Wednesday, November 18

Reviews

‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘திரைப்பட விமர்சனம்

Reviews
ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே '' சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன். அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு. அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள். போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள். நந்...

அன்பறிவு – விமர்சனம்

Reviews
அன்பறிவு - விமர்சனம் புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்து தோண்டி எடுத்த மாதிரி அரதப்பழசான ஒரு கதையில், அபத்தமான காடசியமைப்புகளுடன்,  அசட்டுத்தனமாக நாயகன் நடித்தால் எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணம்தான் அன்பறிவு. ஒரு வேடத்துக்கே ஒர்த் இல்லாத ஹிப்ஹாப் ஆதிக்கு இரட்டை வேடங்கள் கொடுத்து நாயகனாக்கியிருப்பது குருவி தலையில் பனங்காய் வைத்ததைப் போலிருக்கிறது. கறுப்பு வெள்ளை பட காலத்திலிருந்து காலங்காலமாக வரும் இரட்டை வேட நாயகர்கள் கதையில் அடுத்து என்ன காட்சி வரப்போகிறது என்பதை சுலபமாக யூகிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜனவரி மாதம் சபரிமலைக்கு போக மாலை போடுவது ஃபேஷனாகி விட்டதுபோல், விவசாயிகளிடம் கார்ப்பரேட் கம்பெனிகள் நிலத்தை வாங்க முனைவதையும், ஜாதி அரசியல் செய்யும் கட்சிக்காரர்களையும் காட்சிப்படுத்துவது தமிழ் சினிமாவில் ஃபேஷனாகி விட்டதால், பழைய மொந்தை...
ரைட்டர் – விமர்சனம்

ரைட்டர் – விமர்சனம்

Reviews
ரைட்டர் - விமர்சனம் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ரைட்டராகப் பணி செய்து ஓய்வு பெறும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கும் சமுத்திரகனி, காவலர்களுக்கு சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு மேலதிகாரிகளின் கோபத்தையும் வெறுப்பையும் தேடிக்கொண்டதால், சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அப்பாவி ஒருவனை குற்றவாளியாக்கும் முயற்சியில் திருமண மண்டபத்திலும், மேன்ஷனில் தங்க வைக்கப்பட, அவனை பாதுகாக்க வேண்டிய பாரா பணி அவருக்குத் தரப்படுகிறது. அந்த அப்பாவி இளைஞனை இணை ஆணையர் என்ன குற்றத்தில் சிக்க வைக்க முயல்கிறார்...  அதற்கு காரணம் என்ன... தெரிந்தோ தெரியாமலோ இந்த பிரச்னையில் சிக்கிக்கொள்ளும் சமுத்திரகனி அதிலிருந்து மீண்டாரா இல்லையா? என்பதே ரைட்டர் படத்தின் கதை. பேச்சைக் குறைத்து, அடக்கி வாசித்து மிக யதார்த்தமான  நடிப்பால் நெஞ்சை...
சித்திரைச் செவ்வானம் – விமர்சனம்

சித்திரைச் செவ்வானம் – விமர்சனம்

Reviews
சித்திரைச் செவ்வானம் - விமர்சனம் சினிமாவில் ஒரு பிரிவில் பிரபலமாக இருப்பவர் இயக்குநராக அறிமுகமாகும்போது, தான் புகழ் பெற காரணமாக இருக்கும் துறைக்கு முக்கியத்துவம் தந்து தன் முதல் படத்தை உருவாக்குவார். உதாரணமாக ஒளிப்பதிவாளர் என்றால் கேமராவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ஆனால் ஸ்டண்ட் இயக்குநர் செல்வா இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் சித்திரைச் செவ்வானம் படத்தில் அதிரடி ஆக்ஷன்களுக்கோ சண்டைக்காட்சிகளுக்கோ முக்கியத்துவம் இல்லாமல் முத்தாகத் தந்திருக்கிறார் தன் முதல் படத்தை. கிராமத்து விவசாயி சமுத்திரகனியின் மகளைக் காணவில்லை என்று போலீஸ் வந்து அவரிடம் விசாரிக்கிறது. மகள் குளிக்கும் காட்சி காட்சி சமூக ஊடகங்களில் பரவியதுதான் என அறிந்து அதிர்ச்சியில் உறைகிறார் சமுத்திரகனி. அந்த வீடியோ மேலும் பரவாமல் தடுக்கவும், எடுத்தவர் யார் என அறியும் முயற்சியிலும் தானே இறங்குகிறார் கனி. அவரது முயற்...
பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

