Tuesday, February 17

டியர் ரதி _ விமர்சனம்

Loading

டியர் ரதி _ விமர்சனம்

ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் நாயகன் சரவணா விக்ரம், பெண்களுடன் சகஜமாக பேசிப் பழக கூச்சப்படுபவர்.

அவரது இந்த பழக்கத்தை போக்குவதற்காக உடன் பணியாற்றும் நண்பர் ஒருவர், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்யும் இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

அங்கு சந்திக்கும் நாயகி ஹஸ்லி அமானை சரவணா விக்கிரமுக்கு மிகவும் பிடித்து விடவே, ஒரு நாள் முழுவதும் அவருடனே இருக்க விரும்பி,  டேட்டிங் செய்ய முடிவு எடுக்கிறார்.

சரவணா விக்ரமுடன்  நாயகி ஹஸ்லி அமான் வெளியே சென்றுவிட அவர், தப்பித்துச் சென்று விட்டதாகக் கருதி மசாஜ் சென்டர் மேலாளர் தேடத் தொடங்குகிறார்.

அதே சமயம் ஹஸ்லி அமான் தன்னை விட்டு விலகிச் சென்றதால் பிசினஸ் வெகுவாக பாதிக்கப்பட்ட ஒருவரும் ஹஸ்லியை தேட ஆரம்பிக்கிறார்.

இந்தத் தேடலில் நடக்கும் தொடர் காமெடி கலாட்டாதான் டியர் ரதி.

சற்றே இடைவெளிக்குப் பிறகு ரசிக்கத் தக்கும் விதத்தில் நல்லதொரு பிளாக் காமெடி திரைப்படம் வந்திருக்கிறது.

பெண்களுடன் பேச கூட்டப்படும் வேடத்தில் வரும் சரவணா விக்ரமுக்கு அவரது அப்பாவி முகம் ஏற்ற பாத்திரத்தை இயல்பாக வெளிப்படுத்த  வெகுவாக உதவி இருக்கிறது.

நாயகி ஹஸ்லி அமானும் ஏற்ற வேடத்தின் பலத்தை உணர்ந்து முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்  என்றால் அது லோகேஷ் இளங்கோவனின் ஒளிப்பதிவுதான்.

பெரும்பாலானவை இரவு காட்சிகளாக இருந்தாலும் அதை மிக அழகாகவும் தெளிவாகவும் படமாக்கி படத்தின் தரத்தை உயர்த்த உதவியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

நான் லீனியர் முறையில் சொல்லப்படும் கதையில் படத்தொகுப்பாளரின் பங்கு முக்கியமானது.

கச்சிதமாக கத்தரி போட்டு படத்தை தொகுத்திருக்கிறார் எடிட்டர் பி பிரேம்.

துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் போர் அடிக்காத வகையில் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் பிரவீன் கே மணி.

நம்மை அறியாமல் குபீர் என சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன.

பிளாக் காமெடி வகை படங்களை விரும்பும் ரசிகர்களை டியர் ரதி வெகுவாக கவரும் என்பதில் ஐயமில்லை.