Wednesday, November 18

Reviews

ப்ளூ ஸ்டார் _ விமர்சனம்

ப்ளூ ஸ்டார் _ விமர்சனம்

Reviews
  விமர்சனம்: ப்ளூ ஸ்டார் Review: Blue Star அரக்கோணத்துக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அதே கிராமத்தின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். இருவருமே அவரவர் பகுதியின் கிரிக்கெட் டீமுக்கு கேப்டன்களாக இருக்கிறார்கள். சாதி மோதல் காரணமாக, ரஞ்சித்தின் ப்ளூ ஸ்டார் அணியும் ராஜேஷின் ஆல்பா அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்வதில்லை. இந்த நிலையில், ஊர்க்கோவில் திருவிழாவில் இரு அணியினரும் மோத தயாராகிறார்கள். போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக ராஜேஷ் பிரபல கிரிக்கெட் கிளப்பில் விளையாடும் சிறந்த வீரர்களை அழைத்து வருகிறார். போட்டியில் ரஞ்சித்தின் ப்ளூஸ்டார் அணியினர் தோல்வி அடைகின்றனர். மகிழ்ச்சியில் இருக்கும் ராஜேஷ், தான் அழைத்து வந்த வீரர்களுக்கு கூறியபடி பணத்தைக் கொடுக்க அவர்களின் கிளப்புக்கு செல்கிறார். அங்கு, அவர் கடுமையாக அவமானப்படுத்தப்படுகிறார். அப்போது அவ...
ஹனுமன் _ விமர்சனம்

ஹனுமன் _ விமர்சனம்

Reviews
ஹனுமன் _ விமர்சனம் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஹனுமன். தெய்வ சக்தி கலந்த சூப்பர் ஹீரோ படம் தான் இந்த ஹனுமான். ஆங்கிலத்தில் (Hanu Man) என வித்தியாசம் காட்டியதற்கு படத்தில் தெளிவான அர்த்தம் உள்ளது. அஞ்சனாத்ரி என்கிற சின்னஞ்சிறிய ஊரில் வசிக்கும் இளைஞர் ஹனுமந்தா. (தேஜா). இவரது அக்கா அஞ்சம்ம்மா (வரலக்ஷ்மி சரத்குமார்). இதற்கிடையே, தேஜா, அம்ரிதா அய்யருடன் காதல் வசப்படுகிறார். அதோடு கமெடி காட்சிகளும் ஓடுகின்றன. இன்னொரு பக்கம், சிறு வயதில் இருந்தே சூப்பர் ஹீரோவாக ஆசைப்படுகிறான் வில்லன். அவனது நிறைவேறியதா… அவரை ஹீரோ கடவுள் சக்தி கொண்டு எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை. ஏற்கெனவே, ஆன்மிக சிஜி படமான ஆதிபுருஷ், ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் இந்த ஆன்மிக சிஜி திரைப்படம் ரசிக்க.. வியக்கவைக்கிறது. சிஜி காட்ச...
மேரி கிறிஸ்மஸ் விமர்சனம்

மேரி கிறிஸ்மஸ் விமர்சனம்

Reviews
மேரி கிறிஸ்மஸ் விமர்சனம் 'பாஷி' இணைய தொடர் மூலம் அகில இந்திய அளவில் கவனம் ஈர்த்த விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் இன்னும் அதிக அளவில் இந்திய ரசிகர்களிடையே அவரை கொண்டு சேர்க்கும் என்பது உறுதி. கணவனுடன் ஒத்து வாழப் பிடிக்காமல் குழந்தையுடன் தனித்து வாழ்ந்து வரும் கத்ரீனா கைஃப், ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று உணவு விடுதி ஒன்றில் விஜய் சேதுபதியை முதல் முறையாக சந்திக்கிறார்.  இருவருக்கும் இடையே ஏற்படும் பழக்கம் நெருக்கமாக, கத்ரீனா கைப் வீட்டுக்கு வருகிறார் விஜய் சேதுபதி. ஆனால் அங்கே அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.  கத்ரீனா கைஃப் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்டு மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். கொலைப்பழி விஜய் சேதுபதி மீது விழுகிறது இந்த பழியில் இருந்து அவர் எப்படி தப்பித்தார்?  உண்மையில் கணவரை கொன்றது யார்?  என்ற மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் படம் தான் மேரி கிறிஸ்மஸ. ...
மிஷன் சாப்டர் 1 _ விமர்சனம்

