Wednesday, November 18

Reviews

‘டங்கி’ _ திரைப்பட விமர்சனம்

‘டங்கி’ _ திரைப்பட விமர்சனம்

Reviews
ஷாருக்கான் ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லும் மற்றொரு தரமான பொழுதுபோக்கு படமாக வெளியாகியிருக்கிறது டங்கி. பஞ்சாபில் உள்ள சிறு கிராமம் ஒன்றில் வசிக்கும் டாப்ஸி மற்றும் அவரது நண்பர்களுக்கு எப்படியாவது லண்டனில் குடியேறி அங்கு வசிக்க வேண்டும் என்பது ஆசை. ராணுவ வீரரான ஷாருக் கானும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார். டாப்ஸி மற்றும் அவரது குழுவினர் லண்டனுக்குச் செல்வதில் ஒரு சிக்கல். காரணம், அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். ஆங்கிலம் பேச முடியாது. எனவே அவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது. சட்டத்தை மீறி குடியேற்றம் செய்யும் டங்கி முறையில் டாப்ஸி மற்றும் அவரது குழுவினர் லண்டன் செல்லும் முயற்சி வெற்றி பெற்றதா என்பதை சுவைபட விளக்கம் படம்தான் டங்கி. படத்தின் முதல் பாதி நகைச்சுவையாகவும், இரண்டாவது பாதி உணர்ச்சிகரமாகவும் இருக்கிறது. இரண்டுமே ரசிக்க தக்க வித்த்தில் இருப்பதுதா...
பார்க்கிங் – விமர்சனம்

பார்க்கிங் – விமர்சனம்

Reviews
பார்க்கிங் - விமர்சனம் சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் வாகன நிறுத்தப் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவான ஒரு முழுநிீளத் திரைப்படமே பார்க்கிங். பஞ்சாயத்துஅமைப்பு ஒன்றில் செயல் அலுவலராக பணியாற்றும் எம்.எஸ்.பாஸ்கர் தனது மனைவி, மற்றும் மகளுடன் வசித்து வரும் வீட்டின் மாடிப் பகுதிக்கு ஹரீஷ் கல்யாண் தன் காதல் மனைவி இந்துஜாவுடன் குடி வருகிறார். கார் பார்க்கிங்கிற்கான இடத்தில் தன் பைக்கை நிறுத்தி வந்த பாஸ்கர், ஹரீஷ் கல்யாண் வாங்கிய புதிய காரை அங்கு நிறுத்த முயல இருவருக்கும் இடையே உரசல் ஏற்படுகிறது. ஒரு நாள் பாஸ்கர் தன் பைக்கை நிறுத்த முயலும்போது எதிர்பாராமல் காரில் மோதி கீறல் விழுகிறது. இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் இருவருக்கிடையே மனக்கசப்புகளை அதிகரித்து, மோதல் போக்குக்கு செல்கிறது. மனைவி பல முறை கேட்டும் புது மிக்ஸி வாங்கிக் கொடுக்காமல் பழைய...
சில நொடிகளில் – விமர்சனம்

சில நொடிகளில் – விமர்சனம்

Reviews
சில நொடிகளில் - விமர்சனம் முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் கதையை லண்டனிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ். பிரபல டாக்டர் ரிச்சர்ட் தன் மனைவி புன்னகைப்பூ கீதாவுடன் லண்டனில் வசிக்கிறார். படுக்கையைப் பகிரந்து கொள்ளும் அளவுக்கு மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது. யாஷிகாவும் ரிச்சர்ட்டும் போதை மாத்திரை சாப்பிட்டுவிட்டு உறவில் ஈடுபடும்போது எதிர்பாராத வகையில் யாஷிகா இறந்து விடுகிறார். அந்த சமயத்தில் மனைவி கீதா தன் தோழிகளுடன் வீட்டு வருவதாக தொலைபேசில் சொல்ல, அவசரம் அவசரமாக யாஷிகாவின் பிணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ஒரு பெண் புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு, ரிச்சர்ட்டிடம் பணம் பறிக்க முயல்கிறாள். இந்த பிரச்சனையிலிருந்து ரிச்சர்ட் எப்படி தப்பித்தார்....அவரது மனைவி கீதாவுக்கு யாஷிகா மரணம் குறித்து தெரியவந...
ஜோ – விமர்சனம்

