![]()

நட்சத்திரங்கள்: ஷாருக்கான், விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு
ஒளிப்பதிவு : ஜி கே விஷ்ணு
இசை: அனிருத்
இயக்கம் :அட்லி
ஜேம்ஸ் பாண்ட் 007 படபாணியில் எடுத்ததும் வருமே ஓர் பரபரப்பான ஆக்ஷன் காட்சி, அப்படி அட்டகாசமான ஆக்சன் காட்சியுடன் படம் துவங்குகிறது.
ஆறு பெண்களின் துணையுடன் பயணிகள் நிரம்பிய மெட்ரோ ரயில் ஒன்றைக் கடத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ஷாருக்கான். ரயிலையும் அதில் உள்ள பயணிகளையும் மீட்க விசேட அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் நயன்தாரா.
ஆயுத வியாபாரியான விஜய் சேதுபதி பெற்ற பல்லாயிரம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்கின்றன. விஜய் சேதுபதியின் மகளும் கடத்தப்பட்ட ரயிலில் இருக்கிறார். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் மட்டுமே விஜய் சேதுபதியின் மகளையும் மற்ற பயணிகளையும் விடுவிக்க முடியுமென ஷாருக்கான் நிபந்தனை விதிக்கிறார்.
பணத்தை கொடுப்பது போல் கொடுத்து கடத்தல்காரனை பிடித்து விடலாம் என நயன்தாரா திட்டமிடுகிறார்.
ஆனால் விஜய் சேதுபதி வங்கிக்கு மாற்றிய பணம் அனைத்தும் சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொள்ள விவசாயிகளின் வங்கி கணக்குக்கு சென்று விடுகிறது. இருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களிடம் கொடுக்கும் ராபின்ஹுட்போல் ஊழல்வாதிகளுக்கு கிடுக்கிப்பிடி போட்டு அவர்கள் கொள்ளை அடித்த பணத்தை மக்களுக்கு பயன்படச் செய்கிறார் இந்த நவீன ராபின்ஹுட்.
ஒரு கட்டத்தில் ஷாருக்கானை கொலை செய்ய விஜய் சேதுபதி முயலும் போது அப்பா ஷாருக்கான் வந்து காப்பாற்றுகிறார்.
பின்னர் அப்பா மகன் இணைந்து விஜய் சேதுபதி எப்படி எதிர்கொண்டார்கள் என்பது விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சொல்லப்படுகிறது.
தான் தேடும் குற்றவாளிதான் ஷாருக்கான் என்பது தெரியாமல் நயன்தாரா அவரே திருமணம் செய்து கொள்வது நம்பும்படியாக இல்லாதது மட்டுமல்ல, அபத்தமாகவும் இருக்கிறது.
ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் மரணிக்கும் அவலம் விவசாயிகள் தற்கொலை ஆயுதம் வாங்கியதில் ஊழல் என நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிக்கும் விஷயங்களை வைத்து அட்லீ எழுதியிருக்கும் இந்த human interest story அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.
அனிருத்தின் இசையும் பாடல்கள் எழுந்து ஆட்டம் போட வைக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு.குறிப்பாக சண்டை காட்சிகளிலும் பாடல் காட்சிகளிலும் முத்திரையை பதிக்கிறார் ஒளிப்பதிவாளர். மொத்தத்தில் சிறந்த பொழுதுபோக்கு படம்.
மதிப்பெண் 3.5/5