மிஷன் சாப்டர் 1 _ விமர்சனம்

Reviews
மிஷன் சாப்டர் 1 _ விமர்சனம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் மிஷன் சாப்டர் 1. போலீஸ் அதிகாரி அருண் விஜய் தன் மகளின் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார். அங்கு அறுவை சிகிச்சைக்கு பெரும் பணம் தேவைப்படுகிறது. ஹவாலா மூலம் வந்த பணத்தை வாங்குவதற்காக பேருந்தில் செல்கிறார். அப்போது ரவுடிகள் அவரிடமிருந்து பணத்தை பறிக்க முயல்கின்றனர். அவர்களை விரட்டி அடிக்கிறார் அருண்விஜய். இந்த தகராறை அடுத்து, காவல்துறை அருண்விஜயை கைது செய்து சிறையில் அடைக்கிறது. அந்த சிறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூவர் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிப்பதற்காக வெளியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவன் திட்டமிடுகிறார். அதன் ஒரு பகுதியாக, சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே கலவரத்தை மூட்டுகிறார். இந்த கலவர சூழலை பயன்படுத்தி தீவிரவாதிகளை ...
அயலான் _ விமர்சனம்

அயலான் _ விமர்சனம்

Reviews
அயலான் விமர்சனம் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ளது அயலான். ஆரம்பத்திலேயே சொல்ல வேண்டிய விசயம்.. படத்தின் ஒரிஜினல் நாயகன், சிஜி காட்சிகள்தான். வியக்க – ரசிக்கவைத்து இருக்கிறார்கள். நிச்சயம் பேசப்படும். பேராசை பிடித்த மனிதக்கூட்டம் ஒன்று, மேலும், மேலும் சொத்து சேர்க்க இந்த பூமியை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. அவர்களில் ஒருவர் பூமியை ஒட்டுமொத்தமாக அழிக்கத் திட்டமிடுகிறார். அதாவது 2030ல் பூமியை அழிக்க முயற்சி செய்கிறார். இதை, வேற்று கிரகத்தில் இருந்து கவனிக்கும் ஒரு ஏலியன் அறிந்துகொண்டு, பூமிக்கு வந்து அந்த வில்லனிடம் இருக்கும் பொருளை எடுக்க முயற்சி செய்கிறது. ஆனால், அந்த ஏலியனை அடைத்து வைத்து வில்லன் ஆராய்ச்சி என்கிற பெயரில் சித்ரவதை செய்கிறான். ஹீரோ சிவகார்த்திகேயன் அந்த ஏலியனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை...
கேப்டன் மில்லர் _ விமர்சனம்

கேப்டன் மில்லர் _ விமர்சனம்

Reviews
கேப்டன் மில்லர் _ விமர்சனம் வெள்ளையர் கால ஆட்சியில் நடக்கும் கதைக் களம். ஜெயபிரகாஷூம் அவரது மகன் ஜான் கொக்கன் இருவரும் ஜமீன்தார்கள். வெள்ளையர்களுக்கு அடங்கி, குறிப்பிட்ட பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அப்பகுதியி்ல் உள்ள. கோயிலுக்குள், ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என சாதி வெறியுடன் செயல்படுகிறார்கள். இன்னொரு பக்கம், இவர்களது அதிகாரத்தை ஒழிக்க போராளி இயக்கத்தில் செயல்படுகிறார் சிவராஜ்குமார். தனது தம்பி தனுஷையும் இயக்கத்துக்கு அழைக்கிறார். அவரோ, சுதந்திரத்தை வாங்கி இந்த ராஜாவுக்குத் தானே கொடுக்கப் போற அவனுங்க நம்மள கோயில் உள்ளே விட மறுக்கின்றனர். நான் பட்டாளத்துல போய் சேரப்போறேன் என ஆங்கிலேயர்களின் பட்டாளத்தில் தனுஷ் சேர்கிறார். இதற்கிடையே, பிரியங்கா மோகனனும் போராளிகளின் இயக்கத்தில் சேர்கிறார். அவரை கொல்ல ஜமீன்தார் ஜெயபிரகாஷ் ஆட்கள் முயல்கிறார். அப்போது ப்ரியங்காவை தனுஷ்...
‘கும்பாரி’ திரைப்பட விமர்சனம்

‘கும்பாரி’ திரைப்பட விமர்சனம்

Reviews
'கும்பாரி' திரைப்பட விமர்சனம் விஜய் விஷ்வா, மஹானா சஞ்சீவி, பருத்திவீரன் சரவணன், நலீப் ஜியா, ஜான் விஜய் ,சாம்ஸ் ,மதுமிதா, மீனாள், ராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருப்பவர் கெவின் ஜோசப்,இசை- ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி, ஒளிப்பதிவு -பிரசாத் ஆறுமுகம், எடிட்டர் - T.S.ஜெய், கலை -சந்தோஷ் பாப்பனங்கோடு, சண்டை - மிராக்கிள் மைக்கேல், நடனம் - ராஜுமுருகன், பாடல்கள்- வினோதன் ,அருண் பாரதி, சீர்காழி சிற்பி. இப்படத்தை ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில் டி. குமாரதாஸ் தயாரித்துள்ளார். படத்தை 9Vஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.. இந்தப் படத்தின் கதை கன்னியாகுமரிப் பகுதியில் நடக்கிறது.கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும் மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும் நண்பர்கள்.பெற்றோர்கள் யாரும் இல்லாத அவர்கள், ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு நட்புடன் இருப்பவர்கள். ஒரு நாள்...
மூன்றாம் மனிதன் விமர்சனம்

