Monday, April 20

காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

Loading

காதல் ரீசெட் ரிப்பீட் விமர்சனம்

ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் காதல் ரீசெட் ரிப்பீட் திரைப்படம் காதலை மற்றும் ஒரு புதிய கோணத்தில் சொல்ல முயற்சித்து இருக்கிறது.
ஆயினும் முக்கோண காதல் கதைகளை நிறையவே பார்த்து நாம் பழகி விட்டதால்.
சற்று அலுப்பு தட்டுகிறது மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில், மற்றும் ஒரு முக்கியமான வலுவான வேடத்தில் வருகிறார் எம் எஸ் பாஸ்கர். பணத்தை கொஞ்சம் கலகலப்பாக நகர்த்திச் செல்வதும் எம்.எஸ். பாஸ்கரன் தான்.
இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாண்ட் நாட்டிற்கு வரும் நாயகி ஜியா சங்கர், மனம் உடைந்த நிலையில் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்.
தக்க சமயத்தில் பார்த்துவிடும் நாயகன் மதும்கோஷ், ஜியாவை காப்பாற்றி விடுகிறார்.
இருவருக்கும் தங்க இடம் கொடுத்து ஜியா குணமடைய உதவி செய்கிறார் எம் எஸ் பாஸ்கர்.
மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஜியாவுக்கு பழைய நினைவுகள் எதுவும் மூளையில் பதியாமல் போய்விடுகிறது. தலையில் ஏற்படும் பலமான காயத்தின் காரணமாக மூளையால் புதிய எண்ணங்களை உருவாக்கிக் கொள்ளவும் பழையவற்றை தக்க வைத்துக் கொள்ளவோ முடியாத ஒருவகை நரம்பியல் பாதிப்பினால் சிரமப்படுகிறார் ஜியா.
காலையில் தூங்கி எழுந்ததுமே முதல் நாள் இரவு வரை நடந்த அனைத்தும் மறந்து போய்விடும்.
அன்று காலையில் துவங்கியதும் மதும்கோஷ் எம் எஸ் பாஸ்கர் சொல்லும் தகவல்களுடன்தான் அன்றைய பொழுது ஆரம்பமாகும்.
தினசரி பழைய விஷயங்களை இருவருமே ஜியாவுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.
சிறிய வயதில் இருந்தே நாயகி ஜியாவை பின் தொடர்ந்து வந்து, அவருக்கு தெரியாமலே ஒரு தலையாக அவரை காதலித்தவர்தான் மதன் கோஷ்.
ஜியா பணியாற்றிய இசைக்குழுவில் இருந்த அர்ஜுன் அசோகனைதான் உண்மையில் ஜியோ காதலித்தது.
ஆனால் வேறு ஒரு பெண்ணை அர்ஜுன் காதலிப்பதை தெரிந்துகொண்ட பிறகுதான் ஜியோ தற்கொலைக்கு முயற்சி செய்தது.
பழைய நினைவுகள் இல்லாத ஜியாவிடம் தான் காதலன் என்று சொல்லி நம்ப வைத்து மதும்கேஷ் குணப்படுத்த முயற்சி செய்ய, இப்போது அர்ஜுன் அசோகனும் ஜியா இருக்கும் இடத்தை அறிந்து வந்து தன்னைத்தான் உண்மையாக ஜியா காதலித்தார் என்று புரிய வைக்க முயற்சி செய்கிறார்.
பழைய நினைவுகளில் இல்லாத அர்ஜுனை ஜியாவின் மனம் நம்ப மறுக்கிறது.
ஜியாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை எல்லாம் காட்டி ஒரு வழியாக நம்ப வைக்க முயற்சிக்கிறார் அர்ஜுன்.
ஆனால் ஜியாவின் நினைவு ஆயுள் ஒரு நாள் மட்டும்தானே! அடுத்த நாள் காலை எல்லாவற்றையும் வழக்கம்போல் மறந்து விடுகிறார்… இப்படி சொல்லுகிறது இந்த முக்கோண காதல் கதை.
படத்தின் மிகப்பெரிய ஒரே ஆறுதல் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகள்தான்.
இதற்காக ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கு தனியாக ஒரு பாராட்டு சொல்லிவிடலாம்.
படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்பதால் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு இருந்தாலும் பாடல்களில் நம்மை நன்றாகவே ஏமாற்றி விட்டார் இசையமைப்பாளர்.
சற்று இடைவெளிக்குப்பின் மீண்டும் படமெடுக்க வந்திருக்கும் ஏ எல் விஜய் ஏன் இப்படி ஒரு சாதாரண கதையை தேர்வு செய்து, விறுவிறுப்பு இல்லாத திரைக்கதை அமைத்து மிகச் சாதாரண ஒரு படத்தை கொடுத்திருப்பது ஏன் என்று தான் புரியவில்லை.