Thursday, November 26

Blog

மீண்டும் திரையரங்குகளில் ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம்!

மீண்டும் திரையரங்குகளில் ‘துரந்தர்’ படத்தின் முதல் பாகம்!

News
ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! இன்று முதல் மீண்டும் திரையரங்குகளில் துரந்தர் முதல் பாகம்! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் தயாரித்த துரந்தர் படம், துரந்தர் பழிவாங்கல் படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக மார்ச் 12 இன்று முதல் இந்தியாவிலும், மார்ச் 13 நாளை முதல் உலகம் முழுவதும் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. வரும் மார்ச் 19 அன்று இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், உலக அளவில் பிளாக்பஸ்டர் ஆன அதன் முதல் பாகம் சர்வதேச அளவில் மீண்டும் திரையிடப்பட உள்ளது. துரந்தர் திரைப்படத்தின் அலையே இன்னும் ஓயவில்லை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட துரந்தர் பழிவாங்கல் திரைப்படம் மார்ச் 19 அன்று வெளியாக உள்ள நிலையில், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் பி62 ஸ்டுடியோஸ் இணைந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான துரந்தர் முதல் பாகத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருகின்றன. உலகெங்கிலும் சுமார் 500 திரைகளில் இப்படம் மீண்டும் வெளியாகிறது. ...
தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்துக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

News
நண்பரும் சக நடிகருமான டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு, தற்போது தாங்கள் மேடை ஒன்றில் மாபெரும் நடிகர் காந்தாராவ் அவர்களைப் பற்றி பேசிய, பாராட்டிய காணொளி கண்டேன். ஒரு நடிகர் இன்னொரு நடிகரை பாராட்டுவது மகிழ்ச்சிக்குரியது. திறனை பரஸ்பரம் சிலாகிப்பது உன்னதமானது. ஆனால் தாங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களை கீழ்த்தரமான முறையில் ஒப்பிட்டு பேசியது எனக்கு அதிர்ச்சியூட்டும் மனச்சங்கடத்தை ஏற்படுத்தியது. இது எனக்கு மட்டுமல்ல. இதை காணும் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்படுத்தும். தமிழருக்கு மட்டுமல்ல... உங்கள் சகாக்களே புண்பட்டு பேசிய ஒலி செய்திகள் அனுப்பியுள்ளனர். இச்செயல் கண்டிக்கத்தக்கது. நமக்குள் அதாவது தமிழ் தெலுங்கு சினிமா துறையில் திறமையானவர்களை பரிவர்த்தனை செய்துகொள்வது ஒரு நீண்டகால மரபாகவே இருந்து வருகிறது. நடிகர்கள் இயக்குனர்கள் இசை விற்பன்னர்கள் என எல்லாரையும் என். டி.ஆர் , ஏ.என்.ஆர், எஸ் வி ர...
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு!

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு!

News
‘தாய் கிழவி’ திரைப்படத்தின் வெற்றிவிழா நிகழ்வு! பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் வெற்றி விழா நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் கலையரசு பேசியதாவது, “படத்தின் ரஷ்ஷஸ் பார்த்தபோதே வெற்றி விழா கொண்டாட்டத்தை எங்கு நடத்த வேண்டும் என்று யோசித்தேன். படத்தில் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. குறிப்பாக படத்தை தயாரித்த சிவாவுக்கும் படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஏற்ற ராதிகா மேமுக்கும் நன்றி! படத்தின் ரிலீஸ்க்கு முன்பு 250 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டோம். ஆனால் படத்திற்கு வந்த வரவேற்பை அடுத்து க...
48 மணி நேரத்தில் 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்ததுரந்தர் பழிவாங்கல்!

48 மணி நேரத்தில் 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்ததுரந்தர் பழிவாங்கல்!

News
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர், வெளியான வெறும் 48 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 312 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது! ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரம்மாண்டமான துரந்தர் பழிவாங்கல் படத்தின் ட்ரைலர் கடந்த மார்ச் 7ம் தேதி வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே இந்த ட்ரைலர் உலக அளவில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ட்ரைலர் வெளியாகி வெறும் 48 மணி நேரத்திற்குள், அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து 312 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இது இந்த படத்தின் மீதான ரசிகர்களின் அளப்பரிய எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகிறது. அதுமட்டுமின்றி, 45க்கும் மேற்பட்ட நாடுகளில் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து, இந்த படம் சர்வதேச அளவில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தையும் நிரூபித்...
பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் ஃபேண்டஸி காமெடி படம்!

பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் ஃபேண்டஸி காமெடி படம்!

