Wednesday, January 21

நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்த ‘குண்டு’ படத்தின் வெற்றி விழா!

Loading

சினிமாத்துறையில்படம் வெளியான இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் என ஒன்று வைப்பார்கள் பாருங்கள் மிகக் கொடுமையாக இருக்கும். தன் மகன் துருவ் விக்ரமை கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகர் விக்ரம், தன் அபிமான இயக்குநர் பாலா இயக்கத்தில் வர்மா என்றொரு படம் எடுத்தார், அத்தனை கோடிகள் கொட்டியழுதும், நிறைவடைந்த படம் தனக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லி அதை அப்படியே பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, மூலப்படமான தெலுங்கில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஓருவரை அழைத்து வந்து இயக்குநராக அறிமுகப்படுத்துகிறேன் என்று ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதை அப்படியே படமாக்கினார்.
படம் வெளியான முதல் நாளே கடுமையான விமர்சனங்கள் வரவே, பத்திரிகையாளர்களுக்கான காட்சியைக்கூட போடமால், சுமார் இருபது முப்பது பேருக்கு மட்டும் காலை நான்கு மணிக்கோ ஐந்து மணிக்கோ பொதுத்திரையரங்ம் ஓன்றில் பொது மக்களுடன் போட்டார்.
இதுவரை சொன்ன செய்திகளில் பெரிதான விஷயம் ஒன்றும் இல்லை. இனி சொல்லப்போவதுதான் செய்தி. இரண்டு மூன்று நாட்கள் கழித்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பத்திரிகையாளர்களுக்கு காக்டெயில் பார்ட்டி ஒன்றை நடத்தி வெற்றிக்கொண்டாட்டத்தை சோகத்துடன் முடித்து முட்டார்.
சரி இப்போது இதையெல்லாம் இங்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன
நேற்று 12-12-2019ல் நடந்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் உண்மையான வெற்றிக் கொண்டாட்டத்தை நன்றி நவிலும் விழாவாக மாற்றிக்கொண்டதுதான். குண்டு வெளியான ஓரிரு நாட்களில்
இன்னும் அதிகப்படியான திரையரங்குகள் இப்படத்து திரையரங்க உரிமையாளர்கள் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள். இதுதான் குண்டு பட்துக்குக் கிடைத் நஜமான வெற்றி.
படத்தைத்த தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர்கள் ஜனநாதன், லெனின் பாரதி, ரவிகுமார்,ஸ்ரீகணேஷ் மற்றும் கவிஞர் அறிவுமதி, என்று பலரும் கலந்து கொண்ட இந்த விழாவின்போது, துவக்கத்தில் வரவேற்றுப் பேசிய இயக்குநர் அதியன் ஆதிரை, மூளையில் தோன்றிய சொற்களை வார்த்தைகளாக்காமல், இதயத்திலிருந்து வந்த செய்திகளை யதார்த்தமாக மேடையில் பகிர்ந்து கொண்டது விழாவுக்கு வந்த அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. மாத்திரமல்ல. படத்தின் நாயகி ஆனந்தியில் ஆரம்பித்து நடிகை ரித்விகாவரை அனவைரையும் தோழர், என்றே அழைத்தார். இயக்குநர் ரஞ்சித்தையும் கவிஞர் அறிவுமதியை மட்டுமே, ரஞ்சித் அண்ணன், மதி அண்ணன் என்று அழைத்ததாக நினைவு.

இந்நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் மிகவும் உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது,
“படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள்தான், நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவு செய்யத் தூண்டியது. நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில்தான் நான் வந்தேன்.

நான் தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது. அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாத்துக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன். “பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்கள் மீது பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். பிரஸுக்கு காட்ட வேண்டும் என்று முடிவானதும் இன்னும் பயமாக இருந்தது. ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரி செல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப் படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றி பெற்றது. அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. அதியன் உழைப்பு எனக்குத் தெரியும்.

இந்த டீம் திறமைமிக்கது. தகுதி, திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப் படமும் பிரஸுக்கு போட்டுக்காட்டுவதில் பயம் இருந்தது. ஆனால் இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள். ரொம்ப பிரதானமா்ன வெற்றியை பிரஸும் மக்களும் தந்தார்கள். வெறும் எதிர்ப்பை மட்டும் காட்டாமல் நல்ல விசயத்தை கொண்டு சேர்ப்பதிலும் பிரஸ் முன்னணியில் இருக்கிறது. சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை சுலபமாகக் கடத்த முடியும் என்றால் அது சினிமாவில்தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்” என்றார்.


கவிஞர் அறிவுமதி பேசும்போது, புற நானுறு பாடல் ஒன்றில், அப்பா, அம்மா, குட்டி என்று இருந்த மான் குடும்பம் ஒன்றின் அப்பா மானை புலி தன் பசிக்காக வேட்டையாடியதையும், ஈடு செய்ய முடியாத இந்த பேரிழப்பை சில நிமிடங்களி்ல் அந்த அம்மா மான் மறந்து விட்டு தன் பசிக்காக புல் மேயச்சென்ற புறநானுறு பாடலை குறிப்பிட்டு, ஏன் அந்த அம்மா மான் புல் மேயச் சென்றது என்ற காரணத்தையும் வெகு அழகாகப் தன் உரையில் பதிவு செய்தது பார்வையாளர்கள் வெகுவாக ரசிக்கும்படி அமைந்திருந்தது.

மொத்தத்தில் முலாம் பூசப்படாத முழு உண்மைகளை சிறப்பு விருந்தினர்களும், படத்தில் நடித்த நடிக நடிகயர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களும் மேடையில் பகிர்ந்து கொண்ட பாங்கு வெற்றி விழாவை அர்த்தமுள்ளதாக்கியது.

விழா நிகழ்ச்சிகளை கவிஞர் முருகன் மந்திரம் வெகு சிறப்பாக தொகுத்தி வழங்கினார்.