Tuesday, November 17

Reviews

கைலா – விமர்சனம்

கைலா – விமர்சனம்

Reviews
முகத்தை அகோரமாக்கிக்கொண்டு அபத்தமான முறையில் பயமுறுத்தும் கிளிஷே பேய்ப்படங்களுக்கு மத்தியில் கொஞ்சம் மாறுபட்ட முறையில் மர்மங்கள் நிரம்பிய த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காகவே இயக்குநர் பாஸ்கர் சீனிவாசனை முதலில் பாராட்டலாம். குறிப்பிட்ட ஒரு வீட்டின் முன் மர்மமான முறையில் மரணங்கள் நிகழ்கின்றன, அந்த வீட்டில் உள்ள பேய்தான் இதற்கு காரணம் என்று பொது மக்கள் திடமாக நம்புகின்றனர். மரணங்கள் குறித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முடியாமல் திணறுகின்றனர். தானா என்ற பெண் எழுத்தாளர் இந்த மர்மங்ளை எவ்வாறு அம்பலப்படுத்துகிறார் என்பதுதான் கைலா படத்தின் கதை. பெண் எழுத்தாளர் தானாவாக தானா நாயுடு நடித்திருக்கிறார். முகத்தையே மறைக்கும் அளவுக்கு இவர் அணிந்திருக்கும் மூக்குக் கண்ணாடி இவரை எழுத்தாளர் என்று பார்வையாளர்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறது. ஆனால் எழுத்தாளரான இவர் அமெ...

கேப்மாரி- விமர்சனம்

Reviews
ஒரு படத்தை துவக்குவதென்பதே மகத்தான கலை. சடாரென எதையாவது காட்டி ஆரம்பித்து விடக்கூடாது. குறி்ப்பிட்ட பாத்திரத்துக்காக கேமரா காத்திருக்கு வேண்டும். அந்தப் பாத்திரம் ஃபிரேமுக்குள் வந்ததும், மள மளவென்றி தொய்வின்றி கதையே சொல்ல ஆரம்பித்துவிடவேண்டும் இயக்குநர் என்கிறார் உலகபுகழ் பெற்ற ஒரு திரைப்பட விமர்சகர். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கதில் வந்திருக்கும் கேப்மாரி படத்தில், தமிழக அரசுக்கு நன்றி. காம சூத்திரம் புத்தகத்துக்கு நன்றி, தமிழக காவல் துறைக்கு நன்றி என மூன்று நான்கு நன்றி கார்டுகள் போடப்பட்டதும் முதல் காட்சிய ரயிலின் முதல் வகுப்பு கூப்பேவில் ஆரம்பிக்கிறது. தனது கூப்பேயில் நுழையும் நாயகனுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கறது. எதிர்பக்கத்தில் நாயகி தொடை தெரியும் ஆடையில் இரண்டு கால்களையும் அகல விரித்தபடி ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே அமர்ந்திருக்கிறார். நான் சாப்பிட்டுட்டு சாப்பிட வேண்டும்...
தவம் – விமர்சனம்

தவம் – விமர்சனம்

Reviews
சென்னையில் சிட்பண்ட் நடத்தும் சந்தான பாரதி, தனது மகளின் திருமணத்தை முன்னிட்டு ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் விடுமுறை கொடுத்து தன் சொந்த கிராமத்துக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடுகிறார். அன்னை வயல் என்ற அந்த கிராமத்தின் பெயரைக் கேட்டதும் கதாநாயகி பூஜாஸ்ரீ மனதில் ஓர் இனம் புரியாத மகிழ்ச்சி. திட்டமிட்டபடி அனைவரும் அந்த கிராமத்துக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கும்போதுதான் பூஜாஸ்ரீக்கு அந்த கிராமத்துடன் இருந்த உறவு தெரிய வருகிறது. தற்போது விவசாயம் பட்டுப்போயிருந்தாலும், ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாகத்தான் இருந்திருக்கிறது அந்த கிராமத்தில். விவசாயத்தை தவம்போல் நினைத்து செய்யும் சீமான், ஊர் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் ஓடோடி வருபவர். கிராமத்து தாதாபோல் வலம் வரும் விஜய் ஆனந்த், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று அந்த கிராமத்தில் தொழிற்சாலை கட்ட துணை நிற்கிறார். இதற்காக அரசு அதிகார...
மயூரன் – விமர்சனம்

