![]()

எத்தனை முறை கேட்டாலும் எந்த வடிவத்தில் பார்த்தாலும் அழுக்காத இதிகாசம் ராமாயணம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கை, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் ராமாயண கதையை கார்ட்டூன் வடிவத்தில் தற்போது ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கும், கம்பர் எழுதிய ராமாயணத்திற்கும், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எழுதியராமாயணத்திற்குமே சில வேறுபாடுகள் உண்டு.
ஜப்பானைச் சேர்ந்த கலைஞர்கள் உருவாக்கிய இந்த ராமாயணம் திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவம் என்பதில் ஐயமில்லை.
தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட விதம் அருமையாக அமைந்திருக்கிறது . ராமர் வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில்குமார், சீதை வேடத்திற்கு குரல் கொடுத்திருக்கும் மகேஸ்வரி, ராவணன் வேடத்துக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன்குமார் ஆகியோர் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
குறிப்பாக அனிமேஷன் படங்களுக்கு குரல் உயிரோட்டமாக இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
வி. விஜயேந்திர பிரசாத் கிரியேட்டிவ் டைரக்டராக பணி புரிந்திருக்கும் இப்படத்தை அர்ஜுன் அகர்வால், சிபி கார்த்திக், தமோட்சு காசானோ ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
ஜானி எமமோட்டோ சீனியர் ப்ரொடியூசராக பொறுப்பேற்க, மேக்னா தல்வார், விதாத் ராமன், அமோன் சுகியிர, ஷிடிஸ் ஸ்ரீவத்ஸாசா ஆகியோர் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் ஆக பணிபுரிந்து இருக்கின்றனர்.
மொத்தத்தில் இந்தியர்களும் ஜப்பானியர்களும் இணைந்து பணியாற்றிய இந்த ராமாயணம் ஒரு வித்தியாசமான திரை அனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் ரசித்துப் பார்க்கலாம் இந்தப் படத்தை.
