Friday, October 2

டாப் கன் – விமர்சனம்

Loading

 

டாப் கன் – விமர்சனம்

மிகச் சிறந்த விமானியாகத் திகழும் டாம் க்ரூஸ், விமானம் ஒட்டுவதில் முப்பது ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஆயினும் அவ்வப்போது தனது உயரதிகாரிகளுடன் அவருக்கு ஏற்படும் உரசல்களை அவரால் தவிர்க்க முடிவதில்லை.

இந்த சூழ்நிலையில் உயிருக்கு துணிந்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஓர் ஆபத்தான பணியை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு நாட்டில் மலைப் பள்ளத்தாக்கின் மறைவான பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்தொழிக்கும் ஆபத்தான பணிதான் அது.

துணிச்சலும் திறமையும் மிக்க இளம் பைலட்டுகள் சிலரை இந்த ஆபரேஷனுக்காக அவர் பயிற்சியளித்து தயார் செய்கிறார். டாம் க்ரூஸின் இறந்தபோன நண்பர் ஒருவருடைய மகனான மைல்ஸ் டெல்லரும் இந்தக் குழுவில் இருக்கிறார். இவரால் டாம் குரூஸூடன் ஒத்துப் போக முடிவதில்லை. அவ்வப்போது சில உரசல்கள் வருகின்றன.

அனைத்து தடைகளையும் இடையூறுகளையும் வென்று தன் குழுவினருடன் சென்று அந்த ஆயுதக் கிடங்கை டாம் க்ரூஸ் எவ்வாறு அழித்தொழிக்கிறார் என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் டாப் கன்.

துவக்கத்திலிருந்து இறுதிவரை விறுவிறுப்பாக படத்தைக் கொண்டு செல்ல எக்ரென் க்ரூகர், எரிக் வாரென் சின்கெர் மற்றும் கிரிஸ்டோபர் மெக்கெர் ஆகியோர் இணைந்து எழுதிய திரைக்கதை வெகுவாக உதவுகிறது.
தான் பயிற்சியளித்த குழுவினருடன் ஆயுதக் கிடங்கை டாம் குரூஸ் நெருங்கிய பிறகு ஏற்படும் பரபரப்பை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தியதற்காக இயக்குநர் ஜோசப் கோசின்ஸ்கிக்கு சபாஷ் சொல்ல வேண்டும். காற்றை கிழித்துக் கொண்டு பறக்கும் விமானத்தில் நாமே பயணித்ததைப் போன்ற பரபரப்பான அனுபவத்தை பார்வையாளர்களுக்குத் தருகிறார் ஒளிப்பதிவாளர்.
ஆயுத கிழங்கை அழித்த பிறகு எதிரிகளால் சுடப்படும் விமானத்திலிருந்த டாம் க்ரூம் இனி பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று உயரதிகாரி நனைத்ததற்கு மாறாக, டாம் க்ரூஸ் எதிரி முகாமுக்குச் சொந்தமான ஒரு ஒட்டை ஒடிசல் விமானத்திலேயே தப்பிப்பதும், மைல்ஸ் டெல்லரையும் காப்பாற்றி அழைத்து வருவதும் ரசமான காட்சிகள்.
விறுவிறுப்பை விரும்பும் ரசிகர்கள் தவறாமல் கண்டு ரசிக்க வேண்டிய படம் டாப் கன்.