ஜோ – விமர்சனம்

Reviews
ஜோ - விமர்சனம் காதலை புதிய கோணத்தில் சுவைபட சொல்லும் படம் ஜோ. ரியோ, மாளவிகா மனோஜ், பாவ்யா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கியிருக்கிறார். கதாநாயகன் ஜோ வேடத்தில் முதிர்ச்சியான நடிப்பில் முத்திரை பதிக்கிறார் ரியோ ராஜ். அழுதுகொண்டிருக்கும் சக மாணவி மாளவிகாமீது அக்கறை கொண்டு அவரைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ஜோ பின்னர் அவரை காதலிக்கத் துவங்குகிறார் ரியோ. ஆரம்பத்தில் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ள மாளவிகா தயங்கினாலும் பின்னர் அவரும் ரியாவை காதலிக் ஆரம்பிக்கிறார். ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தாலும், ஈகோ பிரச்னை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். மாளவிகா சொன்னதற்கேற்ப திருமண விஷயமாக பேச அவரது வீட்டுக்கு ஜோ செல்லும்போது ஏற்படும் பிரச்சனையால் காதலர்கள் பிரிய நேர்கிறது. காதல் பாதிப்பிலிருந்து மீள ...

ரெய்டு விமர்சனம்

Reviews
ரெய்டு விமர்சனம் எத்தனையோ படங்களில் பார்த்து சலித்துப்போன போலீஸ் அதிகாரியின் கதைதான் ரெய்டு. கதையை நேர்கோட்டில் சொல்லாமல் காட்சிகளை முன்னும் பின்னும் மாற்றிப்போட்டு கதையைச் சொல்லும் யுக்திக்கு நான் லீனியர் என்று பெயர். ரெய்டு படத்தில் அந்த நான் லீனியர் முறையை முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கார்த்தி. படத்துக்கு பலமாக அமைய வேண்டிய இந்த யுக்தியே பலவீனமாக அமைந்து பார்வையாளர்களை பதம் பார்க்கிறது. கதைதான் அரதப்பழயது என்றால் காட்சிகளிலாவது கொஞ்சம் புதுமையாக எதையாவது முயற்சி செய்திருக்கக்கூடாதா? பெண்களை காதலிப்பதுபோல் நடித்து அவர்களுடன் உறவு கொண்டு அதை படமாக எடுத்து வைத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்கிறது ஒரு கும்பல். சர்வசாதரணமாக சில பல கொலைகளையும் செய்கிறது இந்தக் கூட்டம். இவர்களின் கொட்டத்தை அடக்க என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு களமிறங்குகிறார். பிறகென்ன....
ஜப்பான் – விமர்சனம்

ஜப்பான் – விமர்சனம்

Reviews
ஜப்பான் விமர்சனம் கார்த்தியின் இருபத்தைந்தாவது படமாக வெளிவந்திருக்கும் ஜப்பான், அவரது புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக பிரகாசிக்கிறது. தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு என்று தன் வழக்கமான பாணியிலிருந்து விலகி நடித்திருக்கும் கார்த்தி வெகுவாகவே நம்மை ரசிக்க வைக்கிறார், நகைக்கடை ஒன்றிலிருந்து இருநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படுகிறது. இந்தக் கடையில் அமைச்சர் ஒருவரின் பினாமி பணம் முடக்கப்பட்டிருப்பதால் காவல் துறையினர் தீவீரமாக கொள்ளையனை தேடுகின்றனர். வழக்கமாக இதுபோன்ற கொள்ளையில் ஈடுபடும் ஜப்பான்தான் இந்தக் கொள்ளையை நடத்தியிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. காரணம் இதுபோல் ஜப்பான் ஏற்கெனவே பல கொள்ளைகளை நடத்தியிருப்பதுதான். கொள்ளையடித்த நகையை ராபின்ஹூட் பாணியில் வாரி வழங்கியும், 'சிரிப்பு திருடன் சிங்கார வேலு' மாதிரி தானே கதாநாயகனாக ந...
ரூல் நம்பர் 4′ _ சினிமா விமர்சனம்

ரூல் நம்பர் 4′ _ சினிமா விமர்சனம்

Reviews
‘ரூல் நம்பர் 4' சினிமா விமர்சனம் பரபர சம்பவங்களும் விறுவிறு திருப்பங்களும் நிறைந்த படமாக உருவாகி வெளியாகியுள்ளது ‘ரூல் நம்பர் 4.' நாயகன் ஏகே பிரதீப் கிருஷ்ணா ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிறான். அவனுக்கு ஒரு பெண் மீது காதல் உருவாக அதை அவளிடம் சொல்ல அவள் ஏற்க மறுக்கிறாள். ஆனாலும் விடாமல் அவளை துரத்தி தன் காதலை ஏற்க வைக்கிறான். பிறகுதான் தெரிகிறது தான் காதலித்த பெண் தன்னுடன் ஏடிஎம் வேனில் துப்பாக்கி சுமந்து கூடவே வரும் செக்யூரிட்டியின் மகள் என்பது. இப்படி சுவாரஸ்யமாக பயணிக்கும் கதையில்... அந்த பெண்ணின் அப்பாவிடம் விவரத்தை சொல்லி காதலுக்குச் சம்மதம் பெற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்க நினைக்கிறார்கள். அதற்காக அதன்படி கோடிக்கணக்கான ரூபாயோடு ஏடிஎம் வேன் பயணிக்கும்போது இடையில் அவளை வேனில் ஏற்றிக் கொள்ள திட்டம் வகுக்கிறார்கள். அதன்படி அவளை ஏற்றிக் கொள்கிறார்கள். இப்போது வேனில் வேனை ஓட்டுகிற நாயகன்,...
லியோ _ விமர்சனம்

லியோ _ விமர்சனம்

Reviews
விஜய் ,திரிஷா,சஞ்சய்தத்,அர்ஜுன் ,கெளதம் வாசுதேவன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் ரசிகராகவே மாறி முழுக்க முழுக்கவிஜய் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உருவாக்கியிருக்கிறார். விஜய் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக அதிலும் நடுத்தர வயது கதாபாத்திரம் ஏற்று நடிப்பது  இதுவே முதல்முறை. பாத்திரத்தை உள்வாங்கி முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய். சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூரலிகான் போன்ற பெரிய நட்சத்திரங்களுக்கு சிறிய வேடம் என்றாலும் ஏற்ற பாத்திரத்திற்க்கு நியாயம் செய்து நடித்திருப்பது சிறப்பு. (விதி விலக்கு மிஷ்கின்) நேரில் பார்த்தால்கூட  இமாசல பிரதேசம் இந்த அளவு அழகாக இருக்குமா என்று தெரியவில்லை. DOP மனோஜ் பரமம்சா இமாசல பிரதேசத்தின் அவ்வளவு அழகையும் தன் கேமராவில் அப்படியே அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார். படத்திற்கு மிக...
திரையின் மறுபக்கம் – விமர்சனம்

திரையின் மறுபக்கம் – விமர்சனம்

Reviews
லியோ படம் வெளியாகும்போதே தனது திரையின் மறுபக்கம் படத்தை வெளியிடும் துணிச்சலுக்காக தயாரிப்பாளரையும், சினிமா உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக இயக்குனர் நிதின் சாம்சனையும் முதலில் பாராட்டி விடலாம். சினிமாவில் அதீத ஆசையுள்ள விவசாயி சத்திய மூர்த்தி நடிகருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட பாவத்துக்கு விலையாக,  கிராமத்தில் உள்ள விவசாய நிலம், சென்னையில் வசிக்கும் சொந்த வீடு என்று ஆரம்பித்து மனைவி அணிந்திருக்கும் தாலிச் சரடுவரை எப்படி எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை விவரித்திருக்கும் படம்தான் திரையின் மறுபக்கம். படத்தில் இடம் பெறும் பல நகைச்சுவைக் காட்சிகள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. உதாரணமாக படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரிலீஸ் பண்ண முடியாத கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளரிடம் சாப்பாட்டுக்கு இயக்குநரும் உதவி இயக்குநரும் பணம் கேட்க, வெகு சீரியசாக தனது ப...
ரத்தம் – விமர்சனம்

ரத்தம் – விமர்சனம்

Reviews
ரத்தம் - விமர்சனம் Cast Vijay Antony Mahima Nambiar, Nandita Swetha, Ramya Nambeesan Technical Crew Direction: C.S. Amuthan produced by Kamal Bohra, G.Dhananjayan, Pradeep B, and Pankaj Bohra of Infiniti Film Ventures Music Director : Kannan Narayanan D O P: Gopi Amarnath Editor: T.S. Suresh புலனாய்வு பத்திரிகையாளரான விஜய் ஆண்டனி மனைவி இழந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் மதுவுக்கு அடிமையாகி கொல்கத்தாவுக்கு குடி பெயர்ந்து தன் மகளுடன் வசித்து வருகிறார். பத்திரிகை அதிபரான நிழல்கள் ரவியின் மகனும், விஜய் ஆண்டனியின் நெருங்கிய நண்பனுமான செழியன் சமூக விரோதிகளால் கொல்லப்படுகிறார். கொல்கத்தா வந்து விஜய் ஆண்டனியிடம் இந்த தகவலை நிழல்கள் ரவி தெரிவிக்க, மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு வருகிறார் விஜய் ஆண்டனி. செழியன் கொலை குறித்து விசாரிக்கும் போது, இதே பாணியில் வேறு பல கொலைகளும் நடந்தி...