Monday, April 20

பருத்தி _ விமர்சனம்

Loading

பருத்தி _ விமர்சனம்

சாதிய பாகுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு வெளி வந்திருக்கும் மற்றும் ஒரு படம் பருத்தி.

கணவனை இழந்த சோனியா அகர்வால், தன் உறவுக்காரர் ஒருவருடன் ஊருக்கு ஒதுக்கப்புறமாக தங்கி கிராமத்தில் கிடைக்கும் விவசாய வேலைகளை செய்து வருகிறார்.

இதே கிராமத்தில் பள்ளியில் படிக்கும் மாஸ்டர் திலீப்ஸ் தன் பாட்டியுடன் வசித்து வருகிறார்.

தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த திலீப்ஸ், உயர் ஜாதியை சேர்ந்த தனது பள்ளி தோழி வர்ஷிதாவுடன் நெருக்கமாகப் பழகி வருகிறார்.

வர்ஷிதாவின் தந்தையோ சிறிதும் ஜாதி பாகுபாடு பார்க்காதவர்.
எனவே தன் மகள் தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த பள்ளி தோழனுடன் பழகுவதை ஆட்சேபிக்காதவர்.

இந்த சூழலில் திலீப்புக்கு சோனியா அகர்வால்தான் தனது தாயார் என தெரிய வருகிறது.

பெற்ற மகன் திலீப்ஸை விட்டுப் பிரிந்து அதே கிராமத்தில் சோனியா அகர்வால் தனித்து வாழ்வது ஏன்?

ஜாதிய கொடுமைகளில் சிக்கிய திலீப்ஸ் அதிலிருந்து மீண்டாரா இல்லையா என்பதுதான் பருத்தி படத்தின் கதை.

சோனியா அகர்வாலுக்கு பலமான பாத்திரம் கிடைத்திருக்கிறது.
அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

பள்ளியில் படிக்கும் பதின் பருவ பாத்திரங்களில் வரும் திலீப்ஸ் மற்றும் வர்ஷிதா இருவரும் நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

ரஞ்சித் வாசுதேவனின் இசையமைப்பு சுமார் ரகம்தான்.

எளிய கிராமத்தை தன் யதார்த்தமான ஒளிப்பதிவில் படம் பிடித்து கதைக்கு வலு சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ்.

நல்ல கதையை தேர்வு செய்த இயக்குனர் குரு இன்னும் வலுவாக திரைக்கதையை அமைத்திருந்தால் படம் பரவலான கவனத்தை ஈர்த்து பாராட்டுதல்களை பெற்றிருக்கும்.