Wednesday, November 18

Reviews

இ மெயில் _ விமர்சனம்

இ மெயில் _ விமர்சனம்

Reviews
  நாயகிக்குத் திடீரென ஒரு இமெயில் வருகிறது. அதில் குறிப்பிட்ட லிங்க்கை கிளிக் செய்து விளையாடினால் பரிசு காத்திருப்பதாக தகவல் வருகிறது. அதே போல் நாயகி செய்ய… கொரியரில் லம்ப்பாக பணம் வருகிறது. பணத்துக்கு ஆசைப்படும் நாயகி அந்த விளையாட்டுக்குள் முழுமையாக இறங்க… அவள் மீது கொலைப்பழி விழுகிறது. அவளை இப்படி சிக்கலில் மாட்டிவிட்டவர்கள் யார்.. அதிலிருந்து நாயகி தப்பித்தாளா… என்பதே கதை. முருகா படத்தில் நடித்த அசோக் குமார் நாயகனாக நடித்து உள்ளார். பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி ஹீரோயின்.இவருக்குத்தான் படத்தில் முக்கியத்துவம். அதற்கேற்ற நடிப்பை அளித்துள்ளார். வாடகை செலுத்த முடியாமல் தவிப்பது, அலுவலகத்தில் அவமானப்படுவது போன்ற காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார். அதே போல சிக்கலில் இருந்து மீள வேண்டும் என்கிற நிலையில் புலியாக மாறி அதிரடி காட்டுகிறார். சண்டைக் காட்சிகளிலும்...
லவ்வர் _ விமர்சனம்

லவ்வர் _ விமர்சனம்

Reviews
அருண் - திவ்யா காதலர்கள். அருணுக்கு குடிப்பழக்கம் இருக்கிறது. தவிர, சொந்தமாக பிஸினஸ் செய்கிறேன் பேர்வழி என்று தனது அம்மாவின் பணத்தை அழித்துவிடுகிறார். வேறு இடத்தில் வேலைக்குப் போகவும் ஈகோ தடுக்கிறது. திவ்யா, ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவரை, தான் சொல்கிறபடிதான் நடக்க வேண்டும் என ஆணாதிக்கம் செலுத்துகிறார் அருண். இதனால் அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை அழகாக சொல்லியிருக்கிறார்கள். நாயகன் அருணாக மணிகண்டன் நடித்து இருக்கிறார். ஈகோ – ஆணாதிக்கம் பிடித்த இளைஞனை கண் முன் நிறுத்துகிறார். “அவ என் காதலி இல்லே.. என் பொண்டாட்டி… அவ எப்படி இன்னொருத்தன்கூட அதிக நேரம் பேசலாம்” என்றெல்லாம் அவர் வெடிக்கும்போது, அச்சு அசலாக ஆணாதிக்க மனோபாவத்தை வெளிப்படுத்துகிறார். நாயகி திவ்யாவாக, ஸ்ரீகெளரி பிரியா மிகச் சிறப்பாக நடித்துள்ளார். காதலன் மீது வைக்கும் அன்பு, அதே நேரம் அவனது அடக்குமுறை பிடி...
டெவில் _ விமர்சனம்

டெவில் _ விமர்சனம்

Reviews
டெவில் _ விமர்சனம் சவரக்கத்தி படத்தை இயக்கி கவனிக்க வைத்த ஆதித்யா இயக்கியுள்ள இரண்டாவது படம் டெவில். மிஷ்கின் முதல்முறையாக இசையமைத்துள்ளார். இளையராஜாவை மானசீக குருவாக வைத்துக் கொண்டு இசையை கடந்த சில ஆண்டுகளாக கற்று வந்த மிஷ்கின் இந்த டெவில் படத்தில் இளையராஜா பாணியிலேயே இசையமைத்திருக்கிறார். ஆங்கில படங்கள் போல 2 மணி நேரத்துக்கும் குறைவாக படம் இருப்பதால் விறுவிறுப்பாக சென்று விடுகிறது. ஹாரர் ஸ்டைலில் உருவாகி உள்ளது. வழக்கறிஞரான விதார்த் - பூர்ணாவை திருமணம் நடக்கிறது. ஆனால் விதார்த், தன் அலுவலகத்தில் பணியாற்றும் சுபஸ்ரீயுடன் தொடர்பில் இருக்கிறார். இது அவரது மனைவி பூர்ணிமாவுக்கு தெரிந்துவிடுகிறது. இந்த நிலையில் பூர்ணிமாவுக்கு திரிகுன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ஒரு நாள் இரவு, திரிகுன் பூர்ணிமாவின் வீட்டுக்கு வர… வீட்டில் விதார்த் இருக்க.. இருவருக்கும் கைகலப்பு ஏற்படுகிறது. அதன் பிறகு எ...
வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம்

வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம்

Reviews
வடக்குப்பட்டி ராமசாமி _ விமர்சனம் சந்தானம் நடித்துள்ள படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ள படம், அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. நாயகி மேகா ஆகாஷ். மேலும், நிழல்கள் ரவி, எம்.எஸ்.பாஸ்கர், மாறன், தமிழ், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவிமரியா, சேசு, சுரேஷ், பிரசாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார், தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீப்பிள் மீடியா பேடரி சார்பில் டி.ஜி.விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். கார்த்திக் யோகி இயக்கி இருக்கிறார். @ 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'வடக்குப்பட்டி ராமசாமி'. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து @ சாமியகூட காசு இருந்தாத்தான் பார்க்க முடியுது.. ...
சிக்லெட்ஸ் _ விமர்சனம்

சிக்லெட்ஸ் _ விமர்சனம்

Reviews
சிக்லெட்ஸ் _ விமர்சனம் ‘திறந்திடு சிசே' படத்தை இயக்கிய எம்.முத்து உருவாக்கத்தில், தெலுங்கு நடிகர் சாத்விக் வர்மா, ஜாக் ராபின்சன், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹைதர், மஞ்சீரா, ஸ்ரீமன், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ள படம் 'சிக்லெட்ஸ்'. கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப் படத்திற்கு பாலமுரளி பாலு இசை அமைத்து உள்ளார். எஸ்.எஸ்.பி. பிலிம்ஸ் சார்பில் ஏ. ஸ்ரீனிவாசன் குரு, தமிழ், தெலுங்கில் தயாரித்து உள்ளார். படத்தில் மூன்று நாயகிகள். இவர்கள் மூவரும் சிறு வயதில் இருந்தே இணை பிரியா தோழிகள். கல்லூரி பருவத்தை கடக்கும் இவர்களுக்கு, ‘சுதந்திர தாகம்’ எடுக்கிறது. அதாவது, பெற்றோரிடம் தகவல் சொல்லாமல் எங்காவது சென்று ‘உற்சாகமாக’ இருக்க வேண்டும் என்பது இவர்களது திட்டம். பெற்றவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, தங்களது ஆண் நண்பர்களுடன் கிளப்புக்குப் புறப்படுகிறார்கள்.. இன்னொரு புறம் இவர்களைக் காணாமல், பெற்றோர் ப...
மறக்குமா நெஞ்சம் _ விமர்சனம்

மறக்குமா நெஞ்சம் _ விமர்சனம்

Reviews
பள்ளி, கல்லூரி முடித்து சொந்தத் தொழில் செய்து வருகிறார் நாயகன். பள்ளி இறுதித் தேர்வு எழுதி பத்தாண்டுகள் கழிந்த பிறகு பிரச்சினை ஒன்று வருகிறது. அதாதவது, அவர் இறுதித் தேர்வு எழுதிய ஆண்டில், இவரது பள்ளியில் தேர்வின் போது தில்லு முல்லு நடந்திருக்கிறது.. ஆகவே அப்போது படித்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வந்து மூன்று மாதங்கள் படித்து மறுபடி இறுதித் தேர்வு எழுத வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இதை அடுத்து, அந்த பேட்ச்சை சேர்ந்த மாணவர்கள் மீண்டும் படிக்கிறார்கள். இந்த நிலையில், பள்ளி நாளில் சொல்லாத காதலை இப்போது தோழியிடம் சொல்லிவிட எத்தனிக்கிறார் நாயன். அந்த தோழிக்கோ, அப்போதுதான் திருமணம் நிச்சயம் ஆகி இருக்கிறது. இறுதியில் என்ன ஆனது… தோழியிடம் காதலை சொன்னாரா.. அவள் ஏற்றுக்கொண்டாளா என்பதுதான் கதை. தொலைக்காட்சி தொடர்களில் நடித்த ரக்ஷன், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் சிறு ...
ஜெய் விஜயம்’ _ விமர்சனம்

ஜெய் விஜயம்’ _ விமர்சனம்

Reviews
ஜெய் விஜயம்’ _ விமர்சனம் நாயகன், ’ஹலுசினேஷன்’ என்கிற வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். அதாவது, நடக்காத சம்பவங்கள் எல்லாம், நிஜமாக நடந்ததாக கற்பனை செய்துக்கொள்வார். அதை நினைத்து பதறுவார். ஆகவே அவரது மனைவி, தங்கை மற்றும் அப்பா ஆகிய குடும்ப உறுப்பினர்கள், தற்போதைய காலக்கட்டத்தில் இருந்து பத்து வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்தில் வாழ்வதாக நாயகனை நம்ப வைத்துக்கொண்டு உள்ளனர். நாயகனை வெளியில் எங்கும் அனுப்ப மாட்டார்கள். அப்படி பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள். நாயகனுக்கு ஏன் அப்படி ஆனது… இறுதியில் குணம் ஆனாரா என்பதே கதை. நாயகனாக ஜெய். தானே கற்பனை செய்துகொண்டு குழப்பத்துடன் வாழும் கதாபாத்திரம். இதை உணர்ந்து நடித்து உள்ளார். நிஜத்தில் நடக்கும் சம்பவங்களைக்கூட, குடும்பத்தினர், கற்பனை என்று சொல்லி அவரை நம்ப வைப்பதும் நடக்கிறது. அப்போதெல்லாம் அவரது தடுமாற்றத்தை அற்புதமாக வெளிப்படுத்த...
லோக்கல் சரக்கு விமர்சனம்!

