Wednesday, November 18

Reviews

Thor love and Thunder – review

Reviews
Thor Love and Thunder is a fantastic adventure with an excellent cast, visually astounding special effects that give you the impression that you are actually there rather than merely viewing the landscapes, and lavish storyline (in a fabulously unique Taika Waititi way). Love and Thunder by Thor We get to experience love, action, and plenty of laughing, just as the title suggests. A full-on comedy infused with feelings, the much anticipated Thor-Jane romance, and some commendable deeds. Keep your preconceived notions and expectations at home because it will entertain you in different ways than the first. Enjoy the most authentic Thor narrative you'll ever find. This is Thor, the slightly silly but sincere warrior; this is not some hurting, cut your heart out person. You must watch the mo...
அன்யா டுட்டோரியல்ஸ் விமர்சனம்

அன்யா டுட்டோரியல்ஸ் விமர்சனம்

Reviews
அன்யா டுட்டோரியல்ஸ் விமர்சனம் ஒரு படத்தைத் துவக்குவது என்பது மகத்தான கலை. சடாரென எதையாவது காட்டி படத்தை ஆரம்பித்துவிடக்கூடாது. குறிப்பிட்ட பாத்திரத்துக்காக கேமிரா காத்திருக்க வேண்டும். அந்த பாத்திரம் வந்ததும் மளமளவென கதையை சொல்ல ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார் நியூயார்க் டைம்ஸ் இதழின் சினிமா விமர்சகர். அனன்யா டுட்டோரியல்ஸ் படத்தின் ஆரம்ப காடசி எப்படி தெரியுமா. இளம் பெண் ஒருத்தி ஓடுகிறாள் .....ஓடுகிறாள் ஓடிக்கொண்டே இருக்கிறாள் அநதப்பாதை முடிவே இல்லாமல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆஹா தயாரிப்பில் வந்திருக்கும் புதிய ஹாரர் தொடரின் கதை என்ன கொரோனா காலகட்டத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக நிவேதிதா தனது வீட்டை விட்டு வெளியேறி தனியாக வாழத் தொடங்குகிறார். கோவிட் ஊரடுங்கு அறிவிக்கப்படும் நேரமும் இதுதான். அவர் வேலைக்காக அன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்குகிறார். அவர...
ராக்கெட்டரி – விமர்சனம்

ராக்கெட்டரி – விமர்சனம்

Reviews
ராக்கெட்டரி விமர்சனம் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையப்படுத்தி வந்திருக்கும் அற்புதமான படைப்பு ராக்கெட்டரி. இந்தியாவை வல்லரசாக்கும் முயற்சியில் மகத்தான பங்களிப்பை செய்த விஞ்ஞானிக்கு தேசத் துரோகி என்ற பட்டம் வந்தது குறித்தும் அதிலிருந்து அவர் எவ்வாறு மீண்டார் என்பதும்தான் இப்படத்தின் அடிநாதம். நம்பி நாராயணன் தொலைக்காட்சிக்கு பேட்டியளிப்பதிலிருந்து அவரது வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள் காட்சியாக விரிவடைகிறது. இந்தியா இன்றுவரை பயன்படுத்தும் விகாஸ் இன்ஜின் எவ்வாறு உருவானது என்பது போன்ற விஷயங்களைக்கூட அலுப்பு தட்டாமல் சுவையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுதான் படத்தின் பலம் என்று சொல்லலாம். நம்பி நாராயணன் பார்த்தேயிராத மாலத்தீவைச் சேர்ந்த பெண் ஒருத்தியுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக பொய்கதை புனைந்து, அவருக்கு சேசத்துரோகி என்ற பட்டமும் கொடுத்து காவல்துறை விசாரணை...
அம்முச்சி 2 – விமர்சனம்

