Wednesday, November 18

Reviews

கசட தபற – விமர்சனம்

கசட தபற – விமர்சனம்

Reviews
கசட தபற - விமர்சனம் மணம் வீசும் ஆறு மலர்கள்....   அவற்றை ஒன்றாகத் தொகுத்துக் கட்டிய அழகான கதம்பமாலை.... . இதுதான் கசட தபற  திரைப்படம்.   ஆறு தனித்தனி கதைகள். ஆனால் இவை அனைத்தையும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு உள்ளவை. அந்தத் தொடர்பும் மிக அழகாக பின்னப்பட்டிருக்கிறது. கத்தி மேல் நடக்கும் வித்தை மாதிரியான வேலைதான் என்றாலும் கச்சிதமாக செய்திருக்கிறார் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கும் சிம்பு தேவன்.   ரெஜினா கேசாண்ட்ரா பிரேம்ஜி வரும் முதல் பகுதியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது. பிரைம்ஜி மீது திருட்டுப் பட்டம் கட்டி தாதா சம்பத் காதலை எப்படி முறித்தார் என்பது அடுத்த பகுதியில் விளக்கப்படுகிறது. தொடர்ந்து தாதாவுக்கு அவரது மகனே எப்படி முடிவு கட்டி தந்தையின் இடத்தில் அமர்கிறான் என சீராகச் செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் எதிர்பாரா திருப்பமும், யூகிக்க முட...
சுல்தான் – விமர்சனம்

சுல்தான் – விமர்சனம்

Reviews
நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து ரெளடியிசம் செய்து, சென்னை மாநகரையே கலக்கி வரும் தாதா நெப்போலியன். அவரது மகனான கார்த்தி நன்கு படித்துவிட்டு மும்பாயில் பணியாற்றுகிறார். கார்த்தி ஒரு முறை தந்தையைக் காண ஊருக்கு வரும்போது, ஒரு குழு மோதல் நடைபெறுகிறது. இதில் நெப்போலியனின் அடியாட்கள் பலர் கொல்லப்படுகின்றனர். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவனின் தாயார், "உன் அப்பா அரிவாளைக் கொடுத்து யாரையாவது வெட்டச் சொல்லி உன்னை அனுப்புவாரா?"  என்று கேட்கும் கேள்வி கார்த்தியின் கண்ணை திறக்கிறது. அப்பாவின் ரெளடியிசம் பிடிக்காமல் கார்த்தி ஊருக்கு கிளம்ப முடிவு செய்கிறார். அப்போது திடீரென நெப்போலியன் இறந்து விட, கார்த்தி அடியாட்கள் அனைவரையும் திருத்தி, புது வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார். கிராமம் ஒன்றில் விவசாய நிலங்களை ஆக்ரமித்து தொழிற்சாலை கட்ட நினைக்கும் கார்ப்பரேட் முதல...
கால் டாக்ஸி – விமர்சனம்

கால் டாக்ஸி – விமர்சனம்

Reviews
கால் டாக்ஸி - விமர்சனம் கே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர். கபிலா தயாரிப்பில் உருவாகியிருக்கும் கால் டாக்ஸி படத்தில் புதுமுகம் சந்தோஷ் சரவணன் கதாநாயகனாகவும், அஸ்வினி சந்திரசேகர் கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர். நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், ஆர்த்தி கணேஷ், பசங்க சிவகுமார் போன்ற மிகச் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களே. கால் டாக்ஸி டிரைவர்களின் பிரச்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்பதால் கதைக்களன் சற்று புதிதாக இருக்கிறது. கால் டாக்ஸி டிரைவர் ஒருவர் தன் சொந்த அலுவல் கராணமாக செல்ல வேண்டியிருப்பதால், தான் செல்ல வேண்டிய சவாரிக்கு தனது நண்பரான மற்றொரு டிரைவரை அனுப்பி வைக்கிறார். சவாரி சென்று கொண்டிருக்கையில், தன் காரில் பயணிப்பவர்களின் பேச்சிலிருந்து அவர்கள், தவறான காரியங்களில் ஈடுபடும் நிழலான ஆசாமிகள் என்பது டிரைவருக்குத் தெரிய வருகிறது....
ட்ரிப் – விமர்சனம்

