Friday, November 13

ஹவுஸ் மேட்ஸ் _ விமர்சனம்

Loading

ஹவுஸ் மேட்ஸ்_ விமர்சனம்

தர்ஷன் _ ஹர்ஷா சாந்தினி பைஜூ தம்பதி அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒன்று வாங்குகின்றனர்.

அங்கு குடியேறியதில் இருந்து, சில அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதை உணர்கின்றனர்.

தொடர்ந்து அந்த வீட்டில் உள்ள சுவரில் நீங்கள் யார் என்று எழுத, அந்த வீட்டில் அவர்களுக்கே தெரியாமல் காளி வெங்கட் மற்றும் வினோதினி தம்பதியினர் தங்கள் மகனுடன் வாழ்ந்து வருவது தெரிகிறது.

ஒரு குடும்பம் வாழ்வதே மற்றொரு குடும்பத்திற்குத் தெரியாமல் இருக்கிறது.

இதைத்தொடர்ந்து அந்த வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் நடக்கும் சம்பவங்களை இரு குடும்பத்தாரும் பகிர்ந்து கொள்ள, சில சிக்கல்கள் முளைக்கின்றன.

விசித்திரமான இந்தப் பிரச்சனையில் இரு குடும்பத்தினரும் சிக்கிக் கொள்வதற்கு காரணம் என்ன?

அவர்கள் அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் ‘ஹவுஸ் மேட்’ படத்தின் கதை.

வழக்கமான பேய் படத்தில் இருந்து சற்றே விலகி அமானுஷ்யத்தின் பின்னணியில் ஓர் அறிவியல் கதையை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் ராஜவேல்.

அனுபவம் மிக்க காளி வெங்கட் வினோதினி வைத்தியநாதன் ஜோடியின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய பலம் என்றால்,  அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இளம் தம்பதியாக வரும் தர்ஷன் ஹர்ஷா சாந்தினி ஜோடியும் நடித்திருக்கின்றார்.

படத்தின் பெரும்பகுதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் உட்பகுதியில் நடக்கிறது என்றாலும் சற்றும் போர் அடிக்காத வகையில் தனது ஒளிப்பதிவால் படத்தை வேறு தளத்துக்கு உயர்த்த, எம் எஸ் சதீஷின் உழைப்பு பக்க பலமாக இருக்கிறது.

அமானுஷ்ய பின்னணி கொண்ட கதைக்கு தேவையான வகையில் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.

நம்புவதற்கு கடினமாக இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் படம் அமானுஷ்ய பட  ரசிகர்களுக்காவது பிடிக்குமா?