அம்முச்சி 2 – விமர்சனம்

Reviews
அம்முச்சி 2 - விமர்சனம் அம்மாவின் அம்மாவை அம்மாச்சி என்று சொல்வதுதான் பின்னர் பேச்சு வழக்கில் அம்முச்சி என்றாகி விட்டது. நாயகி மித்ராவுக்கு கல்லூரியில் சேர்ந்து படிப்பைத் தொடரவேண்டும் என்று ஆசை. ஆனால் அவளது குடிகாரத் தந்தையோ முரடனும் அடாவடிப் பேர்வழியுமான ஒருவனுக்கு மகளை கல்யாணம் செய்து வைக்க திட்டமிடுகிறார். நாயகன் அருண் நகரத்திலிருந்து விடுமுறைக்கு கிராமத்தில் இருக்கும் அம்முச்சி வீட்டுக்கு வரும்போது பார்த்துப் பழகிய மித்ராவுடன் காதல் கொள்கிறான். மித்ராவும் அருணைக் காதலித்தாலும், தான் கல்லூரியில் சேர்வதே காதலைக்காட்டிலும் முக்கியம் என்பதில் தெளிவாக இருக்கிறாள். மித்ரா அருண் காதலுக்கு உதவுவது அருணின் மாமன் மகனான சசிதான். அருணும் சசியும் கலந்து கட்டி அடிக்கும் கூத்தில் காதலர்களின் குடும்பங்களுக்கிடையே பிரச்னைகள் ஏற்பட்டு விஷயம் பஞ்சாயத்துக்கு வருகிறது. இறுதியில் ஐந்து போட்ட...
சுழல் தி வோர்டக்ஸ் விமர்சனம்

சுழல் தி வோர்டக்ஸ் விமர்சனம்

Reviews
சுழல் தி வோர்டக்ஸ் விமர்சனம் பொதுவாக ஒரு பிரபலமான நட்சத்திரத்தை வைத்துதான் தொலைக்காட்சித் தொடர்கள் உருவாக்கப்படும். ஆனால் ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன், மல்டி ஸ்டாரர் என்று சொல்லத்தக்க வகையில் அமேசான் ப்ரைம் வீடியோவில் வரும் தொடர் சுழல் என்று சொன்னால் மிகையாகாது. பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதிதா சதீஷ், ஹரீஷ் உத்தமன், குமரவேல் என்று பலரும் நடித்திருக்கும் சுழல், தொடரின் கதையை புஷ்கர் காயத்ரி எழுத,பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கியிருக்கின்றனர். சின்ன ஊர் ஒன்றில் இயங்கும் சிமெண்ட் தொழிற்சாலையின் தொழிலாளர்களின் தலைவர் பார்த்திபன். கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் பார்த்திபன் தலைமையில் போராடுகின்றனர். நிர்வாகத்துக்கு ஆதரவாக வரும் காவல் துறை அதிகாரிகள் ஸ்ரேயா ரெட்டி, மற்றும் கதிர் தொழிலாளர்களை லத்தி சார்ஜ் செய்கின்றனர். அன்றைய த...
வாய்தா – விமர்சனம்

வாய்தா – விமர்சனம்

Reviews
வாய்தா - விமர்சனம் சாமானியர்களுக்கு சட்டமும் நீதியும் எப்படி கைக்கெட்டாத தூரத்தில் இருக்கிறது என்பதையும், வலியவர்களுக்கு அது எப்படி வளைந்து கொடுக்கிறது என்பதையும் அழகாகவும் ஆழமாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் படம்தான் வாய்தா. சலவைத் தொழிலாளியான முதியவர் அப்புசாமி குடிசை ஒன்றில் துணிகளுக்கு இஸ்த்ரி போட்டுக் கொடுக்கும் பணியைச் செய்து அன்றாடப் பிழைப்பை அவஸ்த்தையுடன் நகர்த்தி வருகிறார். அவரது மகன் விக்னேஷ் தந்தை செய்யும் தொழிலைத் தவிர்த்து தன் தலைமுறையிலிருந்தாவது வேறு பணிக்கு மாற வேண்டும் என்ற எண்ணத்தில் விசைத்தறிக்கூடம் ஒன்றில் நெசவாளராகப் பணி செய்கிறான். வேலை பார்த்துக்கொண்டே மேல்சாதிப் பெண் ஒருத்தியையும் காதிலிக்கிறான். ஒரு நாள் அப்புசாமி தன் பணியைத் துவக்க இஸ்திரி பெட்டியில் நெருப்புக் கங்குகள் போடும்போது பைக்கில் வந்த ஓர் இளைஞன் அவர் மீது மோதி விடுகிறான். நெருப்...
போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்

போத்தனூர் தபால் நிலையம் – விமர்சனம்

Reviews
      போத்தனூர் தபால் நிலையம் - விமர்சனம் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் இன்றைய தலைமுறைக்கு தபால் நிலையம் குறித்தும், அது அந்தக்கால மக்கள் வாழ்வுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்திருந்தது என்பது குறித்தும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோயமுத்தூருக்கு அருகில் உள்ள போத்தனூர் என்ற சிறிய ஊரில் தொண்ணூறுகளில் இயங்கிய தபால் நிலையத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் போத்தனூர் தபால் நிலையம். நண்பர்களுடன் சேர்ந்து கம்ப்யூட்டர் தொடர்பான தொழில் ஒன்றைத் துவங்க வங்கியில் லோனுக்கு முயற்சி செய்யும் நாயகன் ப்ரவீணின் தந்தை போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகப் பணியாற்றுகிறார். தபால் நிலையத்தில் அன்றாடம் வரும் டெபாசிட் தொகை அதிகமாக இருந்தால் அதை தபால் நிலைய லாக்கரில் வைக்காமல் பாதுகாப்பாக அருகிலுள்ள ஸ்டேட் பாங்க் கிளையில் வைப்பது வழக்கம். ஒரு வெள்ள...
சேத்துமான் – விமர்சனம்

