Monday, November 17

Reviews

கும்கி 2 _ விமர்சனம்

கும்கி 2 _ விமர்சனம்

Reviews
  கும்கி 2 _ விமர்சனம் மலை கிராமம் ஒன்றில் வசிக்கும் சிறுவன் பூமி, ஒரு நாள் பள்ளியில் இருந்து திரும்பும்போது பள்ளத்தில் சிக்கிக்கொண்ட யானை குட்டி ஒன்றை காப்பாற்றுகிறான். அப்போது முதல் அந்த யானைக் குட்டியுடன் சொந்த சகோதரனைப் போல் நெருக்கமாக பழகி வருகிறான். சாராயம் விற்கும் தாயார், மற்றும் தாயார் கணவனாக தன்னுடன் 'சேர்த்துக் கொண்ட நபர்' ஆகியோருடன் வசித்து வரும் பூமிக்கு ஒரே ஆறுதல் அந்த யானை குட்டி தான். யானை சற்றே வளர்ந்த பிறகு வியாபாரி ஒருவருக்கு அந்த யானையை விற்று விடுகிறார் பூமியின் தாயார். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வரும் பூமி, தன் செல்ல யானையைத் தேடி அலைந்து ஒரு வழியாக கண்டுபிடித்து விடுகிறார். ஆனால் இப்போது வேறு ஒரு பெரிய பிரச்னை முளைத்திருக்கிறது. அரசியல்வாதிகள் சிலர் பதவி சுகத்துக்கு ஆசைப்பட்டு அந்த யானையை பலி கொடுக்க திட்டமிடுகின்றனர். யானையை வி...

‘பாய்’ _ திரைப்பட விமர்சனம்

Reviews
'பாய்' _ திரைப்பட விமர்சனம் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா , தீரஜ் கெர்,ஓபிலி என். கிருஷ்ணா,சீமான் அப்பாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜித்தின் கே ரோஷன் இசை அமைத்துள்ளார்.படத்தொகுப்பு செய்துள்ளார் இத்ரிஸ். கே.ஆர்.எஸ் ஃபிலிம்டம் நிறுவனம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். 'தீவிரவாதத்துக்கு எந்த மதமும் பொறுப்பல்ல 'என்ற வரிகளுடன்தான் படம் தொடங்குகிறது. படம் தொடங்கி முதல் காட்சியிலேயே ஆகாஷ்வாணி செய்திகளில் குண்டு வெடிப்பு பற்றிய செய்தி இடம் பெறுகிறது. நாட்டின் அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்துவது, மக்களைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கி அதில் சுகம் காண்பது, வன்முறையில் சாகச உணர்வை அடைவது,பணத்துக்காக இந்தச் செயல்களைச் செய்வது என்ற நோக்கில் நாட...
தந்த்ரா _ விமர்சனம்

தந்த்ரா _ விமர்சனம்

Reviews
தந்த்ரா _ விமர்சனம் நட்சத்திரங்கள்: அன்பு மயில்சாமி, லொள்ளு சபா சுவாமிநாதன், சீதா தர்ஷன், சசிகுமார் சுப்பிரமணியம், மீனா, ஜாக், பிருந்தா கிருஷ்ணன் மற்றும் நரேஷ் தயாரிப்பு மற்றும் இயக்கம்: வேதமணி இணை தயாரிப்பு: சுஷ்மா வேதமணி ஒளிப்பதிவு: ஹேய்ஃபிஸ் எம். இஸ்மாயில் இசை: கணேஷ் சந்திரசேகர் கலை இயக்கம்: மணிமோகன் ராஜதுரை மக்கள் தொடர்பு: மணிகண்டன் காதல், திகில், சென்டிமென்ட் மூன்றும் சரியான விகிதத்தில் கலக்கப்பட்ட சுவையான திரைப்படமாக உருவாகி இருக்கிறது 'தந்த்ரா'. நிலழ்கள் ரவி பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் தனது மகன் அன்பு மயில்சாமியை மனைவியின் சகோதரர்களான லொள்ளு சபா சுவாமிநாதன் மற்றும் ஜாவா சுந்தரேசன் இருக்கும் ஊருக்கு அனுப்பி வைக்கிறார். அங்கேயும் மாமனுடன் சேர்ந்து மது அருந்தும் அன்பு மயில்சாமி ஒரு பெண்ணை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் காதலியை சூழ்ந்து இர...
வட்டக்கானல் _ விமர்சனம்

