சிங் கீதம் _ விமர்சனம்
சிங் கீதம் _ விமர்சனம்
சிங் கீதம்' – 94 வயதிலும் அடங்காத சிங்கீதத்தின் இசைப் புரட்சி!
இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்... இவரைத் தமிழும் தெலுங்கும் ஒரு 'மேஜிக் மேன்' என்றுதான் சொல்லும்.
தொண்ணூற்று நான்கு வயதிலும், எதற்கும் அஞ்சாமல், வழக்கமான சினிமா இலக்கணங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, ஒரு அதிரடி மியூசிக்கல் ஃபேன்டஸியைத் தந்து நம்மை வியக்க வைத்திருக்கிறார்.
கதைக்களம்: பாட்டுதான் பேச்சு!
குபேரபுரம் என்ற சுரங்கக் கிராமம். அங்குள்ள மக்கள் தங்கள் பேராசையால், ஊரின் கடைசி மரத்தை வேரோடு வெட்டிச் சாய்க்கிறார்கள்.
அந்த இயற்கையின் சாபமாக, பேசும் சக்தியை இழந்து, பாட்டு மூலமாகவே உரையாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
இந்த விசித்திரமான 'இசைச் சிறை'யிலிருந்து அவர்கள் எப்படி விடுபட்டார்கள்?
பேராசைக்கும் வாழ்வாதாரத்திற்கும் இடையிலான மோதலில் வெற்றி யாருக்கு? இதுதான் படத்தின் கதை.
...









