![]()

கருவறை என்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்குத் தாங்களே பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு வாழ்கிறார்கள்.
அவர்கள் அனுமதி இல்லாமல் வெளியாட்கள் யாரும் கிராமத்துக்குள் நுழைய முடியாது. அதைப்போலவே உள்ளூர்வாசிகளும் அனுமதி அல்லாமல் அனாவசியமாக வெளியூர்களுக்கு சென்று வரவும் முடியாது.
சிறந்த கிராமத்துக்கான விருது கருவறை கிராமத்துக்கு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவிக்க, ஜனாதிபதியே நேரில் வந்து கொடுத்தால்தான் விருதையே வாங்குவோம் என்று அந்த கிராம மக்கள் அடம் பிடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் கிராமத்தையா சிறந்த கிராமம் என ஜனாபதி தேர்வு செய்தார் என்று கேள்வி கேட்கப்படாது காரணம் பின்னால் இன்னும் இதைவிட அபத்தமான காட்சிகள் எல்லாம் வரப்போகின்றன.
கிராம மக்களை சமாதனம் செய்ய வந்த அமைச்சர் அவமானப்படுத்தப்படுகிறார். இதற்காக இந்த ஊரையே பழி வாங்கத் திட்டமிடுகிறார் அவர். கடைசியில் ஜனாதிபதியே கிராமத்துக்கு நேரில் வந்து இந்த விருதை வழங்கிவிட்டுப் போகிறாராம். இது படத்தின் முதல் பாதி.
கருவறையாக இப்போது இருக்கும் இந்த கிராமம் ஒரு காலத்தில் தறுதலை கிராமாக (ஆமாம் கிராமத்தின் பெயரே தறுதலையாம்) இருந்தது.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணியும் வெள்ளைச்சாமி என்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர்தான் தன் சொந்த செலவில் ஊர் பெண்களுக்கெல்லாம் சுயஉதவிக் கடன் கொடுத்தும், ஒயின் ஷாப்புக்கு பூட்டு போட்டும்…. இப்படி பல காரியங்களைச் செய்து தறுதலை கிராம மக்களின் மனதை மாற்றி கருவறை என மாற்றியிருப்பதை விலாவாரியகச் சொல்கிறது இரண்டாம் பகுதி.
தறுதலையாக கிராமம் இருந்த காலத்தில் ஆண்கள் எல்லாம் குடிகாரர்களாகவும், பெண்கள் எல்லாம் கணவருக்குத் தெரிந்தும் தெரியாமலும் சோரம் போவதுபோல் அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் எல்லாம் உவ்வே….ரகம்தான்.
படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜே.வி.ஆர். என்ற ஜெயசந்திரன். பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன் திரைப்படக்கல்லூரியில் படித்தவராம். படத்தைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை.
பைஜூ ஜேக்கப்பின் இசையில் உருவான பாடல்களும், பின்னணி இசையும் ரொம்பவும் சாதாரணமாகத்தான் இருக்கின்றன.
ஹரி குமார், கெளசல்யா, ராதா ரவி, ரவிமரியா, மனோபாலா அருள்தாஸ், ஆதித்யா கதிர் போன்ற அனுபவம் மிக்க நடிகர்கள் இருந்தாலும் யாரையும் சரியாகப் பயன்படுத்த முடியவில்லை இயக்குநரால். காரணம் கதையும், காட்சியமைப்புகளும் அப்படி அமைந்திருக்கின்றன.
மோசமான பழக்க வழக்கமுள்ள மனிதர்கள் வாழ்ந்த ஒரு கிராமம் எவ்வாறு மாற்றம் அடைந்து ஜனாதிபதியிடம் சிறந்த கிராமம் என்ற கதைக் கரு மட்டும் நன்றாக இருக்கிறது. மற்றபடி……


