Friday, January 24

நேற்று இந்த நேரம் – விமர்சனம்

Loading

நேற்று இந்த நேரம் – விமர்சனம்

ஜப்பானிய இயக்குனர் அகிரா குருசேவா இயக்கிய ‘ரோஷமான்’ சிவாஜி நடித்த ‘அந்த நாள்’ கமல் நடித்த ‘விருமாண்டி’ ஆகிய பட பாணியில் வந்திருக்கும் ஒரு புதுமைச் சித்திரம் ‘நேற்று இந்த நேரம்’.

அதாவது நடந்த சம்பவம் ஒன்றை வெவ்வேறு நபர்கள் அவர்களது கோணத்தில் சொல்லும் கதை இது.
அறிமுக இயக்குநர் சாய் ரோஷன்  உருவாக்கி இருக்கும் ‘நேற்று இந்த நேரம்’ எனும் கிரைம் திரில்லர் ஜேனரிலான திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சீரியல் கில்லர் ஒருவன் பல கொலைகளை செய்வதாக கூறப்படும் மலைப்பகுதி ரிசார்ட் ஒன்றில் கல்லூரி மாணவ மாணவியர் சிலர் வந்து தங்குகின்றனர்.

நிகில் ( ஷாரிக ஹஸன்) எனும் இளைஞரை சுற்றி கதை நடைபெறுகிறது. நாயகன் நிகிலின்  பெற்றோர் விவாகரத்து செய்து கொள்கிறார்கள்.

அதன் பிறகு நிகிலின் தாய் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு சென்று விடுகிறார். ஆனால் நிகிலின் தந்தை மணமுறிவை ஏற்க மனமில்லாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகி மரணமடைந்துவிடுகிறார்.

இதனால் நாயகன், திருமணமே வேண்டாம் என்கிற எண்ணத்தில் இருக்கிறார். அதே நேரம், மூன்று வருடங்களாக ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த பெண், திருமணம் செய்து கொள்ளலாம் என கேட்கிறார்.
அதற்கு நாயகன், திருமண வேண்டாம். லிவ் இன் உறவில் இருப்போம் என சொல்கிறார். இதை அந்த பெண் ஏற்க மறுக்கிறார்.

இந்தப் பின்னணியில் நிகில் திடீரென காணாமல் போகிறார்.

 அவர் கொலை செய்யப்பட்டாரா.. தப்பித்தாரா.. காதல் என்ன ஆனது என்பதே கதை.
படத்தை வித்தியாமான முறையில் அளித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் சாய் ரோஷன்.

கல்லூரி படிப்பு நிறைந்தவுடன் பொழுதுபோக்கிற்காக நண்பர்கள் மலைப்பிரதேசம் ஒன்றுக்குச் செல்கிறார்கள் என ஆரம்பிக்கிறது படம். அப்போது நாயகன் நிகில் காணாமல் போகிறார். நண்பர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.
காவல் துறை உதவி ஆய்வாளர், நண்பர்கள் அனைவரையும், தனித்தனியாகவும் கூட்டாகவும் விசாரிக்கிறார். விசாரணையின் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கிறார்கள். இதனால் காவல்துறை தடுமாறுகிறது. ஒரு கட்டத்தில் நாயகன் மற்றும் அவரது நண்பரின் சடலம் கிடைக்கிறது.
முதல் பாதியில் விசாரணை, மர்ம முடிச்சுகள் தொடர்கின்றன.. இரண்டாம் பாதியில் முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதால் ரசிக்க முடிகிறது. அதிலும் உச்சகட்ட காட்சியில் தொடர் கொலைகளை செய்யும் கொலையாளி கதாபாத்திரம் செய்யும் நடவடிக்கை சுவராசியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது.
இப்படி க்ரைம் த்ரில்லராக துவங்குவதால் படம் ரசிக்கவைக்கிறது.
நாயகன் ஷாரிக் ஹஸன் மோனிகா ரமேஷ் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர்.

விஷாலின் ஒளிப்பதிவும், கெவின் இசையும் படத்துக்கு பக்கபலமாக இருக்கின்றன.

வெறும் காதல், க்ரைம் த்ரில்லர் என்று இல்லாமல், போதை சூது விவகாரங்கள் எந்த அளவுக்கு இளைஞர்களை பாதிக்கிறது என்பதையும் சொல்லி இருப்பது சிறப்பு.

மதிப்பைண்3/5