சேத்துமான் – விமர்சனம்

Reviews
சேத்துமான் - விமர்சனம் தயாரிப்பாளர் அவதாரமெடுத்து, தரமான படங்களை மட்டுமே தொடர்ந்து தரும் இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படைப்புதான் சேத்துமான். பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற கதையை அறிமுக இயக்குநர் தமிழ் அருமையாக திரைக்கதை அமைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார். பொட்டல்வெளிக் காட்டில் பூச்சியப்பன் என்ற பெரியவர் தன் பேரன் குமரேசனை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். "நம் வீடு மட்டும் ஊரிலிருந்து ஏன் இவ்வளவு தூரம் விலகியிருக்கிறது?" என்று தாத்தாவிடம் கேட்கிறான் பேரன். பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும், திரும்ப அழைத்து வரும்போதும், படிப்பின் அவசியத்தையும் அது மட்டுமே ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மை மீட்டு தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் என்பதையும் தாத்தா தன் பேரன் குமரேசனுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருக்கிறரா். குமரேசனின் தாய் தந்தை இருவருமே ஆதிக்க சக்தியின் அடங்காத ஜாதி வெறிக்கு...
விஷமக்காரன் – விமர்சனம்

விஷமக்காரன் – விமர்சனம்

Reviews
விஷமக்காரன் - விமர்சனம் வழக்கமான முக்கோண காதல் கதையை முற்றிலும் புதிய பாணியில் சொல்லியிருக்கும் படம் விஷமக்காரன். பொதுவாக முக்கோண காதல் கதைகளில் சம்பவங்கள், கதையை திருப்புமுனைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் என்று பலவும இருக்கும். ஆனால் இந்த விஷமக்காரனிடம் அதெல்லாம் இல்லை. சம்பந்தப்பட்ட மூன்று பேரும் பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.... வாழ்வில் ஏற்படும் குழப்பங்களுக்கு உளவியல் ரீதியில் தீர்வுகள் காண கவுன்சிலிங் தருபவர் டாக்டர் அக்னி. இவரும் தரங்கினி என்ற பெண்ணும் தீவிரமாகக் காதிலிக்கிறார்கள். ஜே.பி.மார்கன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து வெளிநாடு செல்லும் கனவில் இருக்கும் தரங்கினி ரெஃப்ரென்ஸுக்கு அக்னியின் தொடர்பு எண்ணைக் கொடுக்கிறாள். ஆனால் தரங்கனி தன்னைவிட்டுப் பிரிந்து வெளிநாட்டில் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற ஒரு பொஸஸிவ் நோக்கத்தில் அவள் இந்த வேலைய...
டாப் கன் – விமர்சனம்

டாப் கன் – விமர்சனம்

Reviews
  டாப் கன் - விமர்சனம் மிகச் சிறந்த விமானியாகத் திகழும் டாம் க்ரூஸ், விமானம் ஒட்டுவதில் முப்பது ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். ஆயினும் அவ்வப்போது தனது உயரதிகாரிகளுடன் அவருக்கு ஏற்படும் உரசல்களை அவரால் தவிர்க்க முடிவதில்லை. இந்த சூழ்நிலையில் உயிருக்கு துணிந்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய ஓர் ஆபத்தான பணியை செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒரு நாட்டில் மலைப் பள்ளத்தாக்கின் மறைவான பகுதியில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஆயுதக்கிடங்கை அழித்தொழிக்கும் ஆபத்தான பணிதான் அது. துணிச்சலும் திறமையும் மிக்க இளம் பைலட்டுகள் சிலரை இந்த ஆபரேஷனுக்காக அவர் பயிற்சியளித்து தயார் செய்கிறார். டாம் க்ரூஸின் இறந்தபோன நண்பர் ஒருவருடைய மகனான மைல்ஸ் டெல்லரும் இந்தக் குழுவில் இருக்கிறார். இவரால் டாம் குரூஸூடன் ஒத்துப் போக முடிவதில்லை. அவ்வப்போது சில உரசல்கள் வருகின...