![]()

கோபுரம் பிக்சர்ஸ் சார்பில் கே பாபு ரெட்டி மற்றும் ஜி சதீஷ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் ரங்கோலி படத்தை வாலி மோகன்தாஸ் இயக்கி இருக்கிறார்.
அமரேஷ் பிரார்த்தனா ஆடுகளம் முருகதாஸ், அக்ஷயா, அமித் பார்கவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் கதை என்னவென்று பார்ப்போமா?
சலவைத் தொழில் செய்து வரும் காந்திக்கு (ஆடுகளம் முருகதாஸ்) மனைவி காளியம்மாள் (சாயஸ்ரீ பிரபாகரன்) மகள் வேம்பு லட்சுமி (அக்ஷயா) ஆகியோர் உதவியாக இருக்கின்றனர்.
மகன் சத்யா (ஹமரேஷ்) கார்ப்பரேஷன் பள்ளி ஒன்றில் படிக்கிறான். நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட சண்டை போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று விட, சத்யாவை வேறு நல்ல பள்ளியில் சேர்க்க முடிவு செய்கிறார் காந்தி. வட்டிக்கு கடன் வாங்கி கான்வென்ட் பள்ளியில் மகனை சேர்க்கிறார். மற்ற மாணவர்கள் லோக்கல் என்ற சத்யாவை கிண்டல் செய்ய அங்கும் பிரச்னை அடிதடி என்று தொடர்கிறது. இதன் காரணமாக படிப்பில் பின் தங்குகிறார் சத்யா.
போதாக்குறைக்கு உடன்படிக்கும் பாரு என்ற பார்வதி (பிரார்தனா) மீது ஈடுபாடு ஏற்படுகிறது.
சத்யா பார்வதி இருவரையும் சம்மந்தப்படுத்தி கழிவறை சுவரில் யாரோ எழுதி வைக்க மீண்டும் பிரச்சனை வெடிக்கிறது.
மாற்று சான்றிதழ் கொடுத்து சத்யாவை வெளியில் அனுப்ப பிரின்ஸ்பால் முடிவு செய்ய, அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தண்டனையை தவிர்க்கிறார் சத்தியா.
சில நாட்கள் கழித்து சக மாணவர்களுடன் மீண்டும் சண்டை ஏற்பட இந்த முறை சத்யாவின் தந்தையே மாற்று சான்றிதழை வாங்கிக்கொண்டு பழைய பள்ளியிலேயே கொண்டு போய் சத்யாவை சேர்க்கிறார்.
கார்ப்பரேஷன் பள்ளியிலேயே மாணவர்கள் இந்த அளவுக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க முடியாது என்பது ஒரு புறம் இருக்க, கான்வென்ட் பள்ளியிலே இப்படி எல்லாம் சண்டை போடுவதாக சர்வசாதாரணமாக காட்டுகிறார் இயக்குனர்.
பார்வதி நட்பு ரீதியில் பேச வரும்போது அதை ஏற்க சத்யா மறுப்பதற்கு வலுவான காரணம் எதுவும் சொல்லப்படவில்லை
அதேபோல் தன் எதிரியான மாணவன் கவுதமை பாட்டு போட்டியில் கலந்து கொள்ள வைத்து, அவன் தோல்வி அடைவான் என்று நினைத்து தான் அப்படி செய்தேன் என்று சொல்வதும் அபத்தமாக இருக்கிறது.
இப்படி கதை, காட்சி அமைப்பில் பல்வேறு குளறுபடிகள்.
படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் சத்யா குடும்ப உறுப்பினர்களின் பாசம் ஒருவரை ஒருவர் அந்த அளவுக்கு நேசிக்கிறார்கள்… உறுதுணையாக இருந்து உதவுகிறார்கள். அக்கா தம்பி பாசம், அப்பா பையன் பாசம், அம்மா மகன் பாசம் இதெல்லாம் ரசிக்கும்படி இருக்கிறது.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவும் கே எஸ் சுந்தரமூர்த்தி இசையும் படத்துக்கு பலமாக அமைந்திருக்கின்றன.
கார்ப்பரேஷன் பள்ளியின் சாதக பாதக அம்சங்கள், கான்வென்ட் பள்ளியின் சாதகபாதக அம்சங்கள் ஆகியவற்றை வைத்து வலுவான கதையை உருவாக்கி இருந்தால் காட்சிகளையும் சிறப்பாக அமைத்திருக்கலாம்.
என்ன காரணத்தினால் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர் வாலி மோகன்தாஸ்