பொன் மாணிக்கவேல் – விமர்சனம்

Reviews
பொன் மாணிக்கவேல் - விமர்சனம் நிஜத்தில் வாழும் நேர்மையான போலீஸ் அதிகாரியின் பெயரில் வந்திருக்கும் கற்பனைக் கதைதான் பொன் மாணிக்கவேல். நீதிபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்படுகிறார். அவரது தலையையும் கொலைகாரர்கள் வெட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர். இந்தக் கொலையை துப்புத் துலக்கி கொலையாளியைக் கண்டுபிடிக்க, ஏற்கெனவே காவல் துறையில் பணியாற்றி பின்னர் வேலையை விட்டுச் சென்ற பிரபுதேவா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பிரபுதேவா விசாரணை நடக்கும்போதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு போலீஸ் இன்ஸ்பெக்டர் குண்டு வெடிப்பின் மூலம் கொல்லப்படுகிறார். அடுத்ததாக தொழிலதிபர் சுரேஷ் மேனன் கொல்லப்பட இருப்பதாக கணிக்கும் பிரபுதேவா அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முன் வருகிறார். சுரேஷ் மேனன் கொல்லப்பட்டரா....நீிதிபதியைக் கொன்றது யார் எதற்ககா கொலைகள் நடக்கின்றன என்ற மர்ம முடிச்சுகள் இறுதிப்பகுதியி்ல...
ஜெய் பீம் – விமர்சனம்

ஜெய் பீம் – விமர்சனம்

Reviews
ஜெய் பீம் - விமர்சனம் பணி ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு....அன்று மாலையே இனி அரசு காரை நான் பயன்படுத்தக்கூடாது என சொல்லி, புறநகரில் உள்ள தன் வீட்டுக்கு மின் ரயிலில் போனவர் என்ற ஒரு செய்தி மட்டுமே போதும்,... இந்தப்படம் அவர் வாழ்க்கையை அடிப்டையாக வைத்து உருவாக்கப்பட படம். சந்துரு வேடம் ஏற்ற சூர்யா மிக அற்பதமாக தன் வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் திரும்பத் திரும்ப விசாரணைக் காட்சிகள்....சூர்யா விசாரிக்கிறார்....போலீஸ் உயர் அதிகாரி பிரகாஷ்ராஜ் விசாரிக்கிறார்...இப்படியே திருப்பத் திரும்ப ஏராளமான காட்சிகள் இருந்தாலும் துவக்கத்திலிருந்து விறுவிறுப்பாக படம் செல்லக் காரணம்....அற்புதமான திரைக்கதை..... ஒரு திரைக்கதை சரியாக அமைந்தால் தனக்கான பாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்கிறார் உலகப் புகழ் பெற்ற ஒரு விமர்சகர். இதோ..அதற்கான சரியான உதாரணம்.. வழக்கறிஞர் சந்துரு வேடத்...
அகடு விமர்சனம்

அகடு விமர்சனம்

Reviews
இளைஞர்கள் நான்கு பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். இவர்கள் தங்கியிருக்கும் காட்டேஜின் மற்றொரு பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த ஒரு டாக்டர் தன் மனைவி மற்றும் மகளுடன் தங்கியிருக்கிறார். டாக்டரின் குடும்பத்துடன் இளைஞர்களுக்கு பழக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக புகைப்படக்கலையில் ஆர்வமுள்ள டாக்டரின் சிறு வயது பெண் கார்த்தி என்ற இளைஞனுடன் நன்கு பழகுகிறாள். திடீரென கார்த்தியும் டாக்டரின் மகளும் காணாமல் போகிறார்கள். மிகுந்த தேடலுக்குப் பிறகு கார்த்தியின் பிணம் காட்டுப் பகுதியில் கிடைக்கிறது. கார்த்தியை கொன்றது யார்? கொலைகான காரணம் என்ன? காணாமல் போன சிறுமி என்ன ஆனாள் என்ற சஸ்பென்ஸை சிறப்பான திரைக்கதை மூலம் அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் குமார். கொலை செய்தது யார்? அருவியில் குளிக்கும்போது வீண் சண்டை செய்த சமூக விரோதிகளா.....கடுமையான முகத்துடன் கண்டிப்பு காட்டும் வன அலுவலர...
விநோதய சித்தம் – விமர்சனம்!

