![]()
விமர்சனம் _ எங்கள் தங்கம்
நந்தினி இயக்கத்தில் சமந்தா அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ‘எங்கள் தங்கம்’, ஒரு சாதாரண குடும்பச் சூழலில் தொடங்கி விறுவிறுப்பான ஆக்ஷன் களத்திற்கு மாறுகிறது.
கதை
வீட்டு எதிர்ப்பை மீறி திகந்தை மணந்த சமந்தா, தன் புகுந்த வீட்டில் அங்கீகாரம் பெறப் போராடுகிறார்.
அமைதியான மருமகளாகத் தன்னை நிலை நிறுத்த அவர் முயற்சிக்கும் சூழலில், ஜான்சி என்ற அவரது கடந்த கால அடையாளம் வெளிச்சத்திற்கு வருகிறது.
கடந்த காலத்தில் தன் வாழ்வில குறிக்கிட்ட கர்ணா என்ற நபருடன், தற்போது அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில் மோதல் ஏற்பட, அதிலிருந்து அவர் எப்படித் தப்பிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு.
திரைக்கதை அலசல்
சமந்தா இந்தப் படத்தில் இரண்டு மாறுபட்ட முகங்களைக் காட்டியிருக்கிறார். குடும்பப் பாங்கான பெண்ணாகவும், அதே சமயம் அதிரடி ஆக்ஷன் நாயகியாகவும் முழு திறமையையும் வெளிப்படுத்தி முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருக்கிறார் .
குறிப்பாக, சண்டைக் காட்சிகளில் அவர் காட்டிய வேகம் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.
திரைக்கதையைப் பொறுத்தவரை முதல் பாதி சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது. இடைவேளைக் காட்சிகள் எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. இருப்பினும், இரண்டாம் பாதியில் காட்சிகள் யூகிக்கக் கூடிய வகையில் அமைந்துவிட்டது படத்தின் வேகத்தைக் குறைக்கிறது.
வில்லன் கர்ணாவின் பிளாஷ்பேக் காட்சிகள் திரைக்கதையில் பெரிய தாக்கத்தை உருவாக்கத் தவறிவிட்டன.
எனினும், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை மற்றும் நேர்த்தியான ஒளிப்பதிவு, ஸ்டண்ட் காட்சிகளைச் சிறப்பாகக் கடத்துகின்றன.
சாதகங்கள்
சமந்தாவின் மிரட்டலான நடிப்பு மற்றும் ஆக்ஷன்.
கிளைமேக்ஸ் மற்றும் பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சிகள்.
ஈர்க்கும் வகையில் அமைந்த முதல் பாதி.
பாதகங்கள்
இரண்டாம் பாதியின் திரைக்கதை யூகிக்கக்கூடிய வகையில் இருப்பது.
அழுத்தமில்லாத பிளாஷ்பேக் பகுதிகள்.
இறுதித் தீர்ப்பு
‘எங்கள் தங்கம்’ படம் சில பலவீனங்களைக் கொண்டிருந்தாலும், ஆக்ஷன் விரும்பிகளுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.
பெரிய எதிர்பார்ப்புகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இது கண்டிப்பாகத் தாராளமாக ரசிக்கக்கூடிய ஒரு படைப்பு.