மயூரன் – விமர்சனம்

Reviews
காணாமல் போன நண்பனைத் தேடி இரண்டு இளைஞர்கள் தெருத்தெருவாக அலைவதில் ஆரம்பிக்கிறது மயூரன். நண்பர்கள் இருவரும் பைக்கில் தெருத்தெருவாக சுற்றி அலைந்து ஏதோ ஒரு குழந்தையைத் தேடுவதைப்போல், எதிர்படுகிறவர்களிடம் கேள்விகள் கேட்டு விசாரிப்பதையே இடைவேளைவரை காட்டுகிறார்கள் என்றால் படம் எப்படி இருக்கும் என்பதை நீங்களை புரிந்து கொள்ளலாம். தாளாளர் ஒருவரே தன் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை வைத்து போதை மருந்து கடத்துவதாக ஒரு அபத்தமான கதைக் களத்தை அமைத்துக்கொண்டு அதை படமாக வேறு எடுத்திருக்கிறார்கள். ஆர்வக்கோளாறில் நடிக்க வருபவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு படமெடுக்கும் உப்புமா கம்பெனி படத்தில் வரும் நடிக நடிகையரைப்போல் இருக்கிறார்கள் இந்தப் படத்தில் நடித்திருப்பவர்கள். வில்லனாக வரும் வேல.ராமமூர்த்திதான் படத்தில் தெரிந்து ஒரே முகம். இவர் பெரிய்ய்ய்ய எழுத்தாளராம். படத்தில் இவர் ஒரு வ...
தி லயன் கிங் – விமர்சனம்

தி லயன் கிங் – விமர்சனம்

Reviews
முஃபாசா என்ற சிங்கம் ஒட்டுமொத்த காட்டு விலங்குகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, காட்டுராஜா என்ற பெயருக்கேற்ப செம்மையாக ஆட்சி செய்கிறது. முஃபாசாவின் தம்பியான ஸ்காருக்கு எப்படியாவது தான் காட்டு ராஜா ஆகிவிட வேண்டும் என்று ஆசை. இதற்காக முஃபாசாவை வஞ்சகமாக கொலை செய்வதுடன், சூழ்ச்சி செய்து முஃபாசாவின் மகனான சிம்ஹாவையும்  காட்டைவிட்டே துரத்தி விடுகிறது.நீண்ட தூர பயணத்துக்குப்பின் வேறொரு காட்டுக்குச் சென்று வளரும் சிம்ஹா, பெரியவனான பின் தன் நண்பர்களுடன் வந்து சித்தப்பா ஸ்காரைக் கொன்று தந்தையின் கொலைக்கு பழி தீர்ப்பதுடன் மீண்டும் தந்தையைப்போலவே நல்லாட்சி செய்ய ஆரம்பிக்கிறது. இதுதான் லயன் கிங் படத்தின் கதை. தான் சிறுவனாக இருந்தபோது தன் தந்தையைக் கொன்றவர்களை, பெரியவனான பிறகு கதாநாயகன் பழி வாங்கும் கதையை ஆயிரத்து சொச்சம் படங்களில் பார்த்திருப்போம். ஆயினும் ஒரு இடத்தில்கூட போரடிக...
கூர்கா -விமர்சனம்

கூர்கா -விமர்சனம்

Reviews
காவல் துறையில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்கான முயற்சியில் ஈடுபடும் யோகிபாபுவுக்கு தோல்வியே ஏற்படுகிறது. எனவே சக்திமான் என்ற செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறார். மெட்ராஸ் மால் என்ற பிரபல வணிகவளாகத்தில் செக்யூரிட்டி பணியில் ஈடுபடும்போது, தீவிரவாதிகள் மக்களை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு பெரும் தொகை கேட்டு மிரட்ட, சாதாரண செக்யூரிட்டியாக இருக்கும் யோகி பாபு அவர்களை எப்படி மீட்கிறார் என்பதே கூர்கா படத்தின் கதை. ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் கவலைப்படாமல் கூர்கா படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சாம் ஆன்டன். இந்த முயற்சியில் அவர் முழு வெற்றியை பெற்றிருக்கிறார் என்றுதான் கூற வேண்டும். முழு படத்தை ஒட்டுமொத்தமாகத் தாங்கிப்பிடிக்கிறார் யோகிபாபு. அவரது முகத்தோற்றமும் உடல் மொழியும் பெரிதும் ஒத்துழ...
மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