விநோதய சித்தம் – விமர்சனம்!

Reviews
விநோசய சித்தம் விமர்சனம் முற்றிலும் மாறுபட்ட படம் என்று பொதுவாக எல்லா படங்களுமே விளம்பரப்படுத்தப்படும். ஆனால் உண்மையில் வித்தியாசமான படம் என்றால் அது விநோதய சித்தம்தான். நேரப்படி எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று சொல்லி, அப்படியேதான் தன் வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விதி என்பது வேறு அல்லவா... விநோசய சித்தம் விமர்சனம் விமர்சனம் படிக்க வேண்டாம், படத்தின் கதையைக் கேட்க வேண்டாம். இந்தப் படத்தைப் பாருங்கள்....கண்டிப்பாக புதியஅனுபவத்தைப் பெறுவீர்கள்....
உடன்பிறப்பே – விமர்சனம்

உடன்பிறப்பே – விமர்சனம்

Reviews
2டி என்டர்டெயிண்ட்மெண்ட் வழங்க ஜோதிகா சூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் ஐம்பதாவது படமாக வெளியாகியிருகிறது உடன் பிறப்பே. படத்தின் டைட்டிலில் தயாரிப்பு சூர்யா ஜோதிகா என்று போடாமல் ஜோதிகா சூர்யா என்று போட்டிருப்பது பாராட்டுக்குரிய விஷயம்தான். அண்ணன் தங்கை பாசப் பிணைப்பை எத்தனை படங்களில் பார்த்தாலும் அலுக்காது. இந்த முறை உடன் பிறப்பே படத்தில் சசிகுமாரும் ஜோதிகாவும் பாசக்கார அண்ணன் தங்கையாக வாழ்ந்து நம் உள்ளத்தில் இடம் பிடிக்கிறார்கள். "சாமியே தப்பு செய்தாலும் சட்டையைப் பிடிச்சு கேட்கணும்" என்று என்று ஆக்ரோஷமாக களம் இறங்கும் வேடத்தில் சசிகுமார், "சர்பத் குடிச்சாலும் சட்டப்படி குடிக்கணும்" என்று சாத்வீக வழியில் இயங்கும் சமுத்திரகனி, முன்னவரின் தங்கையாகப் பிறந்து வளர்ந்து பின்னவரின் மனைவியாக வாழும் ஜோதிகா என மூன்று பிரதான பாத்திரங்களை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் அருமையான கதையை உருவாக...
கோடியில் ஒருவன் – விமர்சனம்

கோடியில் ஒருவன் – விமர்சனம்

Reviews
ஊழல் செய்யும் உள்ளூர் அரசியல்வாதியால் பாதிக்கப்படும் விஜய் ஆண்டனியின் தாயார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உழைப்பதற்காகவே கலெக்டராக வேண்டும் என்று சொல்லி தன் மகனை வளர்த்து வருகிறார். இதற்காக சென்னை வரும் விஜய் ஆண்டனி, படித்துக்கொண்டே தான் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளி இடை நின்ற மாணவர்களுக்காக ட்யூஷன் எடுக்கிறார். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் விஜய் ஆண்டனி, நேர்முகத் தேர்வுக்காக டில்லி புறப்படும்போது ஊழல் அரசியல்வாதி ஆதரவுடன் சமூக விரோத காரியங்களில் ஈடுபடும் ஆட்கள் அவரைத் தாக்கி டில்லி செல்ல விடாமல் தடுக்கின்றனர். கலெக்டராகும் கனவு தகர்ந்தாலும், ஊழல் அரசியல்வாதிகளை எவ்வாறு எதிர்கொண்டு தன் லட்சியத்தை நிறைவேற்றுகிறார் என்பதை சுவைபடவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கும் படம்தான் கோடியில் ஓருவன். வழக்கமாக இவ்வகைப் படங்களில் ஹீரோயிசம் தூக்கலாக இருக்கும் வகையில் தனிமனித சாகத்...