வட்டக்கானல் _ விமர்சனம்

Reviews
  கொடைக்கானலில் விளையும் ஒருவகை போதை காளான் பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் வரும் செய்திகளை படித்து இருக்கலாம். இந்த போதைக் காளானை வைத்து உருவான முழு நீள திரைப்படம் தான் வட்டக்கானல். இங்கு விளையும் போதை காளானை உள்நாட்டு சந்தையிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யும் போதை மாஃபியா ஆர் கே சுரேஷ். திருமணமே செய்து கொள்ளாத சுரேஷுக்கு மூன்று வளர்ப்பு மகன்கள். இளைஞர்களான இந்த மூவரும் தான் தந்தையின் போதை சாம்ராஜ்யம் வளர துணை நிற்கின்றனர். இதே போதை காளான் வியாபாரத்தில் மற்றொரு பெரும் புள்ளியான ஆடுகளம் நரேனை சுரேஷ் கொலை செய்து விடுகிறார். இதனால் அவரது மனைவி வித்யா பிரதீப் ஆர் கே சுரேஷை கொல்ல தருணம் பார்த்து காத்து நிற்கிறார். சிறுவயதில் காரில் தந்தையுடன் இருந்தபோது, மரம் விழுந்து தன் தந்தை இறந்ததை நேரடியாக பார்த்து அதிர்ச்சி அடைந்ததால் வாய் பேச்சு வர முடியாமல் போனவர் மீனாட்சி கோவ...
பரிசு _ விமர்சனம்

பரிசு _ விமர்சனம்

Reviews
பரிசு _ விமர்சனம் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஆடுகளம் நரேனின் மகள் ஜான்விகா தந்தையைப் போலவே  நாட்டுப் பற்று மிக்கவராகவும், ராணுவத்தில் சேர்ந்து தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர் ஆகவும் இருக்கிறார். இதற்காக தந்தையின் உதவியுடன் துப்பாக்கிச் சூடும் பயிற்சியில் இருந்து அனைத்து வகை பயிற்சிகளையும் பெற்று அதற்கு தகுதியானவராகவும் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். கல்லூரியில் படிக்கும் ஜான்விகாவுக்கு உடன் படிக்கும் மாணவர்கள் சிலர் காதல் வலை விரிக்க,  அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார் ஜான்விகா. வேளாண்மையில் ஈடுபாடு கொண்ட ஜான்விகாவை லேடி நம்மாழ்வார் என்று அவரது தோழிகளும் செல்லமாக கிண்டல் செய்வது உண்டு. ஒரு நாள் கார் ஒன்றின் மீது லாரி மோதி விட்டு செல்லும் 'ஹிட் அண்ட் ரன்'  சம்பவத்தை நேரில் பார்க்கும் ஜான்விகா, அடிபட்டு காரில் இருந்தவரை காப்பாற்றுகிறார். அத்துடன் விபத்த...
அதர்ஸ் _ விமர்சனம்

அதர்ஸ் _ விமர்சனம்

Reviews
சில படங்களில் தலைப்புக்கும், படத்தின் உள்ளடக்கத்திற்கும் சற்றும் தொடர்பு இருக்காது. ஆனால் மிகச் சில படங்கள் கதையுடன் அற்புதமாக பொருந்தி போகும். இந்த இரண்டாம் வகைப் படம்தான் அதர்ஸ். ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நள்ளிரவில் வரும் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகிறது. அதில் இருந்தவர்கள் மூன்று பெண்களும் ஒரு ஆணும் தீயில் எரிந்து மரணமடைகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஆதித்ய மாதவன் வருகிறார். விசாரணையின் போது ஒவ்வொரு முடிச்சும் அவிழ அவிழ குற்றவாளியை நெருங்க வேண்டிய போலீசாருக்கு, குற்றவாளியுடன் ஏற்படும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது. ஒவ்வொரு விசாரணையும் முட்டு சந்தில் முடிவதாக அதிகாரி ஆதித்ய மாதவனே ஆதங்கப்பட்டுக் கொள்கிறார். இது ஒரு புறம் இருக்க, மிகப்பெரிய தனியார் மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரிப்பில் ஏற்படும் மிகக் கொடுமையான குற்றத்தை அங்கு பணியாற்றும...
தேசிய தலைவர்_ விமர்சனம்

தேசிய தலைவர்_ விமர்சனம்

Reviews
தேசிய தலைவர்_ விமர்சனம் பொதுவாக வாழ்க்கை வரலாறு படங்கள் உருவாக்கப்படுவது தமிழில் குறைவுதான். அப்படி குறைவாக உருவாக்கப்பட்டாலும் மிகுந்த ஆராய்ச்சிக்கு பிறகு நேர்த்தியாகவே இப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான படம் முத்துராமலிங்க தேவர் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான தேசிய தலைவர். தேசியமும் தெய்வீகமும் தனது இரண்டு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவர் அதன்படியே தன் வாழ்க்கையும் அமைத்துக் கொண்டவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் சுபாஷ் சந்திர போஸ் அவர்களை பின்பற்றி அவருடன் இணைந்து பணியாற்றியதில் தொடங்கி, தனது சொத்துக்களை மக்களுக்கு பகிர்ந்து அளித்ததுவரை அவரது சாதனைகள் அனைத்தும் சிறப்பான வகையில் படத்தில் இடம்பெற்று இருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வேடத்தில் ஜே எம் பஷீர் வெகு சிறப்பாகவே நடித்திருக்கிறார். திருநீறு பூசிய முகத்துடன் அவருடைய ...
ஆர்யன்_ விமர்சனம்