Reviews
  புதுமுகங்கள் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி ஆகியோருடன் இளையராஜாவின் இசைப்பாடல்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ். மலைப்பகுதியிலுள்ள கிராமம் ஒன்றுக்கு வரும் சர்க்கஸ் குழு, கூடாரம் அமைத்து தங்கள் வித்தைகளை வெளிப்படுத்தி வருகிறது.சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகளும், முக்கிய சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்பவருமான ஸ்வேதா த்ரிபாதியை கண்டதும் காதல் கொள்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். ஆரம்பத்தில் தயங்கினாலும், பின்னர் ஸ்வேதாவும் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்தக் காதலர்கள் இணைய குறுக்கே நின்றது எது காதலர்கள் இணைந்தார்களா என்பதே மெஹந்தி சர்க்கஸ். சற்றே இளைத்த சின்ன வயசு ரெஹ்மானைப்போல் இருக்கிறார் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ரங்கராஜ். புதுமுகம் என்ற சுவடே இல்லாமல் பல படங்களில் நடத்த அனுபவம்மிக்க நடிகரைப்போல் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுதியிருப்பத...
குடிமகன் – விமர்சனம்

குடிமகன் – விமர்சனம்

Reviews
  அன்பான் மனைவி, ஆசை மகனுடன் ஆனந்தமாக வாழபவர் ஜெயகுமார். மனைவியின் மடிமீது தலைவைத்தப்படி இருக்க, மகனும் வந்து அப்பாவின் மீது படுத்துக் கொள்ள, இந்த உலகத்தில் என்னைவிட அதிரஷ்டசாலி யாரும் இல்லை என்று சொல்கிறார் ஜெயகுமார். இப்படி இருந்த குடும்பம் எப்படி குடியால் நாசமானது என்பதுதான் குடிமகன் படத்தின் ஒரு வரிக் கதை. வசிக்கும் கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டது எதுவானாலும் கலந்து கொண்டு ஊருக்கே பிடித்த நல்லவனாக நடந்து கொள்கிறார் ஜெயகுமார். அந்த ஊர் அரசியல் பிரமுகர் மதுபானக்கடை ஒன்றை திறக்கிறார். குடிப்பழக்கம் உள்ள நண்பர்களின் தொடர்பால் ஜெயக்குமாருக்கும் அந்தப் பழக்கம் ஏற்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஜெயகுமார், ஒரு சந்தர்பத்தில் குடிப்பதற்காக மனைவியின் தாலியைத் திருடி கொண்டுபோய்விடுகிறார். இறுதியில் அவர் திருந்தி குடிப்பழக்கத்திலிருந்து மீண்டாரா இல...
எம்பிரான் – விமர்சனம்

எம்பிரான் – விமர்சனம்

Reviews
நாயகியை துரத்தித் துரத்தி காதலிக்கும் நாயகனைத்தான் பெரும்பாலான படங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நாயகனை துரத்தித் துரத்தி காதிலிக்கும் அழகான நாயகியை எம்பிரான் படத்தில் பார்க்கலாம். டாக்டராகப் பணியாற்றும் நாயகன் ரெஜித் மேனனை, நாயகி ராதிகா ப்ரீத்தி விரும்புகிறார். ஆனால் அவரிடம் தன் காதலை எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். பின் தொடர்ந்து செல்கிறார்... படம் எடுக்கிறார் ஆனாலும் தன் மனதில் இருப்பதை சொல்ல அவருக்கு சந்தர்பம் கிடைப்பதில்லை. டாக்டரை தனியாக சந்திக்க, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ள செய்யும் முயற்சிகளும் தோல்வியில் முடிகிறது. கடைசியில் குளிர்பானங்களை பாட்டில் பாட்டிலாகக் குடித்தும், ஐஸ்கிரீமை அள்ளி அள்ளி சாப்பிட்டும் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டு டாக்டரைப் பார்க்கப் போனால் அன்று ரெஜித் மேனன் வரவில்லை. அவருக்கு பதில் பெண் டாக்டர் ஒருவர் இருக்கிறார். ர...