ட்ரிப் – விமர்சனம்

Reviews
ஆதிவாசிகள் வசித்து வந்த தீவு ஒன்றில் ஒரு காலகட்டத்தில் உணவின்றி மனிதர்களே மனிதர்களை சாப்பிடும் நிலை உருவானதாகவும், இதன் காரணமாக ஆதிவாசிகள் கூட்டமே அழிந்து, மீதமிருந்த ஒரே ஒரு கடைசி மனிதனையும் பூச்சிகளை சாப்பிடும் செடி ஒன்று சாப்பிட்டுவிடவே அந்த கடைசி மனிதனும் அழிந்து விட்டான் என்ற குரல் முன்னுரையுடன் படம் துவங்குகிறது. சில இளைஞர்களும் யுவதிகளும் அடர்ந்த வனப்பகுதிக்கு ஒரு ட்ரிப் போகிறார்கள். செல்லும் வழியிலேயே ஒரு போன் கால் மூலம் எச்சரிக்கை மணி ஒலிக்கிறது. அந்த காட்டுப்பகுதிக்குள் சென்ற இரண்டு பேரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்று அந்த தொலைபேசி செய்யும் எச்சரிக்கையே மீறி பயணத்தைத் தொடர்கிறார்கள். செல்லும் வழியில் யோகி பாபுவும் கருணாகரனும் எதிர்படுகிறார்கள். அவர்கள் உடையில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வர்ணத்தை ரத்தம் என நினைத்து பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அந்த காட்டுக...
‘கபடதாரி’ – விமர்சனம்

‘கபடதாரி’ – விமர்சனம்

Reviews
சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சியில் கிடைக்கும் புதையல், அதைத் தொடர்ந்து நடக்கும் கொலை என்று விறுவிறுப்பாகத் தொடங்கும் கபடதாரி இறுதிவரை அந்த விறுவிறுப்பு குறையா வண்ணம் உருவாக்கப்பட்டதற்காக முதலில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைப் பாராட்ட வேண்டும். போக்குவரத்து காவலராக இருக்கும் சிபிராஜுக்கு குற்றப் பிரிவு காவலராகப் பணியாற்ற வேண்டும் என்பது ஆசை. எனவே புதையல் தொடர்பாக நடந்த இந்தக் கொலைகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முற்படுகிறார். அவருக்கு உதவ புலனாய்வு பத்திரிகை ஆசிரியர் ஜெயபிரகாஷ் முன் வருகிறார். இந்த கொலைகள் நடந்த சமயத்தில் இவற்றை விசாரித்த காவல்துறை அதிகாரி நாசர் ஆரம்பத்தில் சிபிராஜூக்கு உதவ மறுத்தாலும் பின்னர் மனம் மாறி முக்கிய தகவல்களைத் தருவதுடன் உடனிருந்தும் உதவுகிறார். இந்தக் கொலைகள் தொடர்பாக சாட்சியம் அளித்தவர்களில் ஒருவர் சொ...
பேய் இருக்க பயமேன் – விமர்சனம்

பேய் இருக்க பயமேன் – விமர்சனம்

Reviews
இன்னொரு பேய் படமா என்ற எண்ணம் படத்தை பார்க்கும் முன் இருந்தாலும், பேய் தொடர்பாக ஒரு புதிய செய்தியை சொல்லியிருக்கும் படம் பேய் இருக்க பயமேன். அதற்காகவே படக்குழுவைப் பாராட்டலாம். இதற்கு முன் வந்த படங்களில் பேய்கள் பார்வையாளர்களை பயமுறுத்தவே செய்யும். பின்னர் பேய்கள் நகைச்சுவைக்கு பயன்படுத்தப் பட்டன. இரண்டும் இன்றி ரசிகர்களை சோதித்த பேய்களும் உண்டு. ஆனால் இதுவரை வந்த எந்தப் படத்திலும் இல்லாத வகையில் பேயைப் பார்த்து பயப்படக்கூடாது என்பதுடன் பேயுடன் நட்பு பாராட்டினால் அது நமக்கு கட்டுப்படும் என்று பேய் இருக்க பயமேன் சொல்லியிருக்கிறரார்கள். புதுமணத் தம்பதி தனிக் குடித்தனம் நடத்த ஒரு பங்களாவுக்கு வருகிறார்கள். அந்த வீட்டில் ஜோடியாக இரண்டு பேய்கள் இருக்கின்றன. மனதளவில் ஒத்துப்போகாமல் இருக்கும் ரியல் ஜோடியை பேய் ஜோடி இணைத்து வைக்கிறது. நாயகனாக நடித்திருக்கும் கார்த்தீஸ்வரன்தான் படத்தி...
க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