மூன்றாம் மனிதன் விமர்சனம்

Reviews
இருமனம் ஒன்றிணைந்து மண வாழ்வில் ஈடுபடும்போது மூன்றாம் மனிதன் ஒருவன் அந்த வாழ்வில் குறுக்கிட்டால் என்னென்ன விபரீதங்கள் ஏற்படும் என்பதை சொல்ல முயன்றிருக்கும் படம்தான் மூன்றாம் மனிதன். மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் சோனியா அகர்வாலின் கணவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த கொலையை துப்பு துலக்கும் பொறுப்பு போலீஸ் அதிகாரி பாக்யராஜிடம் வருகிறது. சோனியா அகர்வாலை பாக்யராஜ் விசாரிக்கிறார். தொடர்ந்து சோனியா அகர்வால் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரி பிரணாவையும் விசாரிக்கிறார். பிரணாவின் கணவர் ராம்தேவ் மகா குடிகாரர். தன் மனைவிக்கு மற்றொரு ஆடவனுடன் தொடர்பு இருப்பதை அறிந்து இன்னும் அதிகமாக குடித்துவிட்டு புலம்புகிறார் ராம்தேவ். மனைவியுடன் தகாத உறவு கொண்டிருந்ததால்தான் ராம்தேவ் சோனியாவின் கணவரை கொலை செய்தாரோ என்ற கோணத்தில் பாக்யராஜின் விசாரணை தொடங்குகிறது. உண்மையான கொலையாளி யார்? எத...
மதிமாறன் _ விமர்சனம்

மதிமாறன் _ விமர்சனம்

Reviews
உருவ கேலி செய்து தமிழில் நிறைய படங்கள் வருவதுண்டு. ஆனால் குள்ளமாக இருப்பது குறை அல்ல... குள்ளமாக இருப்பவர்களும் எல்லோரையும் போல் சாதிக்க முடியும் என்பதை அழகாகவும் அருமையாகவும் விளக்கி இருக்கும் படம்தான் மதிமாறன். வெங்கட் செங்குட்டுவனும், இவானாவும் இரட்டையர்கள். இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கின்றனர். இவர்களது தந்தை எம்எஸ் பாஸ்கர் தபால்காரராக பணியாற்றி வருகிறார். பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்று கல்லூரி பேராசிரியர் ஒருவரை மணந்து கொள்கிறார் இவானா. இதனால் மனம் உடைந்த எம் எஸ் பாஸ்கர் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்கிறார். அக்காவை தேடி சென்னை வரும் வெங்கட் தன்னுடன் படித்த தோழி இன்ஸ்பெக்டராக இருப்பதை அறிந்து அவரது உதவியை நாடுகிறார். இன்ஸ்பெக்டர் தோழி மூலமே அக்காவின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கிறார். சென்னையில் இளம் பெண்கள் பலர் கொலை செய்யப்படுவதை அறியும் வெங்கட் தானாகவே ஆர்வம...
நந்திவர்மன் _ விமர்சனம்

நந்திவர்மன் _ விமர்சனம்

Reviews
ஏகே ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக அருண்குமார் தனசேகரன் தயாரிக்க, ஜிவி பெருமாள் வரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “நந்திவர்மன்”. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பல்லவ மன்னரான நந்திவர்மன் செஞ்சி பகுதியில் கட்டிய மிகப்பெரிய சிவன் கோயில் ஒன்று சிதிலமடைந்து மண்ணுக்குள் புதைந்து விட்டது. இது குறித்தான ஆய்வுகளை மேற்கொள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வெங்கட் போஸ் அந்தப் பகுதிக்கு வருகிறார். அவருடன் சில தொல்லியல் துறை மாணவர்களும் வருகின்றனர். கோவில் புதையுண்டு இருப்பதாக கருதப்படும் இடத்தில் தங்கம் வைரம் வைடூரியம் நிறைந்த புதையலும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் ஊர் மக்கள் யாரும் நடமாடுவதில்லை. காரணம் சில அமானுஷ்ய சக்திகள் அங்கு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். எனவே கோவிலை ஆய்வு செய்ய அவர்கள் அனுமதிக்க மறுப்பதுடன் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ...