கிளாஸ் மேட்ஸ் _  விமர்சனம்

0

Loading

Glassmates”

Production Company: Mughavai Films International

Produced by : J.Angaiyarkannan

CAST: Angaiyarkannan, Brana, Kuttypuli Sharavana shakthi, Mayilsamy, Tm karthik, Chaams, MP Muthupandi, Abi Nakshatra, Arul doss, Meenal,

CREW:
Written & Directed by : Kuttypuli Sharavana Shakthi
Banner : Mughavai Films International
DOP : Arunkumar Selvaraj

கிளாஸ் மேட்ஸ் _  விமர்சனம்

மது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்று அரசாங்கம் எவ்வளவோ பிரச்சாரம் செய்கிறது. ஆனால் அதை கேட்பார் இல்லை என்பது வேறு விஷயம். இந்த பிரச்சாரத்தையே ஒரு படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?
குடியினால் தனி மனிதன் மட்டுமல்ல.. அவனது குடும்பமும் அழியும் என்பதை சொல்ல முற்பட்டு இருக்கிறார்கள்.

ஹீரோவும் அவன் மாமனும் எப்போதும் போதையில் மிதப்பபவர்கள். அப்படியான ஒரு போதை நேரத்தில்  கார் ஓட்டி, விபத்தை ஏற்படுத்துகிறான் ஹீரோ; அதனால் வழக்கு வாய்தா என அலைகிறான். இன்னொருபக்கம், தனது புது மனைவி மீது சந்தேகம் கொள்கிறான். ஆகவே அவள் பிரிந்துவிடுகிறாள்.
வழக்கம்போல கிளைமேக்ஸில், இவர்கள் திருந்துகிறார்கள். இதுதான் கதை.

ஹீரோ அங்கையற்கண்ணனும் அவரது மாமாவாக வரும்  ( படத்தின் இயக்குநர்) குட்டிப்புலி சரவண சக்தியும், குடிகார சேட்டை என்று ஏதேதோ செய்து எரிச்சலூட்டுகிறார்கள் முகம் சுளிக்க வைக்கிறார்கள் (  சற்றும் நாகரீகமே இன்றி நினைத்த இடத்தில் எல்லாம் சிறுநீர் கழிக்கிறார்கள்)

அதே நேரம், “ போதையில் மனைவியின் ‘விருப்பத்தை’ நிறைவேத்த முடியலையே’ என்கிற காட்சியில் கவனிக்க வைக்கிறார் குட்டிப்புலி.
ஹீரோ மற்றும் அவரது மாமன் ஆகியோரின் குடிக்கூத்துக்களை அவர்களது மனைவிமார்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது போன்ற காட்சிகள் எதார்த்தத்தில் இருந்து வெகுவாகவே விலகி நிற்கின்றன.
‘அயலி’ அபி நட்சத்திரா, கிளைமாக்ஸில் அதிரவைக்கிறார். குடிகார கதாபாத்திரத்துக்கு பெயர் பெற்ற மயில்சாமியும் படத்தில் மதுப் ப்ரியராக வந்து போகிறார். நம் நினைவிலும் நற்கிறார்.

வசனங்களில் சில ஈர்க்கின்றன. ‘நல்லவன் குடிச்சா குழந்தை, கெட்டவன் குடிச்சா கொலைகாரன்’ என்பது ஒரு உதாரணம்.  

வெளிநாட்டில் சம்பாதித்து, கிராமத்தில் கெத் ஆக வலம் வந்து  குடிக்கு அடிமையாகும் சாம்ஸ், மதுப் பிரியர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் பழகி, அவர்களைவிட தானும் குடிகாரனாக மாறிப்போகும் டி எம் கார்த்திக் ஆகியோர் சிரிக்க வைக்க முயல்கிறார்கள்.

அருள்தாஸ் சிறிது நேரமே வந்தாலும் வழக்கம்போல இயல்பாக நடித்து கவனம் பெறுகிறார்.

இசை, ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம். பாஸ் மார்க் போடலாம்.

படம் முழுக்க மதுக் காட்சிகளை வைத்துவிட்டு, கிளைமாக்சில் வகுப்பு எடுக்கிறார்கள்.

படத்தில் இடம் பெற்றிருக்கும்மது அருந்தும் காட்சிகளை பார்க்க பார்க்க நமக்கே போதை வந்துவிடும் போலிருக்கிறது.

மதிப்பெண் 2.5/5

Share.

Comments are closed.