![]()
யோலோ_ விமர்சனம்
CAST
Dev
Devika
Aakash Premkumar
Badava Gopi
Vj Nikki
Subhashini Kannan
Praveen
Yuvaraj Ganesan
DIRECTOR – S. SAM
PRODUCER – MAHESH SELVARAJ (MR Motion Pictures)
STORY -RAMS MURUGAN
SCREENPLAY – S. SAM, RAMS MURUGAN, PANBU SELVAN, MAHESH SELVARAJ
CINEMATOGRAPHER – SOORAJ NALLUSAMI
MUSIC – SAGISHANA XAVIER
EDITOR – A.L. RAMESH
எம் ஆர் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்திருக்கும் படம் யோலோ.
ஆரம்பமே அட்டகாசமாக அமையும் வாய்ப்பு சில திரைப்படங்களுக்கு மட்டுமே அமையும். அப்படி அமைந்த ஓரு படம்தான் யோலோ.
ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் தேவிகாவை பெண் பார்க்க வருகின்றனர் விஜே நிக்கியின் குடும்பத்தார்.
தேவிகாவை பார்த்த நிக்கியின் மூத்த சகோதரி, “இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது” என்று சொல்லி தேவிகாவின் அப்பா படவா கோபிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறார்.
எவ்வளவோ மறுத்துக் கூறியும் தேவிகா தன் கணவர் தேவ் உடன் தேன்நிலவுக்கு வந்த போதுதான் தான் அவர்களை சந்தித்ததாக அடித்துக் கூறுகிறார் நிக்கியின் சகோதரி.
தானே இதுவரை கண்டிராத தன் கணவன் தேவ் எங்கே இருக்கிறார் எனத் தேட ஆரம்பிக்கிறார் தேவிகா.
ஒரு வழியாக தேவ் யார் என்பதைக் கண்டுபிடித்து விஷயத்தை விளக்க, அவரும் அதிர்ச்சியில் உறைகிறார்.
தங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு திருமணம் நடந்தது எப்படி என்று இருவருமே இணைந்து புலனாய்வை தொடங்குகின்றனர்.
இருவருக்கும் வழக்கறிஞர் ஒருவர் திருமணம் செய்து வைத்ததற்கான சாட்சியும், அதற்கான பதிவு சான்றிதழும்கூட இருப்பதை அறிகின்றனர்.
உண்மையில் நடந்தது என்ன? இதற்கான பின்னணி என்ன? என்பதுதான் யோலோ படத்தின் கதை.
நடக்காத இந்த திருமண சிக்கலில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று புரியாத குழப்பத்தை நாயகன் தேவ் அழகாக வெளிப்படுத்தி நடிப்பில் சோபிக்கிறார்.
அழகு மயில் தேவிகாவும் என்ன நடக்கிறது என்று புரியாத தவிப்பை மிகவும் திறம்பட வெளிப்படுத்தி நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.
முன்பின் பார்த்திராத இரண்டு பேருக்கு எப்படி திருமணம் நடந்திருக்க முடியும் என்ற கேள்வி பார்வையாளர்களை திரைக்குள் இழுத்துக் கொள்ளும் வகையில் திரைக்கதை அமைத்த இயக்குனர் எஸ் ராம் பாராட்டுக்குரியவர்.
படத்தின் துவக்கத்திலிருந்து இறுதிவரை மெலிதாக இழையோடும் நகைச்சுவை ரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சூரஜ் நல்லுசாமியின் கண்கவர் ஒளிப்பதிவுதான்.
சாஹிசானா சேவியர் இசையின் உருவான பாடல்கள் நெஞ்சை வருடுகின்றன.
திடீர் திடீரென வரும் மந்திரவாதியும் அவர் செய்யும் அபத்தமான மந்திர வித்தைகளும் தான் படத்தில் ஒட்டாத வகையில் இருக்கின்றன.
எந்த லாஜிக்கையும் பார்க்காமல் பொழுதைப்போக்கி சிரித்து விட்டு வரலாம் என்று நினைப்பவர்கள் தாராளமாக இப்படத்தை கண்டு ரசிக்கலாம்.


