Thursday, November 12

Reviews

யசோதா – திரைப்பட விமர்சனம்

யசோதா – திரைப்பட விமர்சனம்

Reviews
யசோதா திரைப்பட விமர்சனம் கதையின் நாயகியாக சமந்தா கலக்கியிருக்கும் படம் என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம் யசோதா படத்தை. கர்பம் தரிப்பதில் சிரமம் உள்ள பெண்ணின் கருமுட்டையையும் ஆணின் விந்தணுவையும் ஒரு சோதனைக் குழாயில் வளர்த்து, பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றில் வைத்து வளரவிட்டு குழந்தை பெற வைக்கும் டெஸ்ட் ட்யூப் பேபி என்று ஆரம்பித்த விஞ்ஞான வளர்ச்சி, பின்னர் குழந்தை பெறத் தகுதியில்லாத உயிரணுக்களைக் கொண்ட கணவனுக்கு பதில் வேறு யாரோ ஒரு ஆணின் உயிரணுக்களை தானம் பெற்று குழந்தை பெறுவதாக பரிணாமம் பெற்றது. இப்போது ஒரு தம்பதியின் உயிரணுகளை தன் உடலில் ஏற்றுக்கொண்டு பத்து மாதம் சுமந்து குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகைத் தாய் முறை பிரபலமடைந்து வருகிறது. இப்படி யாருக்கோ வாடகைத் தாயாக இருந்து குழந்தை பெற்றுத் தர முன் வந்த யசோதா என்ற பெண்ணைப் பற்றிய படம்தான் இது. யசோதா வேடத்தில் மொத்த படத்தையும் ஒற்ற...
மிரள் திரைப்பட விமர்சனம்

மிரள் திரைப்பட விமர்சனம்

Reviews
மிரள் திரைப்பட விமர்சனம் அந்தக் காலத்தில் ஏவி.எம்., வாஹினி போன்ற நிறுவனங்கள் தயாரித்த படங்கள் என்றால் ஒரு எதிர்பார்ப்புடன் மக்கள் திரையரங்குக்கு வந்து திருப்தியுடன் திரும்பிச் செல்வார்கள். அதுபோல் இன்று ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரியை சொல்லலாம் போலிருக்கு. மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே என்று ஒவ்வொரு படத்தையும் வெவ்வேறு வகையில் வெகுஜன ரசனைக்கு ஏற்றாற்போல் தயாரித்து, தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது ஆக்ஸிஸ் பிலிம் ஃபேக்டரி. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் மிரள். படத்தின் துவக்கத்தில் பரத் மனைவி வாணி போஜன் மற்றும் மகனுன் நள்ளிரவில் காரில் பயணம் செய்கிறார். போன் அழைப்பு ஒன்றுக்கு பதிலளிக்க பரத் காரிலிருந்து இறங்கிச் செல்லும்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவன் வந்து அவரை அடித்து கொலை செய்கிறான். திடீரென தூக்கத்திலருந்த அலறியடித்தபடி விழித்தெழும் வாணி போஜன் இது கனவு என புரிந்து...
பனாரஸ் – திரை விமர்சனம்

பனாரஸ் – திரை விமர்சனம்

Reviews
பனாரஸ் - திரை விமர்சனம் ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது.... யுவதி ஒருத்தியிடம் வந்து ஓர் இளைஞன் நான் எதிர்காலத்திலிருந்து வருகிறேன். நீதான் என் மனைவி எனக் கூறுகிறான்.... டைம் லூப்பில் நான் இருக்கிறேன் என்று சொல்லி அவளைக் குழப்புகிறான். அடுத்ததாக நண்பர்கள் குழாமுடன் இருக்கும் அந்த இளைஞன், மனைவி என்று பொய் சொல்லி அந்தப் பெண்ணின் படுக்கையறைவரை சென்று,  தான் பந்தயத்தில் ஜெயித்து விட்டதாகக் கூறுகிறான். மேலும் அந்த யுவதியுடன் நெருக்கமாக தான் இருப்பதுபோன்ற சுயவிவரப் படத்தையும் எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவிட, கதை விறுவிறுவென ராக்கெட் வேகத்தில் பறக்க ஆரம்பிக்கிறது. இளைஞனால் பாதிக்கப்பட்ட யுவதி, தன் சித்தப்பா மற்றும் சித்தி இருக்கும் பானாரஸூக்கு சென்றுவிட, தன் தவறை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்க இளைஞனும் பனாரஸ் செல்கிறான். பனாரஸின் ஆட்டோ ஓட்டும் தமிழர் ஒருவர் இளைஞனுக்கு உதவ முன் ...
நித்தம் ஒரு வானம் – திரைவிமர்சனம்

