![]()
வடம் விமர்சனம்
ஊர் பெரியவரான நரேன், அடிமாட்டுக்கு செல்லும் காளைகளை காப்பாற்றி தனது கோசாலையில் வளர்க்கிறார்.
மாடுகளை அதீத பிரியத்துடன் கவனித்துக் கொள்ளும் அவரது மகன் விமல், மஞ்சுவிரட்டுக்கான காளைகளையும் தயார் செய்து வருகிறார்.
ஒரு காளைக்கு பாண்டி முனி என்று பெயரிட்டு மஞ்சுவிரட்டுக்கான காளையாக தயார் செய்கிறார் விமல்.
சுற்று வட்டார ஊர்களில் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளிலெல்லாம் விமல் காளையே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.
ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைக்குச் சென்ற விமல், ஜாமீனில் வெளிவரும்போது அவரைக் கொல்ல ஒரு கூட்டம் முயற்சிக்கிறது.
இதற்கிடையில் நாயகி சனஷ்காஸ்ரீ தன்னுடைய காளைக்கும் விமல் பயிற்சி தந்து மஞ்சுவிரட்டுக்கு தயார் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவருடன் பழக ஆரம்பிக்கிறார்.
பின்னர் விமலை காதலிக்க தொடங்குகிறார்.
விமலும் சனஷ்காஸ்ரீயை காதலிக்க ஆரம்பிக்கிறார்.
ஒரு நாள் தனிமையில் காதலியை சந்திக்கச் செல்லும் விமல் வில்லனின் ஆட்களால் கத்தியால் குத்தப்படுகிறார்.
இந்த கொலை முயற்சியில், தான் காதலிக்கும் சனஷ்காவுக்கும் பங்கு இருக்கிறது என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போகிறார் விமல்.
வில்லனின் ஆட்கள் விமலை ஏன் கொல்ல முயல்கின்றனர்?
அதற்கு விமலின் காதலியே உதவுவது ஏன்? எனபதை சுவைபட விவரிக்கும் படம்தான் வடம்.
காட்சிகள் முன்னும் பின்னுமாக மாறி மாறி சென்று வந்தாலும் எந்த விதக் குழப்பமும் இல்லாமல் பார்வையாளர்கள் படத்துடன் ஒன்றிப்போக எடிட்டர் சாபு ஜோஸப்பின் நேர்த்தியான நான் லீனியர் முறை படத்தொகுப்புதான் காரணம்.
வட மஞ்சு விரட்டு காட்சிகளை மிக நேர்த்தியாக படம் பிடித்து நெஞ்சில் நிறைகிறார் ஒளிப்பதிவார் பிரசன்ன குமார்.
காளையுடன் பழகி விமல் அவற்றுக்கு பயிற்சி அளிக்கும் காட்சிகள் ரசமானவை.
அழகான தோற்றத்தில் இருக்கும் நாயகி சனஷ்காஸ்ரீ அருமையான நடிப்பையும் வெளிப்படுத்தத் தவறவில்லை.
நட்டி நட்ராஜ், முனீஷ்காந்த், நரேன், இந்து மதி, பால சரவணன், தீபா ஷங்கர் ஆகியோரும் நினைவில் நிற்கும்படியான வேடங்களில் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர்.
காளைகள் கிராமத்து மனிதர்கள் வாழ்வில் எந்த அளவுக்கு பின்னிப் பிணைந்தது என்பதை நேர்த்தியாகச் சொல்லியிருக்கும் வடம் படம் அனைவரையும் கவரும்.
மதிப்பெண்3/5


