பூஜையுடன் துவங்கிய ‘குட் நியூஸ்’ (GOOD NEWS) திரைப்படம்!
மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!
மூவிட்ரான் புரொடக்ஷன் (Movietron Production) நிறுவனம் தங்களது இரண்டாவது தயாரிப்புப் படத்தைத் சென்னையில் பாரம்பரிய முறைப்படி, பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. *"குட் நியூஸ்" (GOOD NEWS)* என்று பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், அனைத்து வயதினரும் ரசித்து மகிழும் வண்ணம், பாசம், நகைச்சுவை மற்றும் நெஞ்சை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த ஒரு முழுமையான குடும்பத் திரைப்படமாக உருவாகவுள்ளது.
இவ்விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தின் முதல் காட்சிக்கான க்ளாப் அடித்து *இயக்குநர் விஜய்* துவக்கி வைக்க, புகழ்பெற்ற *இயக்குநர் பாலா* கேமராவை ஆன் செய்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். *நடிகர் ஆர்யா* சிறப்பு விருந...