நித்தம் ஒரு வானம் – திரைவிமர்சனம்

Reviews
நித்தம் ஒரு வானம் - திரைவிமர்சனம் இந்த அளவுக்கு பாசிடிவ்வாக செய்தி சொல்லும் படம் எதையும் சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. துன்பத்தில் துவண்டு போகாமல் வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொண்டு மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று சொல்லும் கருத்துள்ள படம்தான் நித்தம் ஒரு வானம். நாயகன் அசோக் செல்வன் எதிலும் பர்பெக்ட்டாக இருப்பவர். மற்றவர்களும் அப்படி பர்பெக்டாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். இந்த எதிர்பார்ப்பே அவருக்கு மற்றவர்களுடன் முரணை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்துக்கு சிகிச்சை பெற மருத்துவர் அபிராமியிடம் செல்கிறார் அசோக் செல்வன். அபிராமி உண்மைக் கதைகள் அடங்கிய இரண்டு டைரிகளை அசோக் செல்வனிடம் கொடுத்து படிக்கச் சொல்கிறார். அதைப் படிக்கும் அசோக் செல்வன் இரண்டு டைரியிலும் இறுதிப் பக்கங்கள் இல்லாததால் அபிராமியிடம் உண்மைக்கதையின் முடிவு குறித்...
படவேட்டு (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

படவேட்டு (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

Reviews
பொதுவாக மற்ற மொழிகளில் பார்க்க முடியாத கதைக்களம், பாத்திரப் படைப்பு, ஆகியவற்றை மலையாள மொழிப் படங்களில் தாராளமாகப் பார்க்கலாம் என்பதை 'படவேட்டு' மலையாளப் படம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது. வேலை வெட்டி எதவுமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் நிவின் பாலி. தடகள விளையாட்டு வீரரான நிவின் பாலி விபத்து ஒன்றி்ல் சிக்கி, உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்ட பிறகுதான் இவ்வாறு முடங்கிப்போய் வீட்டிலேயே இருக்கிறார். கோழி மாடு போன்றவற்றை ஜீவாதாரத்துக்காக வளர்த்து வருகிறார் நிவின் பாலியின் அத்தை. வீட்டில் இவர்களைத் தவிர வேறு யாருமில்லை. மாடுகள் தரும் பாலைக் கொண்டுபோய் பால் சொசைட்டியில் தருவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை நிவின் பாலி. இந்த சூழலில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தன் சொந்த லாபத்துக்காக மழைக்கு ஒழுகும் நிவின் பாலியின் பழைய வீட்டை புதுப்பித்துக் கொடுக்க முன் வருகிற...
சர்தார்  – திரை விமர்சனம்

சர்தார்  – திரை விமர்சனம்

Reviews
சர்தார்  - திரை விமர்சனம் திரைப்படம் என்பது பொழுது போக்கு மட்டுமல்ல... சிந்தனையைத் தூண்டும் நல்ல செய்திகளையும் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் படத்தை உருவாக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனை முதலில் பாராட்ட வேண்டும். வங்கிக் கணக்கில் நடக்கும் மோசடிகளை 'இரும்புத்திரை' வழியாகவும், கல்வி கடைச் சரக்கானதை 'ஹீரோ' படத்தின் மூலமும் வெளிச்சம் போட்டுக் காட்டிய மித்ரன் 'சர்தார்' படத்தில் குடிதண்ணீர் மூலம் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிடும் மாஃபியா கும்பல் குறித்த உரத்த சிந்தனையை முன்வைக்கிறார். பெட் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரை காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதால் வரும் நோய்களையும், அதன் பாதிப்புகளையும் படமாக்கியிருக்கும் காட்சிகளைப் பார்த்தால் பகீரென்று இருக்கிறது. சேதத்துரோகி என்று குற்றம் சாட்டப்பட்ட சர்தாரின் மகன் விஜய் போலீஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி, தமிழ் நாட்டின் போலீஸ் முகமாக ஊடகங்களி...
ஆற்றல் – திரைப்பட விமர்சனம்

ஆற்றல் – திரைப்பட விமர்சனம்

Reviews
ஆற்றல் - திரைப்பட விமர்சனம் பெரும்பாலும் மிருதுவான வேடங்களிலேயே வரும் விதார்த் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் ஆற்றல் காட்டியிருக்கும் படம்தான் ஆற்றல். ஓட்டுனர் இன்றி தானே இயங்கும் கார் ஒன்றை உருவாக்கும் முயற்சில் இருக்கிறார் விதார்த். இதற்காக அவருக்கு பத்து லட்சம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. விதார்த்தின் தந்தை சார்லி, மகனுக்காக பைனான்ஸியரிடம் பணம் கடன் வாங்கி வருகிறார். ஆனால் பணத்தை மகனிடம் கொடுப்பதற்கு முன்பே அவர் கொலை செய்யப்படுகிறார். பணமும் கொள்ளை போகிறது. இதே சமயம் நகரில் ஆங்காங்கே முகமூடி கொள்ளை சம்பவங்கள் தொடர் கதையாகி வருகின்றன. கொள்ளையடித்துவிட்டு கொலை செய்வது இந்த கொள்ளை கும்பலின் வாடிக்கை. ஒரு நாள் கண்ணெதிரே நடுரோட்டில் முதியவர் ஒருவரைக் கொன்று அவரிடமிருந்து முகமூடி கும்பல் பணத்தை கொள்ளையடிப்பதைப் பார்க்கிறார் விதார்த். கொள்ளையர்களைத் துரத்திச் சென்று பணத்தை மீட்டு...
ஷூ – திரைப்பட விமர்சனம்