லோக்கல் சரக்கு விமர்சனம்!

Reviews
லோக்கல் சரக்கு விமர்சனம்! அடிக்கிறது பூராமே லோக்கல் சரக்கு தானேய்யா... வெளிநாட்டு சரக்கா நெதமும் அடிக்கிறோம்.... சரக்கு விற்பனையை பிரதானமாகக் கொண்டு இயங்கும் ஒரு மாநிலத்தில் சரக்குக்கு எதிராக படம் எடுப்பதும் அதை வெளியிடுவதற்கும் பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியம் லோக்கல் சரக்கு தயாரிப்பாளர் வராஹ சுவாமி பிலிம்ஸ் கே. வினோத் குமாருக்கு நிறையவே இருக்கும் போலிருக்கிறது. சம்பாதித்து நாலு காசு சேர்த்து தங்கையை கல்யாணம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளும் அண்ணன்கள் வாழ்ந்தது அந்தக் காலம். தங்கை வருமானத்தில் சரக்கு அடிக்க காசு வாங்கி சகாவோடு அடிப்பது இந்த காலம். தங்கையிடம் காசு வாங்கி குடிக்கும் அண்ணனாக நடன இயக்குனர் தினேஷ், கெட்ட பெயர் கிடைக்கும் என்று தெரிந்தும் இந்த பாத்திரம் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கம் ப...
தூக்கு துரை _ விமர்சனம்

தூக்கு துரை _ விமர்சனம்

Reviews
கைலாசம் என்ற கிராமத்தில் கோயில் சிலையின் கிரீடத்தை பாதுகாத்து வரும் ஒரு ஜமீன்தார், அவரிடமிருந்து அதை 'ஆட்டை' போட முயலும் ஒரு கூட்டம் பற்றிய கதை. இன்னும் எத்தனை கலத்துக்கு இது போன்ற கதைகளையே படமாக எடுப்பார்கள் என்று தெரியவில்லை. பட விளம்பரங்களில் யோகிபாபுவுக்கு முக்கியத்துவம் அளித்து இருந்தாலும், படத்தில் சில காட்சிகளே வருகிறார். ஜமீன்தார் மகள் இனியாவை யோகிபாபு காதலிக்கிறார். ஜமீன்தார் ஆட்கள் யோகிபாபுவை, கிணற்றில் தள்ளி கொலை செய்துவிடுகிறார்கள். அந்த கிணற்றில்தான், காணாமல் போன கிரீடம் இருக்கிறது. அதை எடுத்து, கோயிலில் வைக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள் கிராம மக்கள். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை. யோகிபாபு காமெடியன் மட்டுமல்ல.. சிறந்த நடிகரும்கூட என்பதை மண்டேலா உள்ளிட்ட படங்கள் நிரூபித்து உள்ளன. ஆனால் அவருக்கு அச்சு பிச்சு வசனங்களை கொடுத்து எரிச்சல் ஏற்படுத்துகிறார்கள் இந்த ப...
சிங்கப்பூர் சலூன் _ விமர்சனம்

சிங்கப்பூர் சலூன் _ விமர்சனம்

Reviews
பொறியியல் படித்த இளைஞன் கதிர். இவரது வீட்டுக்குப் பக்கத்தில் முடி திருத்தும் நிலையம் நடத்துகிறார் சாச்சா. இவரது ஸ்டைலான முடி திருத்தும் பணியைப் பார்த்து லயித்து, அவரைப் போலவே ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் எனக் கனவு காண்கிறான் இளைஞன் கதிர். இதில் பல தடைகளைச் சந்திக்கிறான். இவற்றை மீறி தனது இலக்கை அடைந்தானா என்பதுதான் கதை. இளைஞன் கதிராகா, ஆர்.ஜே.பாலாஜி தோன்றுகிறார். வழக்கம்போல, டைமிங் காமெடியில் அசத்துகிறார். கதிர் என்ற கதாபாத்திரமாகப் பொருந்துகிறார். நாயகிகி மீனாக்ஷி சௌத்ரிக்கு அழுவதைத் தவிரப் பெரிதாக வேலை இல்லை. மற்றபடி சொல்வதற்கு ஏதுமில்லை. கிஷன் தாஸ், தலைவாசல் விஜய், லால் என அனைவருமே தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார்கள். சத்யராஜ் அசத்துகிறார். கஞ்சாம்பட்டி மாமனாராக வரும் அவரது அலப்பறைகள் ரசிக்கவைக்கின்றன. அதிலும் இடைவெளிக்கு முந்தைய பத்து நிமிட அட்ராசிட்டி சிறப்பு. விவே...