![]()
நூறு சாமி _ விமர்சனம்
நெஞ்சை நெகிழ வைக்கும் ஓர் உணர்ச்சிகரமான பயணமாக திரையில் மலர்ந்திருக்கிறது நூறு சாமி.
கள்ளக்குறிச்சியின் பின்னணியில், கணவனை இழந்த செல்வி எனும் தாயின் போராட்டமான வாழ்க்கையை மையமாக வைத்துப் பின்னப்பட்டிருக்கிறது ‘நூறு சாமி’.
ஸ்வாசிகா, தனது நடிப்பால் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். மகன்களுக்காகவே வாழ்ந்து, தன் ஆசைகளைத் தியாகம் செய்யும் அந்தத் தாயின் தவிப்பு, திரையில் அப்படியே நம் மனதை வருடுகிறது.
நடிப்புப் பாய்ச்சல்:
ஸ்வாசிகா உடல்மொழி, தயக்கம், ஏக்கம் எனப் பல பரிமாணங்களில் ஸ்கோர் செய்கிறார்.
மூத்த மகனாக அஜய் திஷானின் அழுத்தமான நடிப்பு நம்மை வெகுவாக்க் கவர்கிறது.
சர்ப்ரைஸாக வரும் விஜய் ஆண்டனி, தனது பாணியில் படத்திற்கு ஒரு பிளஸ்! மற்ற துணை கதாபாத்திரங்களும் கதையின் ஓட்டத்திற்குச் சரியான பங்களிப்பைத் தந்துள்ளனர்.
திரை அனுபவம்:
இயக்குநர் சசி, ஒரு உண்மைச் சம்பவத்தைத் மையமாகக் கொண்டு, சமூகத்தில் பெண்கள் மீது திணிக்கப்படும் நிபந்தனைகளுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.
ஆணாதிக்கச் சிந்தனை, சாதியக் கட்டமைப்பு மற்றும் குடும்ப கௌரவம் என்ற பெயரில் பெண்களின் விருப்பங்கள் எப்படி எல்லாம் ஒடுக்கப்படுகின்றன என்பதை மிக நேர்த்தியாகப் படம்பிடித்துள்ளது திரைக்கதை.
தொழில்நுட்பத் திறம்:
ஒளிப்பதிவாளர் தர்ஷனின் கேமரா, செல்வியின் குறுகிய உலகத்தை அழகாகத் திரையில் கடத்தியுள்ளது. ஹரிஷ் யுவராஜின் எடிட்டிங், கதை எங்கும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக நகருவதை உறுதி செய்கிறது.
இசையமைப்பாளர் பாலாஜியின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம்; ‘அம்மா அம்மாதான்’ பாடல் மனதை நெகிழ வைக்கிறது.
பிற்பகுதியில் வரும் ஒரு காட்சியில் ஒரு மாமனார் தன் விதவை மருமகளுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புவதாக சொல்லும் காட்சி தான் படத்தின் நூறு சாமி படத்தின் ஆன்மா.
மொத்தத்தில், உணர்ச்சிகளுக்கும் சமூக அக்கறைக்கும் இடையிலான ஒரு நேர்மையான பயணம் இந்த ‘நூறு சாமி’.
ஒருமுறை தாராளமாகத் திரையரங்குகளில் ரசிக்கலாம்!


