Thursday, November 26

Blog

திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிமுக விழா!

திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் அறிமுக விழா!

News
  தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா! தென்னிந்திய திரைப்பட படத்தொகுப்பாளர்கள் சங்கம் 2026-2029 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் வென்ற உறுப்பினர்களுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி இன்று சென்னையில் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் இயக்குநர்கள் லிங்குசாமி, நித்திலன், கார்த்திக் சுப்புராஜ், எழில், தயாரிப்பாளர்கல் டி. சிவா, தனஞ்செயன், கரு. நாகராஜன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படத்தொகுப்பாளர் சங்க செயலாளர் உமாசங்கர் பேசியதாவது, “வணக்கம்! 1972ஆம் நாள் ஆகஸ்ட் திங்கள் ஆறாம் நாள் தி. நகரில் உள்ள வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 86 உறுப்பினர்கள் கொண்ட படத்தொகுப்பாளர் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூடியது. வயதில் மூத்தவரும் ம...
பைக்கர் _ விமர்சனம்

பைக்கர் _ விமர்சனம்

Reviews
பைக்கர் _ விமர்சனம் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களை உருவாக்குவதில் வல்லவர் டாக்டர் ராஜசேகர். அவரது மகன் சர்வானந்துக்கு தானும் ஒரு மோட்டார் சைக்கிள் பந்தைய வீரனாக வேண்டும் என்பதுதான் லட்சியம். இதற்காக தந்தையிடம் மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ளகிறார். மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் மாளவிகா நாயருடன் சர்வாவுக்கு காதல் ஏற்படுகிறது. இருவரும் நெருங்கி பழகவே மாளவிகா கர்ப்பம் அடைகிறார். இந்த செய்தி தந்தைக்கு தெரியக்கூடாது என்பதற்காக சர்வா அவரை விட்டு விலகி, மாளவிகாவை மணந்து கொண்டு வாழ்க்கையை தொடங்குகிறார். உலக அரங்கில் இந்திய மோட்டார் சைக்கிள் பந்தைய வீரர்களை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்ற டாக்டர் ராஜசேகரின் கனவுக்கு முட்டுக்கட்டை விழுகிறது. சர்வானந்தின் ஸ்பான்சர் ஆன தொழில் அதிபர் அதுல் குல்கர்னி, டாக்டர் ராஜசேகர் மீது கோபம் கொண்டு அவரைப் பற்றி தவறான...

லீடர் _ விமர்சனம்

Reviews
லீடர் _ விமர்சனம் தூத்துக்குடியில் கார் மெக்கானிக்காக தன் மகளுடன் அமைதியான வாழ்க்கை நடத்தி வரும் லெஜெண்ட் சரவணன் வாழ்க்கையில் திடீரென ஒரு சூறாவளி வீசுகிறது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஒரு கன்டெய்னர் மீது போலீஸ் அதிகாரி ஆண்ட்ரியாவின் சந்தேகப்பார்வை விழுகிறது. அந்த கன்டெய்னரை வெளியில் கொண்டு வந்து சோதனை செய்ய திட்டமிடுகிறார் ஆண்ட்ரியா. சர்வசாதாரணமாக துறைமுகத்தின் எல்லா நுழை வாயில்களிலும் சென்று வரும் சரவணனின் உதவியை இதற்காக நாடுகிறார் ஆண்ட்ரியா. ஆனால் சரவணன் மறுத்து விட, அவரது செல்ல மகளை ரவுடிகள் கடத்தி வந்தது போல் செட்டப் செய்து நாடகமாடி அந்த கன்டெய்னரை துறைமுகத்திலிருந்து சரவணன் மூலமாகவே வெளியே கொண்டு வர வைக்கிறார். இதைத் தொடர்ந்து  கதையில் ஏற்படும் 'ட்விஸ்ட்' பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார செய்கிறது. இதன் பிறகு கதையில் ஜெட் வேகத்தில் பறக்...
அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்த ‘அறிவு’ படக்குழு!

அரசு பள்ளிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தந்த ‘அறிவு’ படக்குழு!

News
மூணாறில் “அறிவு” பட படப்பிடிப்பு: மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார்! Movietron Production சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகி வரும், உறியடி விஜய்குமார் – கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் “அறிவு” திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மூணாறு அருகிலுள்ள ஒத்தப்பாறை பகுதியில் அமைந்துள்ள ஒரு அரசுப்பள்ளியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது, அந்த பள்ளியில் மாணவர்களுக்கான போதிய வசதிகள் இல்லாத நிலையை கண்டு படத்தின் தயாரிப்பாளர் சாய்வினோத் ஜெயக்குமார் உடனடியாக அந்த பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முன்னெடுத்தார். அதன்படி, பள்ளி முழுவதும் புதிய பெயிண்டிங் வேலைகள் செய்யப்பட்டதுடன், மறு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாணவர்கள...
தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்’ஹபீபி’!

தமிழ் முஸ்லிம்களின் வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்’ஹபீபி’!

