Sunday, November 29

Blog

அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகும் சிவண்ணா படம்!

அதிரடி ஆக்சன் எண்டர்டெயினராக உருவாகும் சிவண்ணா படம்!

Uncategorized
KVN Productions மற்றும் Wadeyar Movies தயாரிப்பில், சிவண்ணா – வெங்கட் கோனங்கி (Venkat Konanki) – பவன் வடேயார் (Pavan Wadeyar) இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் 3 முதல் துவங்குகிறது ! ஹாட்ரிக் வெற்றியைத் தந்துள்ள சிவராஜ்குமார் (Shivarajkumar) தற்போது பல படங்களில் வெகு பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சிவண்ணாவின் மற்றொரு புதிய படம் செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளது. இந்தப் படத்தை சாண்டல்வுட்டில் ( Sandalwood) பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய, புகழ்பெற்ற இயக்குநர் பவன் வடேயார் ( Pavan Wadeyar) இயக்குகிறார். முன்னதாக இவர் புனித் ராஜ்குமாருக்காக ( Puneeth Rajkumar.) இரண்டு படங்களை இயக்கியுள்ளார். ஆனால் சிவராஜ்குமாரை இயக்குவது இதுவே முதல்முறை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி துவங்குகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் நடைபெற ...
உலகம் முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்ற “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா”!

உலகம் முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்ற “லோகா: சாப்டர் ஒன் – சந்திரா”!

News
துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது! துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன் - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் ...
யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !

யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !

News
"யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா ! MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”. வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்வில் பேசியவர்கள் தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் பேசுகிறோம் என்று படம் பார்க்...
சொட்ட சொட்ட நனையுது  _ விமர்சனம்

சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம்

Reviews
சொட்ட சொட்ட நனையுது _ விமர்சனம் இளம் வயதிலேயே தலையில் வழுக்கை விழுந்து மனப் புழுக்கத்தில் இருக்கும் இளைஞர்களை பற்றி நகைச்சுவையுடன் சொல்லும் படம் சொட்ட சொட்ட நனையுது. இளைஞன் நிஷாந்த் ரூசோவுக்கு தலையில் வழுக்கை இருப்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள பெண்கள் மறுத்து விடுகின்றனர். இந்த சூழ்நிலையில் எதிர் வீட்டில் வசிக்கும் வர்ஷினி அவரை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார். விடிந்தால் திருமணம் என்ற சூழ்நிலையில் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று மொபைல் மூலம் வர திருமணத்தை நிறுத்தி விடுகிறார் ரூசோ. பின்னர் சென்னைக்கு வந்து தலை முடி வளர்வதற்கான நவீன சிகிச்சையை மேற்கொண்டு, ஸ்டைலான ஹேர் ஸ்டைலுடன் ஊருக்கு திரும்புகிறார். பின்னர் பெற்றோர்கள் ஏற்பாடு செய்தபடி ஷாலினியுடன் அவருக்கு திருமணம்  நடக்க இருக்கிறது. இந்தத் திருமணத்திலும் சில பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து நிஷாந்த் ரூசோ திருமண...
ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகும் ‘போலீஸ் போலீஸ்!’

ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகும் ‘போலீஸ் போலீஸ்!’

News
ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது! *சென்னை, ஆகஸ்ட் 29, 2025:* ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸாக உருவாகி இருக்கும் 'போலீஸ் போலீஸ்' வெப்தொடர் வரும் செப்டம்பர் 19 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்ற இதன் முதல் புரோமோவில் மிர்ச்சி செந்தில் (ராஜா) மற்றும் ஜெயசீலன் தங்கவேல் (முரளி) இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது இடம் பெற்றிருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய புரோமோவில் ஷபானா ஷாஜகான் நேர்மையான வழக்கறிஞர் லலிதாம்பிகா கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கலகலப்பான இந்த புரோமோவில் லலிதாம்பிகா முரளியை திருடன் என நினைத்து விடுகிறார். முரளி பணி செய்யும் காவல் நிலையத்திற்கே அவரை அழைத்து செல்கிறார் லலிதாம்பிகா. அவர் வருத்...

குற்றம் புதிது _ விமர்சனம்

Reviews
குற்றம் புதிது _ விமர்சனம் போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனன் மகள் பிரீத்தி பணியை முடித்துவிட்டு இரவு வெகு தாமதமாக  தன் வீட்டுக்கு புறப்படுகிறாள். தன் வண்டி பிரச்சனையாகி விட்டதால் ஆட்டோவில் வர இருப்பதாக தந்தைக்கு போன் செய்து தகவலும் தெரிவிக்கிறார். ஆனால் ப்ரீத்தி வீடு சென்று சேரவில்லை. அடுத்த நாள் காலை ஓர் இளம் பெண் கொலையுண்டு கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைக்கிறது.  திடீரென தலை மறைவான ஆட்டோ டிரைவர் ஒருவரின் ஆட்டோவில் இருந்த ரத்த கறைகள் அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஆட்டோ டிரைவர் தங்கி இருந்த அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த உணவு டெலிவரி செய்யும் கதிரேசன் என்ற இளைஞன் தான் ஒரு கொலை செய்து விட்டதாக சொல்லி போலீசில் சரணடைய வருகிறான். விசாரணையின்போது தான் கொன்ற பெண் ப்ரீத்தியா  இல்லையா என்று தனக்குத் தெரியாது என்றும் புகைப்படத்தை பார்த்தால்தான் சொல்ல முடியும் என்றும் கூ...
ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி !

News
ரசிகை ராஜேஸ்வரியின் கனவை நனவாக்கிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி ! பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்புகள் பல நேரங்களில் தாற்காலிகமாகவே இருக்கும் இந்த உலகத்தில், மெகாஸ்டார் சிரஞ்சீவி மீண்டும் ஒருமுறை ஏன் கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் தனிச் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதை தனது கருணை மற்றும் அன்பால் நிரூபித்துள்ளார். சமீபத்தில், ஆந்திரப்பிரதேசம், ஆடோனி என்ற ஊரைச் சேர்ந்த அவரின் தீவிர ரசிகை ராஜேஸ்வரிக்காக சிரஞ்சீவி செய்த இதயப்பூர்வமான செயல், பலரையும் உருகச் செய்துள்ளது. தனது வாழ்நாள் கனவான சிரஞ்சீவியைச் சந்திக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், ராஜேஸ்வரி சைக்கிளில் ஏறி தொலைதூரப் பயணம் செய்து ஹைதராபாத்தை அடைந்தார். அத்தனை கஷ்டங்களையும், உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் தனது அன்பும், உறுதியும் அவரை அந்தப் பயணத்தில் முன்னோக்கி நகர்த்தியது. இந்த செய்தி சிரஞ்சீவியின் காதுகள...
கடுக்கா _ விமர்சனம்

கடுக்கா _ விமர்சனம்

Reviews
கடுக்கா _ விமர்சனம் கொங்கு பகுதியில் உள்ள கிராமம்தான் கதைக்களம். அங்கு வசிக்கும் எளிய மனிதர்கள் தான் படத்தின் பாத்திரங்கள். உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் நீட்டாக உடை உடுத்திக் கொண்டு வேலைக்கு செல்வது போல் புறப்பட்டு சென்று, பஸ் ஸ்டாப்பில் நின்று பெண்களை சைட் அடிப்பதையே வேலையாக கொண்டு இருக்கிறார் நாயகன் விஜய் கௌரிஷ். இந்த சூழலில் அவரது வீட்டுக்கு எதிர் வீட்டுக்கு புதிதாக குடி வருகிறார் நாயகி ஸ்மேகா.  ஸ்மேகாவிடம் கௌரிஷ் தன் காதல் வலையை வீச, வேண்டா வெறுப்பாக அவரும் நாயகனை காதலிக்க தொடங்குகிறார். அத்துடன் வேலைக்கு போய் சம்பாதிக்கும்படி அறிவுரையும் சொல்கிறார். சுவர் விளம்பரம் எழுதும் வேலையை செய்து வரும் கௌரிஷின்  நண்பன் ஆதர்ஷும் நாயகியை காதலிப்பதாக சொல்ல, அவருக்கும் காதலில் ஓகே சொல்கிறார் நாயகி. இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கம்பெனி வேலைக்கு செல்கின்றனர். ஒரு நாள் தாங்கள் இர...
வீர வணக்கம் _ விமர்சனம்

வீர வணக்கம் _ விமர்சனம்

Reviews
வீர வணக்கம் _ விமர்சனம் கிராமத்தில் வசிக்கும் பரத்,  மிகப்பெரிய செல்வந்தராக இருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்டு, பரிதவிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் துணையாக நிற்கிறார். இந்த எளிய மக்களுக்கு சரியான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அருகாமையில் உள்ள கேரளா மாநிலத்திற்கு அழைத்துச் சென்று அங்குள்ள கம்யூனிசப் போராளியும் பிரபல பாடகிமான பிகே மேதினி அம்மா அவர்களை சந்தித்து உரையாட வைக்கிறார். மிகக் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்த விதத்தை,  பி.கே. மேதினி அம்மா விவரிக்க, அது கதையாக திரையில் மலர்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய புரட்சி வீரரான பிகே கிருஷ்ணபிள்ளையின் தலைமறைவு வாழ்க்கை நெஞ்சைத் தொடும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுக்க சுதந்திரப் போ...
தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது !

தேஜா சஜ்ஜாவின் “மிராய்” பட டிரெய்லர் வெளியானது !

News
சூப்பர் ஹீரோ தேஜா சஜ்ஜா, ராக்கிங் ஸ்டார் மனோஜ் மஞ்சு, கார்த்திக் கட்டமனேனி, டி.ஜி. விஸ்வ பிரசாத், கீர்த்தி பிரசாத், பீப்பிள் மீடியா பேக்டரி வழங்கும், பான் இந்தியா படைப்பு “மிராய்” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியானது ! ஹனுமேன் படம் போன்ற மாபெரும் வெற்றியை தொடர்ந்து பெறும் அதிர்ஷ்டம் எல்லா நடிகர்களுக்கும் கிடைப்பதில்லை. ஆனால் “புதிய தலைமுறை சூப்பர் ஹீரோ” தேஜா சஜ்ஜா, விதியை வென்றவர் போலத் தெரிகிறார். ஹனுமேன் மூலம் ரசிகர்களை கவர்ந்த பிறகு, அவர் மீண்டும் “மிராய்” எனும் விறுவிறுப்பான பிரம்மாண்ட காவியத்துடன் திரையில் ஆதிக்கம் செலுத்தத் தயாராக இருக்கிறார். ஒளிப்பதிவாளராகப் புகழ்பெற்று, இப்போது இயக்குநராகியிருக்கும் கார்த்திக் கட்டமனேனி, மென்மை, மாயஜாலம் மற்றும் அதிரடி நிரம்பிய ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் கீர்த்தி பிரசாத் ஆகியோர் இந்த...
CLOSE
CLOSE