ஷூ – திரைப்பட விமர்சனம்

Reviews
ஷூ - திரைப்பட விமர்சனம் 'மாநாடு', 'கணம்' ஆகியவற்றைத் தொடர்ந்து மற்றும் ஒரு டைம் மிஷின் கதை... நாயகன் திலீபன் டைம் மிஷின் ஒன்றை உருவாக்குகிறார். அதைத் தன் ஷூவில் பொருத்திக் கொண்டு போகும்போது போலீசார் அவரை மடக்குகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஷூவை அடர்ந்த புதர் பகுதியில் ஒளிய வைக்கிறார். போலீசாரிடமிருந்து தப்ப முயலும்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கி குண்டு அவரது கழுத்தில் பாய்கிறது. போலீசாரே ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளிக்கின்றனர். புதிரில் மறைத்து வைக்கப்பட்ட ஷூ ப்ரியா என்ற சிறுமியிடம் வந்து பின்னர் 'தமாஷ் ரெளடி' யோகிபாபுவிடம் வந்து சேர்கிறது. அந்த ஷூவை அணிந்த அடுத்த நிமிடமே யோகிபாபுவின் வாழ்க்கையே மாறிவிடுகிறது. தமாஷ் ரெளடியாக இருந்த யோகி பாபு சீரீியஸ் ரெளடியாகிறார். அவரது செல்வாக்கு உயர்ந்து ஏராளமான பணமும் வந்து சேர்கிறது. ப்ரியாவின் தந்தை செருப்பு தைக்கும் ...
காந்தாரா – விமர்சனம்

காந்தாரா – விமர்சனம்

Reviews
காந்தாரா - விமர்சனம் கே.ஜி.எஃப். படத்தைத் தயாரித்த ஹோம்பாலா பிலிம்ஸ் படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்லும் ரசிகர்களுக்கு, எதிர்பார்ப்புகளுக்கு மேல் அமைந்து வித்தியாசமான திரை அனுபவத்தைத் தரும் படம் காந்தாரா என்று ஒரே வரியில் விமர்சித்து விடலாம். இந்தியா முழுக்க பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் காந்தாரா கன்னடப் படத்தை டப்பிங் என்று சொல்ல முடியாத வகையில் மிக நேர்த்தியாக தரமான முறையில் தமிழ்ப்படுத்தி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கியிருப்பதும் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாகச் சொல்லலாம். நீண்ட காலத்துக்கு முன் ஆட்சி செய்த மன்னர் ஒருவர் மன நிம்மதியின்றி தவிக்கிறார். நிம்மதியைத் தேடிச் செல்லும் நெடிய பயணத்தில், மலைப்பகுதியில் இருக்கும் தெய்வத்தின் முன் மனம் லேசாகி  நிம்மதியை உணர்கிறார். இதன் காரணமாக மிகப்பெரிய நிலப்பரப்பை அந்த மலைவாழ் மக்களுக்கு தானமாகத் தருகிறார். ...
பொன்னியின் செல்வன் 1 – திரைப்பட விமர்சனம்

பொன்னியின் செல்வன் 1 – திரைப்பட விமர்சனம்

Reviews
  பல ஆண்டுகளுக்கு முன்பே படித்து மகிழ்ந்த கதை.. இப்போது பார்த்து மகிழ திரையில் மலர்ந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் கதையை படித்து ரசித்தவர்களும், படிக்காமல் விட்டவர்களுக்கும் பிடிக்கும்படி இந்த செலுலாயிட் கவிதையை செதுக்கியதுதான் மணிரத்னம் செய்திருக்கும் மேஜிக். சோழப் பேரரசர் சுந்தர சோழனின் மகன்கள் ஆதித்த கரிகாலன் மற்றும் அருண்மொழி வர்மன் இருவரும் இருவேறு போர் முனையில் இருக்க, அவருக்கு எதிராக சிலர் சதித்திட்டம் தீட்டுகின்றனர். சிற்றரசர்களை சோழ மாமன்னுக்கு எதிராக திசை திருப்பி, அப்போதைய இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு முடி சூடாமல் மதுராந்தககனை அரசராக்க திட்டமிடுகிறார் பெரிய பழுவேட்டரையர். தந்தைக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது என்பதை அறிந்த ஆதித்த கரிகாலன்,இது குறித்து செய்திகளை அறிந்து அதை சோழ மன்னரிடம் தெரிவிக்க தனக்கு நெருக்கமான வந்தியத் தேவனை அனுப்பி வைக்கிறார். ...