Saturday, November 28

Blog

இளையராஜா பாடிய பாடலை வெளியிட்ட கமலஹாசன்!

News
"இசைஞானி இளையராஜா பாடிய பாடலை விண்வெளி நாயகன் கமலஹாசன் அவர்கள் வெளியிட்டுள்ளார் இரண்டு சிறப்பு பதிப்புகளாக வெளியான இப்பாடலை இசைஞானி *இளையராஜா* அவர்கள் குரலிலும் *யதீஷ்வர் ராஜா* அவர்களின் குரலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது இப் பாடலுக்கு இசை – *யதீஷ்வர் ராஜா * இரண்டு தலைமுறைகளின் இசை மேதைகள் இணைந்திருக்கும் அபூர்வ தருணம் இது. இந்த வீடியோவில் நடிகர் ரகுவரன் தம்பி சுரேஷ் (செட் பயர் ஸ்டுடியோ) அவர்களின் மகன் ரித்திஷ் நடிக்க அவருக்கு இணையாக ஃபைட் கிளப் திரைப்படத்தில் நடித்த மோனிஷாவும் நடித்துள்ளனர் இப் பாடலின் வரிகளை தமிழ் சினிமாவில் தனக்கான தனித்துவமான எழுத்துக்களால் கவனம் பெற்ற விஷ்ணு எடவன் எழுதியுள்ளார். இசை வீடியோவுக்கு இயக்கம் செய்துள்ளார் இயக்குனர் கார்த்திக் பி.கே, பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முன்னாள் உதவியாளர். புதுமையான காட்சியமைப்புடன் அவர் இந்த கலைப்பணியை உருவா...

மிரட்டல் கெட்டப்பில் சம்பத்ராம் நடித்திருக்கும் “காந்தாரா சாப்டர்-1”

News
படு மிரட்டல் கெட்டப்பில் சம்பத்ராம் நடித்திருக்கும் "காந்தாரா சாப்டர்-1" உலகம் முழுவதும் வெளியாகி, மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கிற "காந்தாரா சாப்டர்-1" திரைப்படத்தில் சம்பத்ராம் ஆகிய நானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் என்பதில் ரொம்ப சந்தோஷப்படுறேன். இந்த படத்தில் மலைவாழ் மக்கள் தலைவனா, குறைந்த காட்சிகள் வந்தாலும், நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதில் சந்தோஷமும், பெருமையும் அடைகிறேன். வித்தியாசமான தோற்றத்தில் 'காந்தாரா சாப்ட்டர்-1' படத்தில் நடித்துள்ளேன். முகம் மற்றும் உடல் முழுவதும் கருப்பு கலர் மேக்கப்பில், குறிப்பாக முகத்தில் முதிர்ந்த முதுமையில் மேக்கப் போட்டு இருப்பேன். மேக்கப் போடுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். கலைப்பதற்கு ஒரு மணி நேரமாகும். மொத்தத்தில் இரண்டரை மணி நேரம் மேக்கப்பிற்காக ஒதுக்க வேண்டும். மிகவும் சிரமப்பட்டு இந்த படத்தில் நடித்துள்ளேன்...

தனுஷ் – க்ரிதி சனோன் நடித்ததேரே இஷ்க் மேயின் டீசர்!

Uncategorized
ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை! வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. 🔗 https://youtu.be/O9N6kz7_0vQ?si=DLTPUzgN72ThJwoK தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டடீஸர் தற்போது வெளியாகி உள்ளது. புதியதும் எதிர்பாராததுமான இந்த ஜோடி, டீசரில் சங்கர் (தனுஷ்) – முக்தி (க்ரிதி சனோன்) இடையிலான காந்த ஈர்ப்பை வெளிப்படுத்துகிறது. முன்பே வெளியான சில கா...

Inika Productions Announces India’s Most Heartwarming Animation Movie “Kiki & Koko”

News
Inika Productions Announces India’s Most Heartwarming Animation Movie “Kiki & Koko” Animation has always held a special place in the hearts of audiences. It’s not just for children, but it has the magical ability to rekindle the child within every adult. Across languages and borders, this genre continues to find unconditional love. In recent years, Indian cinema has seen animation films winning critical acclaim while making a strong mark at the box office. Yet, the true charm of animation lies in its ability to entertain and inspire audiences of all ages. Inika Productions proudly announces its first-ever animation venture, ‘Kiki & Koko’. Marking the directorial debut of P. Narayanan, Kiki & Koko is being hailed as India’s first animation movie of its kind, offering a fresh...

மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவான ‘அதர்ஸ்’!

News
நவம்பர் 7ல் வெளியாகும் 'அதர்ஸ்' கிராண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுகம் ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்திருக்கும் படம் 'அதர்ஸ்'. மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தினை அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தினில், ஜிப்ரான் இசையமைப்பையும், ராமர் படத்தொகுப்பையும், பிரதீப் சண்டை காட்சிகளையும், சந்தோஷ் நடன அமைப்பையும் கையாண்டிருக்கின்றனர். இப்படத்தினில் முக்கிய கதபாத்திரங்களில் 'முண்டாசுபட்டி' ராமதாஸ், 'நண்டு' ஜகன், ஹரிஷ் பெரோடி, வினோத் சாகர், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்ப்பினை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படம் நவம்பர் 7ம் தேதியன்று வெளியாகவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளத...

