![]()

சாமானியன் விமர்சனம்
ராமராஜன், பல வருடங்களுக்குப் பிறகு நாயகனாக நடித்துள்ள படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ‘சாமானியன்’ திரைப்படம் இன்று வெளியாகிறது.
எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள இந்தப் படத்தைுக்கு கார்த்திக் குமார் கதை எழுத, ஆர்.ராகேஷ் இயக்கி இருக்கிறார். இளையராஜா இசை அமைத்து இருக்கிறார்.
நாயகன் (ராமராஜன்) கிராமத்து மனிதர். அங்கிருந்து, தனது நண்பருடன் சென்னைக்கு வந்து இன்னொரு நண்பர் வீட்டில் தங்குகிறார்.
மறுநாள், ஒரு வங்கியை துப்பாக்கி முனையில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருன்றனர் மூவரும்.
ஏன் இந்த அதிரடி முயற்சி, அது நடந்ததா என்பதே கதை.
கிராமத்து வேடத்தில் வந்து, டவுசருடன் மாட்டுக்குப் பாட்டு பாடி ரசிகர்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர், ராமராஜன். இந்தப் படத்திலும் ஆரம்பத்தில் கிராமத்துக் காட்சியில் தோன்றுகிறார்.
ஆனால் பிறகு அவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதைச் சொல்கிறார்கள். இதுவே ஒரு இன்ப அதிரச்சிதான்.
வழக்கம்போல் ராமராஜன் தனது இயல்பான வசன உச்சரிப்பு, நடிப்புடன் வலம் வருகிறார். வங்கியை கொள்ளையடிக்கக் கூடியவர் இவரா என்ற கேள்வி அவரது தோற்றத்தைப் பார்த்து எழுந்தாலும், பிறகு அதை ஏற்கும்படி செய்துவிடுகிறார்.
அவரது நண்பர்களாக வரும், ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட், மைம் கோபி, கே.எஸ்.ரவிக்குமார், விநோதினி, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.
இளையராஜா இசையில் இரு பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அபாரம்.
அருள் செல்வனின் ஒளிப்பதிவு சிறப்பு. கிராமத்து காட்சிகளையும், நகரத்தின் வங்கியையும் அழகாக படம் பிடித்து இருக்கிறது.
ராம் கோபியின் எடிட்டிங் சிறப்பு.
வங்கிகளின் கிடுக்குப்பிடியால், கடன் வாங்கியோர் படும் அல்லதை ரத்தமும் சதையுமாகச் சொல்லி இருக்கிறார்கள். வங்கி அதிகாரிகள், ரியல் எஸ்டேட் புள்ளிகளுடன் கூட்டணி வைத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என காட்சிகளை அமைத்திருப்பது நம்பும்படி இல்லை.
படத்தின் இறுதியில் அடுத்த பாகத்துக்கு அச்சாரம் போட்டு சுவாரஸ்யம் ஏற்றி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் இது படம் அல்ல பாடம்.

