Friday, May 1

வா வாத்தியார் _ விமர்சனம்

Loading

எம்ஜிஆரின் மிகத் தீவிர ரசிகரான ராஜ்கிரண், எம்ஜிஆர் இறந்த தினத்தன்று அதே நேரத்தில் பிறந்த பிறந்த தனது பேரன் கார்த்தியை வாத்தியாரின் அம்சமாகவே கருதி வளர்த்து வருகிறார்.
உழைக்காத பணத்தின் மீது ஆசைப்படக்கூடாது என்று சொல்லி கார்த்தி வாங்கிய லாட்டரிக்கு கிடைத்த பரிசை ஏற்க மறுத்து கிழித்து எறிந்து விடுகிறார் ராஜ்கிரண்.
இதனால் கோபமடையும் கார்த்தி எம்ஜிஆர் ஆவதற்குக்கு பதில் நம்பியாரைப்போல் ஆகி விடுகிறார்.
போலீஸ் வேலையில் சேர்ந்து மக்களுக்கு தொண்டு செய்து உதவ வேண்டும் என்று தாத்தா ராஜ்கிரண் சொன்னபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகும் கார்த்தி ஊழல் செய்ய ஆரம்பித்து விடுகிறார்.
இதனால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு அது செய்தித்தாளிலும் வருகிறது. அரசியல் புரோக்கரான சத்தியராஜின் மகளுக்கு விபத்து ஒன்றிலிருந்து தப்பிக்க உதவி செய்து அவர் மூலம் தனது சஸ்பென்ஷன் உத்தரவையும் ரத்து செய்ய வைக்கிறார் கார்த்தி.
கார்ப்பரேஷன் நிறுவனம் ஒன்று தனக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களை சுட்டுக் கொல்ல சத்யராஜ் உதவியுடன் திட்டமிடுகிறது.
இந்த விஷயத்தை மஞ்சள் முகம் என்ற குழு அம்பலப்படுத்துகிறது.
இதற்கிடையில் கார்த்தியின் உண்மை முகம் தாத்தாவுக்கு தெரிய வர அதிர்ச்சியிலேயே அவர் உயிரிழக்கிறார்.
தாத்தாவின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத கார்த்தி அவர் ஆசைப்பட்டபடியே நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாற முடிவு செய்கிறார். இதன்பிறகு தான் கதையின் சுவாரஸ்யமான திருப்பமே நிகழ்கிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரியாக மாறும் கார்த்தி மஞ்சள் முகமே குழுவுக்கு துணை நின்று, எவ்வாறு அநியாயக்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாறி வெற்றி பெறுகிறார் என்பதுதான் வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் சூப்பர் ஹீரோ பேண்டஸி படமாக உருவான ‘வா வாத்தியார்’ பாராட்டத்தக்க புதுமையான முயற்சியாக தமிழ் திரையில் மலர்ந்திருக்கிறது . ஆங்காங்கே வரும் எம்ஜிஆர் படப் பாடல்கள் அந்தக் கால ரசிகர்களை மகிழ்விக்கும். ‘ராஜாவின் பார்வை’ பாடலின் ரீமிக்ஸ் இசையும்,படமாக்கப்பட்ட விதமும் எம்ஜிஆரின் உடல் மொழியை அப்படியே பிரதிபலிப்பத கார்த்தி வெற்றி பெற்றிருக்கிறார் ஜார்ஜ் சி வில்லியம்சன் கலர்ஃபுல் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் இனிமை இன்ஸ்பெக்டர் கார்த்தியின் உடல் மொழி தேடப்படும் நபரின் உடல் மொழியைப் போல் இருப்பதாக காவல்துறையினர் சொல்வதை ஏற்க முடியவில்லை காரணம் போலீசார் தேடும் நபரின் உடல் மொழி வாத்தியாரின் உடல் மொழி ஆயிற்று இப்படி ஓரிரு குறைகள் இருந்தாலும் ரசிக்கத்தக்க புதுமையான காட்சிகள் நிரம்பிய பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது வா வாத்தியார்.

மதிப்பெண் 3.5/5.