News
இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் தொடங்கி வைத்த ஜே பி சினிமாஸ் நிறுவனத்தின் 'புரொடக்ஷன் நம்பர் ஒன்'! ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ' புரொடக்ஷன் நம்பர் ஒன்' படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 'மகாராஜா' படத்தின் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படக் குழுவினரை வாழ்த்தினார். அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் முனீஸ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, பாலாஜி சக்திவேல், விவேக் பிரசன்னா, கல்கி, ஜென்சன் திவாகர், வினோத் முன்னா, அனன்யா ராவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஸ்ரீதர் சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஆனந்த் காசிநாத் இசையமைக்கிறார். படத்தொகுப்ப...
‘இறுதிப்பக்கம்’ இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்!

‘இறுதிப்பக்கம்’ இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர்!

News
'இறுதிப்பக்கம்' இயக்குநரின் அடுத்த அதிரடி: புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர், பூஜையுடன் துவங்கியது! 'இறுதிப்பக்கம்' மற்றும் 'டியர் ரதி' ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, Insomniac’s Dream Creations நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை (Production No. 3) பிரம்மாண்டமான பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய படமான 'இறுதிப்பக்கம்' மூலம் ஒரு நேர்த்தியான மர்டர் மிஸ்டரியைக் கொடுத்த இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இப்படத்தின் மூலம் மீண்டும் திரில்லர் பாணிக்கே திரும்பியுள்ளார். ஆனால், இது வழக்கமான பாணியில் அமையாமல், தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத ஒரு புதிய தளத்தில், ரசிகர்களுக்கு முற்றிலும் புதுவிதமான அனுபவத்தைத் தரும் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகவுள்ளது. இப்படத்தில்'பாண்டியன் ஸ்டோர்ஸ்' மற்றும் குமார சம்பவம் புகழ் குமரன் தங்கராஜன், ஸ்மேகா நடிக்க, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மைப் பாத்தி...
நயன்தாரா வலுவான பாத்திரத்தில் நடிக்கும் “பேட்ரியாட்”( Patriot)

நயன்தாரா வலுவான பாத்திரத்தில் நடிக்கும் “பேட்ரியாட்”( Patriot)

News
பெண்கள் தினத்தில் “பேட்ரியாட்”( Patriot) படத்திலிருந்து,  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா   சிறப்பு கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டது! மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் “பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த மிகப்பெரிய மல்டி ஸ்டார்ரர்  திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் நேற்று காலை 10 மணி முதல் ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் வெளியிடப்பட்டன. இதில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ ச...
சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ திரைப்பட டீசர் வெளியீடு!

சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ திரைப்பட டீசர் வெளியீடு!

Uncategorized
சர்வதேச மகளிர் தினத்தில் ‘மயிலா’ டீசர் வெளியீடு — IFFR Premiere மற்றும் NETPAC பரிந்துரைக்கு பிறகு புதிய கவனம்! சென்னை, மார்ச் 8: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, “மயிலா” திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. பெண்களின் வலிமை, பொறுமை மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் காட்டும் துணிச்சலை பிரதிபலிக்கும் கதையை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. மயிலா படத்தை எழுதி இயக்கியவர் செம்மலர் அன்னம்.தமிழ் நாட்டின் கிராமப்புற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள “மயிலா”, சுயமரியாதை, நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கைப் போராட்டத்திற்காக முயற்சி செய்யும் ஒரு வேலைக்குப் போகும் சாதாரண பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை அவளுடைய சிறிய மகளின் பார்வையில் கூறுகிறது. இந்தப் பார்வையின் மூலம், குடும்பங்களையும் சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் பெண்களின் வாழ்வியலை இப்படம் வெளிப்படுத்துகிறது. “மயிலா” உலகத் திரையரங்கி...
உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு”!

News
Movietron Production தயாரிப்பில் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது ! Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உறியடி மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி நாயகன்–நாயகியாக இணையும் புதிய திரைப்படமான அறிவு படத்தின், படப்பிடிப்பு இன்று எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது. Movietron Production நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ளது. சமூக அக்கறையும் விறுவிறுப்பும் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இந்தப் படத்தில் I. M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்கள...
ஏப்ரல் 3-ம் தேதி வேட்டையை துவக்கும் ‘காளிதாஸ் 2’!

ஏப்ரல் 3-ம் தேதி வேட்டையை துவக்கும் ‘காளிதாஸ் 2’!

News
மிரட்டலான போஸ்டருடன் வெளியான 'காளிதாஸ் 2' ரிலீஸ் தேதி : ஏப்ரல் 3-ம் தேதி வேட்டை ஆரம்பம்! 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம், அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், எதிர்பாராத கிளைமாக்ஸாலும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது அதன் இரண்டாம் பாகமான 'காளிதாஸ் 2' உருவாகியுள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் 3ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், மற்றுமொரு முதன்மை கதாபாத்திரத்தில் அஜய் கார்த்தி நடித்துள்ளார்.  'பூவே உனக்காக' புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதன் மூலம் ...
CLOSE
CLOSE