News
  'ஜோ' மற்றும் 'ஆண் பாவம் பொல்லாதது' ஆகிய தனது அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை மாளவிகா மனோஜ், தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பிற்காக அறியப்படும் இவர், ஆழமும் யதார்த்தமும் தேவைப்படும் கதாபாத்திரங்களுக்கு விரும்பப்படும் தேர்வாக தமிழ் சினிமாவில் மாறி வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் படங்கள் நடித்து வருவதால் தென்னிந்திய திரையுலகிலும் விரும்பப்படும் நடிகையாக அவர் உள்ளார். தற்போது, இயக்குநர் மீரா கதிரவனின் 'ஹபீபி' படத்தில், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பார்த்த விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் திரையுலகினர் என பலரும் இப்படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவரது கதாபாத்திரம் குறித்து இயக்குநர் மீர...
‘TN 2026′ தங்க நட்சத்திரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

‘TN 2026′ தங்க நட்சத்திரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !

News
'TN 2026' தங்க நட்சத்திரம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ! KRG Kannan Ravi Group சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026” தங்க நட்சத்திரம். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்கில், கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்... ஒளிப்பதிவாளர் P. G. முத்தையா பேசியதாவது.., நான் நடுவில் சில காலமாக ஒளிப்பதிவ...
‘டிமாண்டி காலனி3’ படப்பிடிப்பு நிறைவு!

‘டிமாண்டி காலனி3’ படப்பிடிப்பு நிறைவு!

News
 ‘டிமாண்டி காலனி3’ திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகிறது! அதிரடியான முதல் பார்வை வெளியீடு மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ’டிமாண்டி காலனி 3’ திரைப்படம் சமீபத்தில், படத்தில் இருந்து முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகம் செய்தது. இதனையடுத்து முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படம் வரும் கோடை காலத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பகிர்ந்து கொண்டதாவது, “திறமையான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப திறமை மட்டுமே ஒரு இயக்குநரை திறமையானவராக மாற்றி விடாது. சொன்ன நேரத்திற்குள் ஒரு படத்தை முடிக்கும் ஒழுக்கமும் அர்ப்பண...
‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்!

‘பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்!

News
'பரீட்’ படத்திற்காக போலீஸ் தீம் பாடலை பாடியுள்ள அருண்ராஜா காமராஜ்* *தனுஷின் ‘கர’ படத்தை தொடர்ந்து ‘பரீட்’ படத்திற்காக பாடிய அருண்ராஜா காமராஜ்* ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ புகழ் நடிகர் வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்சிதா & சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர் . பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், வடிவேல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக உருவாகும் இப்படத்திற்கு ஜான் ராபின்ஸ் இசையமைக்கிறார். சமீபத்தில் ‘பரீட்’ படத்தின...
கார்மேனி செல்வம் _ விமர்சனம்

கார்மேனி செல்வம் _ விமர்சனம்

Reviews
கார் மேனி செல்வம் _ விமர்சனம் மனைவி லஷ்மி பிரியா மற்றும் மகனுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கார் டிரைவர் சமுத்திரக்கனி. கௌதம் வாசுதேவ் மேனன்_அபிநயா தம்பதி,  சமுத்திரகனியை தங்கள் டிரைவராக மட்டும் கருதாமல் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பழகி வருகின்றனர். இருவரும் வெளிநாடு சென்றிருக்கும்போது பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவர்களுடைய காரை தற்காலிக வாடகை வாகனமாக்கி ஓட்ட தொடங்குகிறார் சமுத்திரக்கனி. தொடர்ந்து சொந்த கார் வாங்க வேண்டும்...வீட்டு மனை வாங்க வேண்டும் என்றெல்லாம் மனைவி ஆசைப்படவே ஓய்வின்றி அந்தக் காரை ஓட்டிக் கொண்டே இருக்கிறார். ஒரு நாள் விபத்தொன்றில் கார் சிக்கிக் கொள்ளவே, அதை ரிப்பேர் செய்ய நிறைய செலவு செய்யும்படி ஆகிறது. இந்த சூழலில் வெளிநாடு சென்றிருந்த கௌதம் வாசுதேவ் திரும்ப வருகிறார். அனுபவத்தால் வாழ்க்கை கற்றுத் தரும் பாடத்தை, கௌதம் வாசுதேவ் சமுத்திரக்க...
நீளிரா _ விமர்சனம்

நீளிரா _ விமர்சனம்

Reviews
நீளிரா _ விமர்சனம் நீளிரா என்றால் நீண்ட இரவு எனப் பொருள். எண்பதுகளின் இறுதியில் வட இலங்கையின் போர் சூழலில் நடக்கும் கதை இது. தமிழ் குடும்பம் ஒன்றில் சித்து குமரேசன் திருமணம் நடக்கவிருக்கிறது. அமைதியை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரில் இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை,  அங்குள்ள போராளிகளை ஒடுக்க முற்படுகிறது. போராளிகள் தாக்குதல் நடத்த இருப்பதாக கிடைத்த செய்தியின் அடிப்படையில் அதை தடுக்கும் முயற்சியில் மூன்று அமைதிப்படை குழுக்கள் குறிப்பிட்ட இடத்துக்கு செல்கின்றன. அதில் ஒரு குழு தவறான பாதையில் சென்று, திருமணம் நடக்கவிருக்கும் தமிழ் குடும்பத்தினர் வீட்டிற்குள் நுழைந்து விடுகின்றனர். கல்யாண வீடாக களை கட்டி இருந்த அந்த இல்லம் சிறுக சிறுக இன்னல்களை எதிர்கொள்ள தொடங்குகிறது. அமைதிப்படை அங்கு நுழைந்து விட்டதை அறிந்த போராளிகள் தமிழ் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு களம் இறங்குகின்றனர்....
CLOSE
CLOSE