Tuesday, July 14

ஐ நோபடி விமர்சனம்

Loading

ஐ நோ படி விமர்சனம்

அசத்தலான ஆரம்ப காட்சி என்பது சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகை படத்தில் ஒன்றுதான் ‘ஐ நோ படி’.

வங்கி ஒன்றை கொள்ளையடித்து பணத்துடன் வெளியேறும் கொள்ளையர்கள், வங்கியில் இருந்த பிரித்வி ராஜை கண்களை கட்டி பிணையக் கைதியாக துப்பாக்கி முனையில் தங்களுடன் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கின்றனர்.
கொள்ளையர்கள் செல்லும் காரை போலீஸ் துரத்துகிறது.

கொள்ளையன் ஒருவன் சட்டையில் இருந்த அடையாள முத்திரையை கைப்பற்றிக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி விடுகிறார் பிரித்திவிராஜ்.

கொள்ளையர்களின் கார் விபத்தில் சிக்க, அதில் பயணித்த அனைவரும் இறக்கின்றனர்.

இப்போது உயிரோடு இருக்கும் பிரித்திவிராஜை போலீஸ் விசாரணை செய்வதுடன், சந்தேக வளையத்திலும் கொண்டு வருகிறது.

வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் பிரத்விராஜிடம்தான் இருக்கிறது என்று ஊடகங்கள் செய்தியை கிளப்பி விட,   சில தேவையற்ற பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன.

கொள்ளையடித்த பணத்தில் பத்தாயிரம் கொடுக்கும்படி கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் கேட்கின்றனர் . தொடர்ந்து
ஆட்டோக்கார் ஒருவர் தன் வாகனத்தை பிரத்விராஜின் கார் மீது மோதி விட, நஷ்ட ஈடாக கொள்ளையடித்த பணத்தில் 5 லட்சம் ரூபாய் கேட்கிறார்.

கொள்ளையடித்த நபர்கள் இறந்துவிட அந்த பணம் எங்கிருக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் பிரித்விராஜ் அந்த பணத்தை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

கொள்ளையடிக்கப்பட்ட பணம் கிடைத்ததா?

இந்த கொள்ளை சம்பவத்திலிருந்து பிரித்வி ராஜ் வெளியில் வந்தாரா என்பதுதான் பரபரப்பான ‘ஐ நோ படி’ படத்தின் திரைக்கதை.

படத்தின் துவக்கத்திலேயே ரசிகர்களை இருக்கை முனைக்கு இழுத்து வந்து விடும் இயக்குனர் நிஜாம் பஷீர் , இறுதிக் காட்சி வரை அந்த பரபரப்பை நமக்கு கடத்துகிறார்.

எழுத்தாளர் சமீர் அப்துல் எழுதிய வலுவான கதை இயக்குனருக்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் நேர்த்தியான பணி படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகிறது .

ஜாக் விஜய் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

கண்டிப்பாக தவற விடாமல் பார்க்க வேண்டிய வித்தியாசமான திரில்லர் ஐ நோ படி.