![]()

நட்சத்திரங்கள் :ஜஸ்டின் விஜய், வித்யா பிரதீப், கஸ்தூரி, ராபர்ட் மாஸ்டர், அபிநயா சதீஷ்குமார்
இசை :விஜய் சித்தாந்த்
ஒளிப்பதிவு :மனுஷ் மூர்த்தி
இயக்கம் : எஸ் ஏ.பிரபு
மற்றும் ஒரு பேய் படம் …ஆனால் இது “சும்மனாங்காட்டியும்” பயமுறுத்தும் பேய் அல்ல. இறந்தவர்கள் ஆவியுடன் பேசும் படம்.
ஜஸ்டின் விஜய் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு கார் மெக்கானிக்காக ஒரு ஒர்க் ஷாப்பில் வேலை செய்கிறார்.
ஒரு காரை பாதி ரிப்பேர் செய்த நிலையில் அந்த காரை அதன் உரிமையாளர் எடுத்துச் சென்று விடுகிறார்.
பிரேக் பிடிக்காத அந்த கார் விபத்துக்ள்ளாகி உரிமையாளர் அக்கால மரணம் அடைகிறார்.
இதனால் பெரிதும் கவலையுறும் ஜஸ்டின் ஒரு மாறுதலுக்காக அமானுஷ்யங்கள், ஆவிகள் உலகம் குறித்து ஆய்வு செய்யும் நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்.
யூடியூப் சேனல் நடத்தி வரும் வித்தியா பிரதீப் ஆவிகள் குறித்த நிகழ்ச்சிக்காக ஜஸ்டினை பேட்டி எடுக்கிறார்.
பின்னர் இருவரும் சேர்ந்து பிராக்டிகல் எக்ஸ்பிரியன்ஸுக்காக ஆவிகள் இருப்பதாக சொல்லப்படும் வீட்டுக்குள் செல்கின்றனர்.
ஆவிகளிடம் இருவரும் மாட்டிக்கொண்டு திகிலான அனுபவங்களை பெறுகின்றனர்.
ஆவிகளிடம் சிக்குண்ட இருவரும் மீண்டார்களா? மாண்டர்களா? என்பது தான் படத்தின் இறுதிப் பகுதி.
பேய் படங்களுக்கு ஒளிப்பதிவும் இசையும் மிகவும் முக்கியம்.
விஜய் சித்தார்த்தின் இசை நன்றாகவே பயமுறுத்தப் பயன்பட்டு இருக்கிறது. குறிப்பாக அமானுஷ்ய வீட்டில் ஜஸ்டினும் வித்தியா பிரதீப்பும் மாட்டிக்கொண்டு அவதிப்படும் காட்சிகளில் பின்னணி இசை சிறப்பு.
மனிஷ் மூர்த்தியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.
அமானுஷ்யம் பற்றிய நிகழ்ச்சி செய்ய யூடியூப்பர் வித்யா பிரதீப், கஸ்தூரியிடம்தானே சென்று பேட்டி எடுக்க வேண்டும். ஜஸ்டினை பேட்டி எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
இப்படி பல குறைகள் படத்திலிருந்து இருக்கிறது.
இன்னும் சிறப்பாக இந்த படத்தை உருவாக்கி இருக்கலாம் ஏன் கோட்டை விட்டுவிட்டார் இயக்குனர் எஸ் ஏ பிரபு?
மதிப்பெண் 2/ 5
