Actors
Samuthirakani
Abirami
Lakshmy Ramakrishnan
Aadukalam Naren
Paval Navaneethan
Anupama Kumar
Written & Directed by Lakshmy Ramakrishnan
Music: ‘Maestro’ Ilaiyaraaja
Cinematography: Krishnasekar TS
Editing: CS Premkumar
“ஒரு திரைப்படத்தை துவக்குவது என்பது மகத்தான கலை. சடாரென எதையும் காட்டி படத்தை ஆரம்பித்து விடக்கூடாது” என்று கூறுகிறார் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் புகழ்பெற்ற திரைப்பட விமர்சகர் ஒருவர்.
ஹைக்கூ கவிதை போல் துவங்குகிறது ஆர் யூ ஓகே பேபி திரைப்படம்.
ஹார்மோன் சிகிச்சை மூலம் பெறாத குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட முயற்சிக்கும் நாயகி அபிராமி, சுவர் பக்கம் இருந்து திரும்பி தன் கையில் இருக்கும் பாட்டிலை கணவர் சமுத்திரகனிடம் காட்டுகிறார். அரைபாடலுக்கும் கீழ் தாய்ப்பால் நிரம்பி இருக்கிறது.
மனைவி நெற்றியில் மிருதுவாக முத்தமிடுகிறார் சமுத்திரக்கனி. என்ன காரணத்தினாலோ குழந்தை பெற முடியாத அபிராமி முறையற்று பிறந்த ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டத் த(யா) (ரா)இருக்கிற இந்த நிலையில் படம் துவங்குகிறது…
உணர்வுகளை பார்வையாளர்களுக்கு கடத்தும் படம் பெரும்பாலும் தமிழில் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்டு.
ஆனால் ஆர் யூ ஓகே பேபி கதாபாத்திரங்களின் உணர்வுகளை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்துவது தான் இந்த படத்தின் சிறப்பு.
கதாபாத்திரங்கள் அனைத்தையும் வெகு அழகாக நியாயப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
சமுத்திரக்கனி அபிராமி மட்டுமின்றி குழந்தை பெறும் பெண், அவளது ஊதாரித்தனமான கணவன், அவனது பொறுப்பற்ற தந்தை என்று அனைத்து பாத்திரங்களும் அழகாக நியாயப்படுத்தப்பட்டு இருக்கும் வகையில், இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் வலுவாக காலூன்றி வெற்றி பெற்றிருக்கிறார்.
ஆர் யூ ஓகே பேபி படத்தில். நிஜ வாழ்க்கையில் பிரபலமடைந்த தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவே லஷ்மி ராமகிருஷ்ணன் படத்தில் ஏற்று நடித்த பாத்திரம் அவருக்கு மிக நன்றாக பொருந்துவதால் நிஜமான கதையை பார்ப்பது போல் தோன்றுகிறது.
பிரதான பாத்திரங்கள் மட்டுமின்றி சிறிய வேடங்களில் வரும் அனுபாமா குமார், ஆடுகளம் நரேன் ஆகியோரும் நினைவில் நிற்கும் வகையில் சிறப்பாகவே நடத்திருக்கின்றனர். இசை இளையராஜாவாம் படத்தின் டைட்டிலில் அப்படித்தான் போட்டு இருக்கிறது.
தத்தெடுக்கும் விஷயத்தில் உள்ள சட்ட ரீதியான பிரச்சனைகளையும் படம் அலசிச் செல்கிறது.
பாவல் நவநீதன் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றாலும் உடல் ஊனமுற்ற ஒருவரை காலை அமுக்கச் சொல்லும் ஷோ டைரக்டர் என்பதெல்லாம் சாரி.. கொஞ்சம் ஓவர்தான்.
தத்தெடுக்கப்படும் ஒரு குழந்தையின் விவகாரத்தை கையில் எடுக்கும் ஷோ டைரக்டர் இப்படியெல்லாம்கூடவா மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொள்வார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
கிளைமாக்ஸ் நீதி மன்றத்தில் நடக்கும் காட்சி அபாரமாக இருக்கிறது. நல்ல படம் என்பது எப்போதாவது அரிதாகத் தான் வரும் அப்படி வரும் படங்களை ஆதரிக்க வேண்டியது ரசிகர்கள் கடமை.
என்னம்மா (அசத்தலா) இப்படி பண்ணிட்டீங்களேம்மா…
200 300 ரூபாய் செலவு செய்து திரையரங்குக்கு சென்று பார்க்கத் தகுந்த தகுதியான தரமான படம் ஆர் யூ ஓகே பேபி.
மதிப்பெண் 4/5