காலேஜ் ரோடு – திரைப்பட விமர்சனம்

0

Loading

காலேஜ் ரோடு திரைப்பட விமர்சனம்
கல்யாணம் முதல் கருமாதிவரை வணிகமயமாகிவிட்ட சூழலில் கல்வியும் கல்விக்கூடங்களும் விதிவிலக்காகிவிடுமா என்ன?
தமிழகத்தின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவராக சேருகிறார் லிங்கேஷ்.
வங்கிகளின் தரவுகளை திருடமுயற்சிக்கும் மென் பொருளை யாரேனும் பயன்படுத்தினால் அந்த மென்பொருளின் முழுவிவரம் குறித்து லிஙகேஷ் நிறுவிய மென்பாருளுக்கு தகவல் வரும்….
அப்படி ஓர் அகுமையான மென்பொருள் லிங்கேஷ் கண்டுபிடித்திருப்பது… லிங்கேஷ் அந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே ஒரு வங்கிக்கொள்ளை நடைபெறுகிறது.
நாயகன் லிங்கேஷ்கும் வங்கி கொள்ளை சம்பவங்களுக்கான லீட் எப்படி வருகிறது என்பதையும், வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன என்பதையும், கல்வி எப்படிப் பட்டவர்கள் கைகளில் சிக்கியுள்ளது என்பதையும் பல அதிரடி திருப்பங்களோடு விரிவாக பேசுகிறது படத்தின் திரைக்கதை.
முதன்மை நாயகனாக லிங்கேஷ் இந்தப்படத்தில் நல்ல முதிர்ச்சியான நடிப்பை கொடுத்துள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான நடிப்பு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. நாயகியின் பாத்திரம் சிறியது என்றாலும் கொடுத்த வேலையை குறைவின்றி செய்திருக்கிறார். லிங்கேஷின் கிராம நண்பர்களாக வரும் நால்வரும் நல்ல தேர்வு. காமெடிக்கென தனி ட்ராக் இல்லாமல் கதையோடே இணைத்துள்ளார் இயக்குநர். காமெடியில் ஒருவர் மட்டும் கவனம் ஈர்க்கிறார்

யூத்புஃல்லாக ஆரம்பிக்கும் முன்பாதியில் ஒளிப்பதிவாளர் வண்ணங்களை அழகாக இணைத்து விஷுவலாக படத்திற்கு எனர்ஜி ஏற்றியுள்ளார். இசை அமைப்பாளர் தன் வேலை கச்சிதமாக கொடுத்துள்ளார். படத்தில் வரும் மிக முக்கியமான ப்ளாஷ்பேக் சீக்வென்ஸில் பின்னணி இசை அருமையாக அமைந்துள்ளது. ஆப்ரோ நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார்.

எளியவர்களுக்கு கல்வி எட்டாக்கனி ஆகிவிடக்கூடாது என்ற கருத்தை தன் முதல் படத்திலே அக்கறையோடு பதிவு செய்த இயக்குநர் ஜெய் அமர் சிங் பாராட்டுக்குரியவர். சிறிய பட்ஜெட்டிலும் இவ்வளவு பிரம்மாண்டத்தையும் நம்பகத்தன்மையையும் மேக்கிங்கில் கொண்டு வந்தது நிச்சயமாக ஆச்சர்யம்.

ஆப்ரோ இசையும், கார்த்திக் சுப்ரமணியம் ஒளிப்பதிவுவும் படத்துக்கு பக்க பலமாக இருக்கின்றன.

முக்கிய வேடங்களில் நடிக்கும் மோனிகா, ஆனந்த்நாகு, KPY அன்சர், அக்சய்கமல், பொம்முலக்‌ஷ்மி, நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அறுவிபாலா ஆகியோரும் கவனம் ஈர்க்கிறார்கள்.

கல்விக்கடன் என்பது படித்து முடித்த ஆறாவது மாதத்துக்கு பிறகு அல்லது வேலையில் சேர்ந்த முதல் முதல் மாதத்திலிருந்தே இதில் எது முன்னாதாக வருகிறதோ அதிலிருந்த கட்ட வேண்டியது என்ற நடைமுறை இருக்கும்போது, இப்படி எந்த வங்கி மேலாளாராவது நடந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுகிறது..

ஆயினும் கல்விக் கடன் குறித்து பேசும் படம் என்பதால் கவனம் ஈர்க். கிறது காலேஜ் ரோடு. மதிப்பெண் 3 5

Share.

Comments are closed.