ஆர்யன்_ விமர்சனம்

Reviews
ஆர்யன்_ விமர்சனம் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் நடிகர் ஒருவரை தொகுப்பாளர் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேட்டி எடுக்கிறார். அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து திடீரென செல்வராகவன் கையில் துப்பாக்கி யுடன் வெளியே வந்து எல்லோரையும் பிணையக் கைதிகளாக்கி மிரட்ட ஆரம்பிக்கிறார். அடுத்த ஐந்து நாட்கள் ஐந்து பேரை கொலை செய்ய இருப்பதாகவும்,  முடிந்தால் தடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, தன் கைத்துப்பாக்கியால் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார். இப்படி  ஓர் அசத்தலான காட்சியுடன் துவங்குகிறது ஆர்யன் திரைப்படம். செல்வராகவன் கூறியபடி பொதுத் தொலைபேசி பூத்தில் போன் பேசிக் கொண்டிருக்கும்போதே ராணுவ வீரர் மரணமான முறையில் கொல்லப்படுகிறார். காவல்துறை தன் பணியை தீவிரப்படுத்துகிறது. இளம் போலீஸ் அதிகாரியான விஷ்ணு விஷால் களம் இறக்கப்படுகிறார். காவல்துறையின் புலனாய்வு தீவிரமாக நடக்கும்போது ...
மெசேஞ்சர்_ விமர்சனம்

மெசேஞ்சர்_ விமர்சனம்

Reviews
மெசேஞ்சர்_ விமர்சனம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுக்கிறார். அப்போது அவரது முகநூல் மெசஞ்சரில் ஒரு தகவல் வருகிறது. தகவல் வருவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆனால் அந்த தகவலை அனுப்பியது இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து போன ஒரு பெண் என்பதுதான் ஸ்ரீராம் கார்த்திக் பேரதிர்ச்சியை தருகிறது. தொடர்ந்து பல செய்திகளை அனுப்பும் அந்தப் பெண், தான் பக்கத்தில் இருந்தவாறே நாயகன் ஸ்ரீராமை பார்த்து வருவதாகவும் சொல்கிறார். இதில் உள்ள மர்மத்தைத் தெரிந்து கொள்வதற்காக இறந்து போன அந்தப் பெண்ணின் ஊருக்கு சென்று அவரது குடும்பத்தாரிடம் விசாரணை செய்கிறார் நாயகன். விபத்தில் இறந்து போன அந்தப் பெண்ணின் உடலுடன் அவர் ஆசையாக வைத்திருந்த மொபைல் ஃபோனையும் சேர்த்து புதைத்து விட்டதாக அந்தப் பெண்ணின் தந்தை தெரிவிக்கிறார். ஆனால் உண்மையில் புதைக்கப்படாத அந்த போனை அவரது தோ...
கம்பி கட்ன கதை _ விமர்சனம்

கம்பி கட்ன கதை _ விமர்சனம்

Reviews
கம்பி கட்ன கதை _ விமர்சனம் இலவசமாக பலரையும் வெளிநாடு அனுப்ப இருப்பதாகக் கூறும் நட்டி நட்ராஜிடம் ஏகப்பட்ட கூட்டம் சேர்கிறது. அவர்களிடம் வெளிநாடு செல்ல மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும் என்று சொல்லி குறிப்பிட்ட டாக்டரிடம் அனுப்பி வைக்கிறார். மருத்துவ சான்றிதழில், அவர்களுக்கு இருக்கும் பல நோய்களை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் தகுதி இல்லை என்று சொல்லி எல்லோரையும் நிராகரிக்கிறார். கிடைக்கும் பணத்தை டாக்டருடன் பங்கிட்டு கொள்கிறார். இப்படி வித்தியாசமான, புதுமையான திருட்டுகளில் ஈடுபட்டாலும் எந்தவித போலீஸ் வழக்கிலும் நட்டி நட்ராஜ் சிக்கவில்லை. வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற assignment நட்டிக்கு கிடைக்கிறது. வழக்கம்போல் அதைதானே ஆட்டையை போட எண்ணி, வைரத்தை கைப்பற்றி கொண்டு வந்து ஓர் இடத்தில் புதைத்து வைக்கிறார். சற்ற...