒகேனக்கலில் படப்பிடிப்பு நடந்து முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. நடிகர்கள் பஸில் ஜோசப் - L. K. அக்ஷய் குமார் ஆகியோர் இணைந்து நடிக்கும் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ‘ராவடி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை மற்றும்  ஒகேனக்கல் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளன. இயற்கை அழகுடன் கூடிய ஒகேனக்கல் லொக்கேஷன், படத்திற்கு வித்தியாசமான காட்சியமைப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிமுக...
நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கொண்ட ‘காக்கி சர்கஸ்’!

நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கொண்ட ‘காக்கி சர்கஸ்’!

News
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் உருவான ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘காக்கி சர்கஸ்’ ஏப்ரல் 10 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது! *குற்றத்திற்கு எல்லைகளும் இல்லை, மொழி தடைகளும் இல்லை; அந்த உண்மையை எதிர்பாராத வகையில் உயிர்ப்பிக்கிறது ‘காக்கி சர்கஸ்’ -* தமிழ் மற்றும் மலையாள ZEE5 இன்று தங்களது அடுத்த ஒரிஜினல் சீரிஸான ‘காக்கி சர்கஸ்’ ஐ அறிவித்துள்ளது. வித்தியாசமான நகைச்சுவை, அதிரடி, கற்பனை மற்றும் திரில்லர் அம்சங்கள் கலந்த இந்த ஏழு எபிசோடுகள் கொண்ட சீரிஸ், ஒரு சப்-ஜெயிலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. தயாரிப்பு நிலையில் ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம் ( ‘Once Upon a Time in Kayamkulam’ ) என்ற பெயரில் உருவான இந்த சீரிஸ், தற்போது ‘காக்கி சர்கஸ்’ என்ற புதிய பெயரில் பார்வையாளர்களை சந்திக்க வருகிறது. இந்த சீரிஸின் தனித்துவமான நகைச்சுவை, விசித்திரமான கதாபாத்திரங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் ந...
‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு!

‘நீளிரா ‘ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு!

News
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம், ஸ்பிரிட் மீடியா ராணா டக்குபட்டி இணைந்து வழங்கும் 'நீளிரா ' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு இந்திய சினிமாவின் முன்னணி ஆளுமைகளான கார்த்திக் சுப்புராஜ்-ராணா டக்குபட்டி தயாரிப்பில் ஆவணப்பட இயக்குநர் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, கபிலா வேணு நடிப்பில் தயாராகி, ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'நீளிரா' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ கார்த்திகேயன் சந்தானம் வழங்கும் 'நீளிரா' திரைப்படத்தில் நவீன் சந்திரா, விது, ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, 'கயல்' வின்சென்ட், சித்து குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நா...

‘லீடர்’ படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம்!

Uncategorized
'லீடர்' டீசருக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பிற்கு இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ரசிகர்களுக்கு நன்றி; படம் ஏப்ரலில் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைக்கும் என்று உறுதி! லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது. சமூக ஊடக தளங்களில் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பிரபல இயக்குநர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஏப்ரல் மாதம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் 'லீடர்' வெளியாகிறது. ஒரு நிமிடம் 21 நொடிகள் ஓடும் டீசரில் இடம் பெற்றுள்ள லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக்காட்சிகள் ர...
முத்து என்கிற காட்டான் _ விமர்சனம்

முத்து என்கிற காட்டான் _ விமர்சனம்

Reviews
முத்து என்கிற காட்டான் _ விமர்சனம் அதிக ஆட்கள் வசிக்காத சிறிய கிராமம் ஒன்றில் பெயருக்காக இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை நிரந்தரமாக மூடப் போவதாக தகவல் வரும் நிலையில், அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்து என்பவரின் தலை கிடக்கிறது. ஆனால் எவ்வளவு தேடியும் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இறந்த முத்து யார்? அவர் எதற்காக சொல்லப்பட்டிருக்கிறார் என்ற காவல்துறையின் புலன் விசாரணை ஆரம்பமாகிறது. முத்துவை பற்றி கிடைக்கும் தகவல்களும், சொல்லப்படும் கதைகளும் ஆக்டோபஸின் கால்களைப்போல் பல திசைகளிலும் நீள்கின்றன. திரில்லர் வகையில் உருவாக்கப்பட்ட 10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் மணிகண்டன் மற்றும் எடிட்டர் அஜித்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணிக்கிறது. முத்துவாக விஜய் சேதுபதி இயல்பான அதேசமயம் ஆழமான நடிப்பில் ஜொலிக்கிறார். எண்பதுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் மாடலாக இருந்த மிலி...
CLOSE
CLOSE