Monday, September 21

விஷமக்காரன் – விமர்சனம்

Loading

விஷமக்காரன் – விமர்சனம்

வழக்கமான முக்கோண காதல் கதையை முற்றிலும் புதிய பாணியில் சொல்லியிருக்கும் படம் விஷமக்காரன். பொதுவாக முக்கோண காதல் கதைகளில் சம்பவங்கள், கதையை திருப்புமுனைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் என்று பலவும இருக்கும். ஆனால் இந்த விஷமக்காரனிடம் அதெல்லாம் இல்லை. சம்பந்தப்பட்ட மூன்று பேரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்….

வாழ்வில் ஏற்படும் குழப்பங்களுக்கு உளவியல் ரீதியில் தீர்வுகள் காண கவுன்சிலிங் தருபவர் டாக்டர் அக்னி. இவரும் தரங்கினி என்ற பெண்ணும் தீவிரமாகக் காதிலிக்கிறார்கள். ஜே.பி.மார்கன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வெளிநாடு செல்லும் கனவில் இருக்கும் தரங்கினி ரெஃப்ரென்ஸுக்கு அக்னியின் தொடர்பு எண்ணைக் கொடுக்கிறாள். ஆனால் தரங்கனி தன்னைவிட்டுப் பிரிந்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற ஒரு பொஸஸிவ் நோக்கத்தில் அவள் இந்த வேலையில் சேரவிடாமல் செய்து விடுகிறரா் அக்னி.
இதனால் ஆத்திரமடையும் தரங்கினி கோபத்துடன் அக்கினியை திட்டிவிட்டு பிரிந்து சென்று விடுகிறாள்.
அக்னி சிறிது நாட்களில் ஐகிரி என்ற பெண்ணுடன் பழகி அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் என்பதுபோல் மனமொத்த தம்பதிகளாகத்தான் வாழ்கிறார்கள். இந்த நிலையில் எதிர்பாராமல் தரங்கினியை ஓர் இடைவெளிக்குப் பின் சந்திக்கிறார் அக்னி. மனைவிக்கும் அறிமுகப்படுத்தி வைக்கிறார். ஆனால் தரங்கனியுடன் தன் கணவன் பழகுவதை சந்தேகக்கண் கொண்டு பார்க்கிறாள் ஐகிரி.
இதனால் மூன்று பேர் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்கள்தான் விஷமக்காரன் கதையின் அடிநாதம்.
மனிதர்கள் மேனுபுளேட் செய்வதைப் பற்றி அதிகமாகவும், அடிக்கடியும் பேசும் அக்னி இறுதியில் செய்யும் மேனுபுளேஷன்தான் படத்தின் ஹைலைட்.

 

நாயகன் அக்னியாக நடித்து படத்தை இயக்கியிருக்கும் வி இரண்டிலும் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். ஐகிரி வேடம் ஏற்றிருக்கும் அனிக்கா விக்ரமனும், தரங்கினி வேடத்தில் வரும் சைத்ரா ரெட்டியும் தங்கள் பாத்திரத்துக்கு இயன்றவரை நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஜே.கவினின் கண்கவர் ஓளிப்பதிவும், கவின் ஆதித்யாவின் இனிமையான இசையும் படத்துக்கு பக்க பலம்.
வழக்கமான மசாலா படங்களையே பார்த்து சலித்துப்போனவர்கள் ஒரு புதிய முயற்சியாக உருவாகியிருக்கும் விஷமக்காரனை தாராளமாகப் பார்த்து ரசிக்கலாம்.