இட்லி கடை _ விமர்சனம்

Reviews
இட்லி கடை _ விமர்சனம் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்ற இந்த ஒன்றரை வரி குறளை வைத்து  எடுக்கப்பட்ட ஓர் அற்புதமான திரைப்படம் தான் இட்லி கடை என்று ஒரே வரியில் விமர்சனம் செய்து விடலாம். முந்தைய மூன்று படங்களில் இருந்து மாறுபட்ட முறையில் தனது இயக்கத்தில் உருவான  இட்லி கடை படத்தை கொடுத்திருக்கிறார் தனுஷ் . தேனி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் சிறிய அளவில் இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார் ராஜ் கிரண். இந்தக் கடையின் சிறப்பு என்னவென்றால் ஆட்டுக்கல்லில் மாவை ஆட்டி, இட்லி சுட்டு விற்பனை செய்வதுதான். வருமானத்திற்கான தொழிலாக மட்டும் இட்லி கடையை கருதாமல் அதை ஆத்மார்த்தமாக செய்து வரும் ராஜ்கிரணைப் பார்த்து அவரது மகனான தனுஷுகும் சிறுவயதிலிருந்தே சமையல் கலையில் ஆர்வம் ஏற்படுகிறது. இதனால் கேட்டரிங் படித்து முடித்துவிட்டு இட்லி கடை தொழில் விரிவுபடுத்த எண்ணுகிறார். இதற்காக உரிமை கி...

சினிமாவில் கால் பதிக்கும் பிக் பாஸ் பிரபலம் அக்ஷரா!

News
உலக அழகிப்போட்டியில் பட்டம் வென்ற அக்ஷரா நடிகையாக அறிமுகம்! 2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய "பிக் பாஸ் " நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் "ரைட் " என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு நடிகையாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷரா ரெட்டியிடம் பேட்டி கண்டபோது பல்வேறு ருசிகர விஷயங்களை கூறினார். அக்ஷரா ரெட்டி கூறியதாவது: 2021 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் சார் பங்கேற்று நடத்திய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்று 87 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை கற்றுத் தந்தது. கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவில் ஒன்று. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் நடிப்பேன். அதற்கு முன்னதாக பிக் பாஸி...

நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2” ஃபர்ஸ்ட் லுக்!

News
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில், "மூக்குத்தி அம்மன் 2" ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !! மூக்குத்தி அம்மன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில், டாக்டர் ஐஷரி K கணேஷ் தயாரிப்பில், வெற்றி இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் “மூக்குத்தி அம்மன் 2”, படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் பாகமான மூக்குத்தி அம்மன் பக்தி, காமெடி, சமூக அக்கறை மிக்க கருத்துக்களுடன் குடும்ப ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. தற்போது அதே கதைக்களத்தில் இன்னும் பிரம்மாண்டமான அனுபவம் தரும் வகையில், கமர்சியல் படங்களில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் சுந்தர் C இயக்கத்தில், நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க, மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாக உருவாக...

வானளாவிய எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”!

News
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்! காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயாபட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும், அதிரடித் திரைப்படமான “அகண்டா 2: தாண்டவம்”, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர், பெரும் வரவேற்பை பெற்று, ரசிகர்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது படக்குழு அதிகாரப்பூர்...

புதிய கட்சி திராவிட வெற்றி கழகம்?

News
காயத்ரி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் ப்ரொடக்க்ஷன் சார்பாக கார்த்திகேயன் பாஸ்ட்ரா மற்றும் காயத்ரி கார்த்திக் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம்! மர்டர் மிஸ்ட்ரியில் இதுவரை சொல்லப்படாத வித்யாசமான கதையை கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், அபிராமி வெங்கடாச்சலம், சாய் தீனா, ராம்ஸ், கே பி ஒய் வினோத், சிறகடிக்க ஆசை தேவா மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்... 2013 முதற்கொண்டு பல குறும்படங்களை இயக்கியும், மேலும் சில படங்களில் அஸோசியட் ஆக பணி புரிந்தவருமான *கார்த்திக் டோலக்* பல திரைப்பிரபலங்களைக் கொண்டு தனது முதல் படத்தினை இயக்கியிருக்கிறார்.. தொழில்நுட்பக் குழு : இயக்கம் - கார்த்திக் டோலக் ஒளிப்பதிவு - வைஷாலி சுப்ரமணியம் இசை - அபிஷேக் ஏ.ஆர் எடிட்டர் - பிரசன்னா ஆர். சி நடனம் - விஜி சதீஷ் மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு, சாவித்ரி...
CLOSE
CLOSE