க/பெ ரணசிங்கம் – விமர்சனம்

Reviews
கரிச காட்டு மண்ணுக்காரி அரியநாச்சியின் கதை க/பெ. ரணசிங்கம் என்ற பெயரில் படமாகியிருக்கிறது. இராமநாதபுரத்தில் பிறந்து வளர்ந்த ரணசிங்கம், விடிகிறது பொழுதும் அந்தி நேரமும் தன்னோட மனுச மக்களோட இருக்கணும்னு நினைக்கிற ஆளு. ஊரு மண்ணோடு பொழப்பு நடத்தி, பரம்பரை பரம்பரையாக நீரோட்டம் பாக்குற குடும்பத்துல பிறந்ததால இயற்கையாக நீரோட்டம் பார்க்குற திறமை வருது. மண்ணோட நீரோட்டம் பாக்குற ரணசிங்கத்திற்கு , அரியநாச்சியின் நெஞ்சுக்குழியின் நீரோட்டம் தெரிஞ்சி போக, வறண்ட காட்டில் காதல் பூக்குது. தண்ணியையும் காத்தையும் வச்சிதான் உலக அரசியல் இயங்க போகுதுன்னு நினைக்கிற ரணசிங்கம், தண்ணீருக்காக பொட்டல் காட்டில் தண்ணி வண்டி தள்ளுகிற பொம்பளைங்களை பார்த்து தவித்து போகிறார்.கம்மைக்கு தண்ணி கொண்டு வர ,நின்று போன நதி நீர் திட்டத்தை செயல்படுத்த மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துகிறார். மக்களுக்காக போராடும் ரணசிங்கத...
காலேஜ் குமார் – விமர்சனம்

காலேஜ் குமார் – விமர்சனம்

Reviews
அரிவாள், வெட்டு, குத்து , துப்பாக்கி என்று வன்முறை அதிகமாகிவிட்ட தமிழ்ப்படங்களில், குடும்பப் பாங்கான திரைப்படங்கள் என்பது அரிதாகிப்போவதில் ஆச்சரியம் இல்லைதான். பாண்டியராஜ் போன்ற இயக்குநர்கள் புண்ணியத்தில் அவ்வப்போது குடும்பக் கதையம்சங்கள் கொண்ட படங்கள் காணக்கிடைக்கின்றன. குடும்பத்துடன் அனைவரும் பார்க்கக்கூடிய ஒரு படத்தைத் தந்ததற்காகவே இயக்குநர் ஹரி சந்தோஷுக்கு முதலில் ஒரு பாராட்டுப் பத்திரத்தை வாசித்து விடலாம். 2017ஆம் ஆண்டு கன்னடத்தில் வந்த பெரும் வெற்றி பெற்ற காலேஜ் குமார் படத்தை தமிழில் இயக்கி தமிழ்ப்படவுலகுக்கு வந்திருக்கிறார் ஹரி சந்தோஷ். மகனை படி படி எந்த நேரமும் தொந்தரவு செய்து, எப்போதும் அவன் முதல் மதிப்பெண்தான் பெற வேண்டும் என்று எதிர்பார்க்கும் தந்தை பிரபு. மகனால் ஏன் சரியாகப் படிக்க முடியவில்லை என்றுகூட யோசிக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த மகன் ராகுல் விஜய் நீ வே...
திரெளபதி – விமர்சனம்

திரெளபதி – விமர்சனம்

Reviews
திரெளபதி  - விமர்சனம் நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும், பெரும் பொருள் செலவில் உருவாகும் படங்களுக்கும் திரைக்கு வருவதற்கு முன்பே பரபரப்பான விளம்பரங்கள் கிடைப்பது வழக்கம்தான் என்றாலும், 'திரெளபதி' போன்ற குறைந்த பட்ஜெட் படம் திரைக்கு வரும்முன்பே பரபரப்பைக் கிளப்பியது மிக அரிதாக நடைபெறக்கூடிய விஷயம்தான். கிரவுட் பண்டிங் முறையில் குறைந்த செலவில் தயாரான 'திரெளபதி' திரைப்படம் தரமான முறையில் உருவாக்கப்பட்ட படம் என்றே சொல்லலாம். பரபரப்பைக் கிளப்பக்கூடிய கதையம்சம் கொண்ட கதையைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநர் மோகனை பாராட்டலாம். அதையும் கத்தி மேல் நடப்பதுபோல் நேர்த்தியாக திரையில் சொன்னதற்காக ஒரு பாராட்டு விழாவையே நடத்தலாம். நாயகன் ரிச்சர்ட் தனது மனைவி ஷீலா மற்றும் மனைவியின் ஒன்று விட்டதங்கையையும் (சித்தப்பா மகள்) கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளியே வருகிறார். ...
LG Display to end domestic production of LCD TV panels by end of 2020

LG Display to end domestic production of LCD TV panels by end of 2020

Reviews
Forbade panther desolately iguanodon alas in goodness goodness re-laid when wishful but yet and trim hey went the tamarin some during obsessively into far notwithstanding. Simply sit, stand or lie in a comfortable position and close your eyes. Take in a deep breath, inhaling slowly and all the way into your belly. Hold your breath for a moment, then exhale slowly. Repeat for however long you like. Short or long, meditation has the power to change your mood, your day, and even your life. If you’ve never tried a short meditation, why not do it today? You might be amazed at what happens. Several people on Twitter and other theatre kid-dominated social media platforms have responded to these offensive, misguided reviews of The Lightning Thief by demanding that major publication...